கட்டணப் பிரிப்பு
நண்பர்கள் அல்லது குழுக்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது, நீங்கள் எப்போதும் கட்டணத்தைப் பிரித்துக்கொள்ளலாம். பணமாக மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்காக அதைக் கணக்கிட்டு பில்லை அனுப்புமாறு ஆப்பிடம் சொன்னால் போதும்.
ஏன் இது உதவியாக இருக்கும்?
நண்பர்களுடன் பயணம் செய்க
அதிகமானவர்கள் பயணித்தால் ஆனந்தமே! உங்களுடைய நண்பர்களை பிக்அப் செய்து அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரொக்கத்தைத் தவிர்த்திடுக
பயணத்திற்கானக் கட்டணத்தை நேரடியாக ஆப்பின் மூலம் பிரித்துக் கொள்லலாம். இது சுலபமானது, குழப்பமில்லாதது.
இது எப்படிச் செயல்படுகிறது?
உங்களுடைய பயணத்திற்குக் கோருதல்
தட்டி ஆப்பை திறந்து, வழக்கம் போலப் பயணத்திற்குக் கோரவும்.
கவனத்திற்கு: கட்டணப் பிரிப்பு அம்சத்தை பயன்படுத்த, ஆப்பின் சமீபத்திய பதிப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
பிரித்துக் கொள்ளுங்கள்
கோரியதும், உங்கள் ஆப்பின் அடிப்பகுதியில் இருந்து ஸ்வைப் செய்து, நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறையைத் தட்டவும், பின்னர் கட்டணப் பிரிப்பு என்பதைத் தட்டவும்.
உங்களுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
பிற பயணிகளின் பெயர்கள் அல்லது தொலைபேசி எண்களை உள்ளிடவும். நீங்கள் சேர்க்கிற அனைவருக்கும், உங்களுடைய அழைப்பை அக்செப்ட் செய்யுமாறு கோருகின்ற அறிவிப்பு அனுப்பப்படுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- கட்டணம் பயணிகளுக்கு இடையே சமமாகப் பிரிக்கப்படுகிறதா?
ஆம். பிரிப்புக்கான அழைப்பை அக்செப்ட் செய்கிற பயணிகளுக்கு இடையே பயணத்திற்கான கட்டணம் சமமாகப் பிரிக்கப்படுகிறது.
- கூடுதல் கட்டணம் உள்ளதா?
Down Small ஆம். பிரிக்கும்போது, பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 25 செண்ட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்களுடைய ரசீது, அனைத்துப் பயணிகளுக்குமான மொத்த பிரிக்கப்பட்ட கட்டணத்தைக் காண்பிக்கும்.
- ஒரு பயணி கட்டணப் பிரிப்புக்கான அழைப்பை அக்செப்ட் செய்யவில்லை என்றால் என்ன செய்வது?
Down Small ஒரு பயணி கட்டணத்தைப் பிரிப்பதை அக்செப்ட் செய்யவில்லை என்றால் அல்லது செல்லுபடியாகிற கட்டணம் செலுத்தும் முறை இல்லை என்றால், உங்கள் கட்டணமும் அவருடைய கட்டணமும் உங்களிடமே வசூலிக்கப்படும்.
- நான் இன்னும் Apple Payவைப் பயன்படுத்தலாமா?
Down Small நீங்கள் Apple Payவைப் பயன்படுத்துகிறீர்கள், அதேசமயம் பயணக் கட்டணத்தைப் பிரிக்க விரும்புகிறீர்கள் எனில், மற்றொரு கட்டண முறையை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். உங்களுடைய அடுத்த பயணத்தில் மீண்டும் Apple Payவுக்கு மாறலாம்.
உங்கள் பயணத்தின் மூலம் பலவற்றைப் பெறுங்கள்
உங்கள் பயணத்திற்குப் பிறகு
பதிவுசெய்தல்
ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணக்கை அமைக்கவும், இதனால் அடுத்த முறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தயாராக இருப்பீர்கள்.
பகிர்க
Uber-ஐப் பயன்படுத்த நண்பர்களை அழையுங்கள், அவர்களுடைய முதல் பயணத்தில் தள்ளுபடிச் சலுகையைப் பெறுவார்கள்.
உங்கள் நகரம் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் விருப்பங்கள் மாறுபடும்.
'ஒரு பயணி கட்டணத்தைப் பிரிப்பதை அக்சப்ட் செய்யவில்லை என்றால் அல்லது செல்லுபடியாகிற கட்டணம் செலுத்தும் முறை இல்லை என்றால், உங்கள் கட்டணமும் அவருடைய கட்டணமும் உங்களிடமே வசூலிக்கப்படும். உங்களுடைய கணக்குடில் செயலில் உள்ள ஊக்கத்தொகைகள் உங்கள் கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும்.அனைத்து ஊபர் விருப்பங்களுக்கும், பிரிக்கப்பட்ட கட்டணம் கிடைக்காமல் போகலாம். பயணம் முடிந்தபின் எங்களால் ஆப்பில் கட்டணத்தைப் பிரிக்க முடியாது என்பதை நினைவில் கொள்க.
நிறுவனம்