முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பாதுகாப்பிற்கான எங்கள் உறுதியளிப்பு

நீங்கள் சுதந்திரமாக நகர்வதையும் முடிந்தவரை உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதையும் உங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்களுடனும் இடங்களுடனும் இணைந்திருப்பதையும் நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் நாங்கள், தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதில் இருந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது வரை பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறோம்.

COVID-19-இன் போது ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுகிறோம்

கொரோனா வைரஸ் (COVID-19) சூழ்நிலையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எங்கள் இயங்குதளத்தை நம்பியிருப்பவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

 • எங்களின் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலை

  எங்கள் சமூகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் போது, நீங்கள் Uber உடன் பாதுகாப்பாகப் பயணிப்பதாக உணர வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் எங்களின் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலையை அறிமுகப்படுத்துகிறோம். Uber-இன் புதுமையான தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற, பொறுப்பைப் பகிர்வதை ஊக்குவிக்கின்ற, சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை உள்ளடக்குகின்ற இந்தப் புதிய நடவடிக்கைகள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 • இதில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்

  Uber-ஐப் பயன்படுத்தும்போது அனைத்துப் பயணிகளும் ஓட்டுநர்களும் கட்டாயம் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

 • முகமூடியைச் சரிபார்த்தல்

  ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு அவர்களைப் புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.

 • ஓட்டுநர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொருட்கள்

  ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களுக்கு முகமூடிகள், கிருமிநாசினிகள் மற்றும் கையுறைகள் போன்ற சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொருட்களை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

 • நிபுணர் தலைமையிலான வழிகாட்டுதல்

  பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

 • பயணப் பாதுகாப்பு குறித்த பின்னூட்டம்

  ‘ஓட்டுநர் முகமூடி அல்லது மாஸ்க் அணியவில்லை’ என்பது போன்ற ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறித்த பின்னூட்டத்தை இப்போது நீங்கள் தெரிவிக்க முடியும். இது எங்களை மேம்படுத்துவதற்கும் அனைவரையும் பொறுப்புடையவர்களாக மாற்றுவதற்கும் உதவுகிறது.

1/6

பாதுகாப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என உஙகள் அனுபவத்தின் படி தெரிவிக்கவும்

ஆப்பினில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்

நீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயண விவரங்களைப் பகிரலாம். உங்கள் பயணத்தின் போது, அதைக் கண்காணிக்கலாம். எங்கள் தொழில்நுட்பம் உங்கள் மனதிற்கு நிம்மதியை உங்கள் விரல்நுனிகளில் அளிக்கிறது.

ஒரு சமதர்மச் சமூகம்

இலட்சக்கணக்கான பயணிகளும் ஓட்டுனர்களும் சமூக வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பைப் பகிர்ந்து கொண்டு, சரியான செயல்களைச் செய்ய ஒவ்வொருவரையும் பொறுப்பாக்குகிறார்கள்.

ஒவ்வொரு தருணத்திலும் உதவி

சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஒரு குழு 24/7மும் இருக்கிறது. ஏதேனும் கேள்விகளோ அல்லது பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் பகலோ இரவோ ஆப்பின் மூலம் அவர்களை தொடர்புகொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான பயணங்களைக் கட்டமைத்தல்

ஓட்டுநரின் பாதுகாப்பு

ஏதேனும் கேள்விகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் 24/7 உதவியை அழைக்கலாம். நீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயணத்தைப் பகிரலாம். எங்களுடைய கவனம் உங்களுடைய பாதுகாப்பில் உள்ளது, ஆதலால் நீங்கள் வாய்ப்பு இருக்கும் எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பயணியின் பாதுகாப்பு

இலட்சக்கணக்கான பயணங்கள் தினமும் கோரப்படுகின்றன. ஒவ்வொரு பயணிக்கும் ஆப்-இன் உள்ளே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கான அணுகல் உள்ளது. உங்களுக்குத் தேவையெனில் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு சேவைக் குழு உண்டு.

“ஒவ்வொரு நாளும், உலகம் முழுதும் நகரங்களில் பல லட்சக்கணக்கான மக்களை நமது தொழில்நுட்பம் கார்களின் மூலம் கொண்டு சேர்க்கிறது. மக்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு, நாங்கள் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.”

டாரா கோஸ்சுராவ்சஹி, Uber தலைமை நிர்வாகி

மாற்றத்தை ஏற்படுத்த பார்ட்னர் ஆகுங்கள்

பாதுகாப்பிற்கான எங்களது உறுதியளிப்பு உங்கள் பயணத்தை விட முக்கியமானது. நாங்கள் மக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முதல் வன்முறைத் தடுப்பு இயக்கங்கள் வரை உள்ள முன்னணி நிபுணர்களுடன் சேர்ந்து சாலைகள் மற்றும் நகரங்களைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவுகிறோம்.

ஓட்டுநரின் பாதுகாப்பு

நீங்கள் விரும்பும் இடத்திற்கு விரும்பும் நேரத்தில் தைரியமாக ஓட்டலாம்.

பயணியின் பாதுகாப்பு

எப்பொழுது வேண்டுமானாலும் வசதியாகச் செல்லலாம்.

*Certain requirements and features vary by region and may be unavailable.