Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

எங்களைப் பற்றி

உலகம் சிறப்பாக பயணம் செய்யும் வழியை மீண்டும் கற்பனை செய்கிறோம்

பயணம் எங்கள் ஆற்றல் அதுவே எங்கள் உயிர். எங்கள் நாடிநரம்புகள் வழியாக ஓடும் செந்நீர். அதுதான் அனுதினமும் எங்களைத் தட்டி எழுப்புகிறது. பயணத்தை மேலும் சிறப்பாக்குவது எப்படி என்று எங்களைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது. உங்களுக்காக. நீங்கள் செல்ல விரும்பும் அனைத்து இடங்களுக்கும். நீங்கள் பெற விரும்பும் அனைத்து பொருட்களுக்கும். நீங்கள் சம்பாதிக்க விரும்பும் அனைத்து வழிகளுக்கும். உலகம் முழுவதும். நிகழ் நேரத்தில். நிகழ்காலத்தின் நம்பமுடியாத வேகத்தில்.

  • நாங்கள் Uber. செயல்வீரர்கள். மக்கள் எங்கும் செல்ல, எதையும் பெற, தங்களுக்கு விருப்பமான வழியில் சம்பாதிக்க, துடிப்புடன் உதவிச் சேவை செய்பவர்கள். பயணம் எங்களால் ஆற்றல் பெறுகிறது. அதுவே எங்கள் உயிர்நாடி. எங்கள் நாடிநரம்புகள் வழியாக ஓடும் செந்நீர். அதுதான் அனுதினமும் எங்களைத் தட்டி எழுப்புகிறது. பயணத்தை மேலும் சிறப்பாக்குவது எப்படி என்று எங்களைத் தொடர்ந்து கற்பனை செய்யத் தூண்டுகிறது. உங்களுக்காக. நீங்கள் செல்ல விரும்பும் அனைத்து இடங்களுக்கும். நீங்கள் பெற விரும்பும் அனைத்து பொருட்களுக்கும். நீங்கள் சம்பாதிக்க விரும்பும் அனைத்து வழிகளுக்கும். உலகம் முழுவதும். நிகழ் நேரத்தில். இப்போது நம்பமுடியாத வேகத்தில்.

    'ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், எவரும் எங்கும் பயணம் செய்யலாம்' என்ற வசதியை வழங்க நிஜ உலகையும் டிஜிட்டல் உலகையும் இணைக்கும் தொழில்நுட்ப நிறுவனம் நாங்கள். ஏனென்றால், பயண வசதி அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்து சம்பாதிக்கலாம். அதேவேளை பூமியின் நலனையும் காக்கவேண்டும். பாலினம், இனம், மதம் அல்லது பாலியல் நோக்குநிலை என எதையும் பொருட்படுத்தாமல், சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பயணிப்பதற்கான உங்கள் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். நிச்சயமாக, எப்போதும் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. ஆனால் தோல்விகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை, ஏனென்றால் அது எங்களை மென்மேலும் மேம்படுத்துகிறது, கூர்மையாக்குகிறது, வலுப்படுத்துகிறது. மேலும் இது எங்கள் வாடிக்கையாளர்கள், எங்கள் தளத்தின் மூலம் சம்பாதிப்பவர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் அற்புதமான பல்வேறு சர்வதேசக் கூட்டாளர்களின் ஆதரவால் சரியானதைச் செய்ய இது எங்களை இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் வைக்கிறது.

    Uber பற்றிய யோசனை 2008 ஆம் ஆண்டு பாரிஸ் நகரின் ஒரு பனிபொழியும் இரவில் உதித்தது, அன்று முதல் எங்கள் DNA இன் புதுமையான சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. நெகிழ்வான சம்பாத்தியம் மற்றும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை தொடர்ந்து விரிவடையும் வழிகளில் வழங்கும் உலகளாவிய தளமாக நாங்கள் வளர்ந்துள்ளோம். நான்கு சக்கர வாகனங்களில் தொடங்கி, இரண்டு சக்கர வாகனங்களையும் இணைத்து, இப்போது 18-சக்கர சரக்குப் போக்குவரத்துச் சேவைகளை எட்டியுள்ளோம். உணவுப் பார்சல்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் முதல், பிரெஸ்கிரிப்ஷன் மருந்துகள் வரை உங்களுக்கு எந்த நேரத்தில் எது தேவைப்பட்டாலும் அதை வழங்கத் தயாராக உள்ளோம். ஓட்டுநர்களுக்கான பேக்ரௌண்ட் சரிபார்ப்பு முதல், நிகழ் நேரச் சரிபார்ப்பு வரை, அனுதினமும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். Uber இல், தொடர்ச்சியான கற்பனைக்கான நாட்டம் ஒருபோதும் முடிவதில்லை, ஒருபோதும் நிறுத்தப்படாது, மேலும் அது எப்போதுமே ஒரு தொடக்கமாகவே இருக்கும்.

எங்கள் CEO இன் கடிதம்

எங்கள் உலகளாவிய தளத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் முன்னேற உதவும் தொழில்நுட்பத்தை வழங்கிட எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பைப் பற்றி படிக்கவும்.

நிலைக்கும் தன்மை

பொதுப் போக்குவரத்து அல்லது சிறு பயணச் சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் 100% பயணங்களும் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களில் மேற்கொள்ளப்படும் வகையில் 2040ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரப் பயன்பாடு கொண்ட, உமிழ்வு எதுவும் இல்லாத வாகனங்களைக் கொண்டிருக்கும் தளமாக மாற Uber உறுதிபூண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தில் உள்ள சவாலை அதிக முனைப்புடன் சமாளிப்பது, உலகிலேயே பெரும் பயணச் சேவைத் தளமாக உள்ள எங்களின் பொறுப்பாகும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பயணம் செய்வதற்கு இன்னும் அதிக வழிகளை வழங்குதல், ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவுதல், வெளிப்படைத்தன்மையை முன்னுரிமைப்படுத்துதல், முற்றிலும் தூய்மையான ஆற்றல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் NGOகள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டிணைதல் ஆகியவற்றின் மூலம் இதை நாங்கள் செய்வோம்.

பயணங்களும் இன்னும் பல சேவைகளும்

பயணிகளுக்கு புள்ளி A இலிருந்து புள்ளி B வரை செல்வதற்கான பயணத்தை வழங்குவதுடன், மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் விரைவாக உணவை ஆர்டர் செய்யவும், சுகாதாரப் பாதுகாப்பிற்கான தடைகளை நீக்கவும், சரக்கு முன்பதிவுக்கான புதிய தீர்வுகளை உருவாக்கவும் உதவுவதோடு தடையற்ற பணியாளர் பயண அனுபவத்தை வழங்க நிறுவனங்களுக்கு உதவியும் செய்து வருகிறோம். மேலும் ஓட்டுநர்களும் கூரியர்களும் சம்பாதிக்கவும் எப்போதும் உதவுகிறோம்.

உங்கள் பாதுகாப்பே எங்களின் உந்துதல்

நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் சரி, பயணியாக இருந்தாலும் சரி, உங்கள் பாதுகாப்பு இன்றியமையாதது. எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் உறுதி கொண்டுள்ளோம், மேலும் தொழில்நுட்பமே எங்கள் அணுகுமுறையின் மைய ஆதாரமாக உள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கும் அனைவரும் பயணிப்பதை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டிணைந்து, புதிய தொழில்நுட்பங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம்.

நிறுவனத்தின் தகவல்

Uber-ஐ வழிநடத்துவது யார்

பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான விடயங்களைச் செய்ய வலியுறுத்துகின்ற ஒரு கலாச்சாரத்தை Uber-இல் கட்டமைத்து வருகிறோம். வழிநடத்தும் குழுவினரைப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

பன்முகத்தன்மையைச் சரியாகப் பெறுதல்

நாங்கள் சேவை செய்யும் நகரங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு பணியிடத்தை உருவாக்குவதே எங்கள் இலக்காகும்- அங்கே ஒவ்வொருவரும் அவர்கள் சுயமரியாதையுடன் வேலை செய்ய முடியும் மேலும் அந்த நம்பகத்தன்மையைதான் எங்கள் பலமாக கருதுகிறோம். எல்லாப் பின்னணிகளில் இருந்தும் மக்களை உள்ளடக்கிய ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம், பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான ஒரு சிறந்த நிறுவனமாக Uber-ஐ நாங்கள்உருவாக்குவோம்.

நேர்மையுடன் செயல்படுதல்

நிறுவனத்திற்குள் மிக உயர்ந்த நிலையிலான நேர்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை Uber-இன் நெறிமுறைகள் & இணக்கத் திட்ட சாசனம் கோடிட்டுக் காட்டுகிறது. நெறிமுறையான கலாச்சாரத்திற்கு வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது; எங்களின் நேர்மையான உதவி மையம் மற்றும் எளிதில் எய்தக்கூடிய மற்றும் பயனுள்ள இணக்க முயற்சிகளின் தொகுப்பு மூலம் இதை நாங்கள் சாதிக்கிறோம்.

மக்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் பிராண்டையும் இருக்கச் செய்யுங்கள்

Uber மூலம் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தி அதைக் கோடிக்கணக்கான மக்களுக்குக் கொண்டு செல்லுங்கள்.

சமீபத்திய தகவல்களை அறிந்திருங்கள்

செய்தி அறை

பார்ட்னர்ஷிப் பற்றிய அறிவிப்புகள், ஆப் புதுப்பிப்புகள், நிறுவன முன்முயற்சிகள், உங்கள் அருகில் மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் அறிவிப்புகளைப் பெறுங்கள்.

வலைப்பதிவு

சுற்றிப் பார்ப்பதற்கான புதிய இடங்களைக் கண்டறியலாம், அத்துடன் Uber தயாரிப்புகள், பார்ட்னர்ஷிப் மற்றும் பலவற்றை அறியலாம்.

முதலீட்டாளர் தொடர்புகள்

நிதி அறிக்கைகளைப் பதிவிறக்கலாம், அடுத்த காலாண்டுக்கான திட்டங்களைக் காணலாம் மேலும் எங்கள் பெருநிறுவனப் பொறுப்புடைமை தொடர்பான முன்முயற்சிகளைப் படிக்கலாம்.

எங்களுடன் சேர்ந்து புதுமைகளை உருவாக்குங்கள்

For all offers from our partners, drivers must have been cleared to drive with Uber and be active on the platform. Prices and discounts are subject to change or withdrawal at any time and without notice, and may be subject to other restrictions set by the partner. Please visit the partner’s website for a full description of the terms and conditions applicable to your rental, vehicle purchase, product, or service, including whether taxes, gas, and other applicable fees are included or excluded. Uber is not responsible for the products or services offered by other companies, or for the terms and conditions (including financial terms) under which those products and services are offered.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو