Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பன்முகத்தன்மையும் சேர்த்துக்கொள்தலும்

2020 ஆம் ஆண்டு என்பது ஒரு மிக முக்கியமான தருணம். இன அநீதி மற்றும் COVID-19 தொற்றுநோயால் சவாலுக்குள்ளானதால், உலகளவில் கூட்டாக உணர்வுப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான தேவை ஏற்பட்டது. Uber-இல், எங்களது தளத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நிலைமையை நாங்கள் எதிர்கொண்டோம், இனவெறி எதிர்ப்பு நிறுவனம் என உள்ளகத்தே செயல்பட்டும், வெளியில் உலகெங்கிலும் உள்ள எங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டோம்.

2020 ஆம் ஆண்டுக்கான எங்களது ‘மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கையில்’ எங்கள் பணியாளர்களைப் பற்றிய பன்முகத்தன்மை தரவு இடம் பெற்றுள்ளது. மேலும், இது சிறந்த பிரதிநிதித்துவத்திற்கும், தங்களுக்கும் சொந்தமானது என்ற ஒரு மேம்பட்ட உணர்விற்கும் வழிவகுக்கும்படியான நீண்டகால முறையான மாற்றங்களைப் பற்றியது. நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் முதன்மையாக, இன மற்றும் சமூகச் சமத்துவத்துடன் முன்னேறுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு இதுவாகும்.

Culture and belonging

COVID-19 நாம் வாழும் முறை, வேலை செய்யும் முறை மற்றும் இயங்கும், செல்லும் முறையை மொத்தமாக மாற்றிவிட்டது. எங்கள் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து பணி செய்வதற்குப் பதிலாக, வீட்டிலிருந்து வேலை செய்யும்படியான மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதால், சொந்தமான கலாச்சாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதற்கான புதிய பரிசீலனைகள் தோன்றின. பெற்றோர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் இணக்கமான பணி வசதிகள் அளிப்பதற்கான புதிய கொள்கையும் இதில் அடங்கும், எனவே அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்கள் வேலைக்கும், வீட்டிலுள்ளவர்களுக்கும் சரியான, தேவையான நேரத்தை அளிக்கமுடியும். ஒவ்வொருவரின் வீட்டு நிலைமையும் வித்தியாசமானது என்பதால், நாங்கள் 3 பெரிய விருப்பங்களை உருவாக்கினோம்: நாள் முழுவதும் இணக்கத்தன்மை (எப்போது வேண்டுமானாலும் பணி செய்தல்), மறுமுறை பகிர்ந்தளிக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் ஷிஃப்ட் மாற்றங்கள்.

கூடுதலாக, நாங்கள் எங்கள் வழங்கும் மனநல ஆதரவுச் சேவையை மேம்படுத்தினோம், பணியாளர்களுக்கு ‘வீட்டிலிருந்து வேலை’ செய்வதற்கான உதவித்தொகையை வழங்கினோம், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆண்டின் நடுவில் செய்யப்படும் செயல்திறன் கணக்கிடுதல் பணியை ரத்துச் செய்துள்ளோம். எல்லோரும் வெற்றி பெறுவதற்காக ஊக்குவிக்கப்பட்டும், உதவி செய்யப்பட்டும் இருக்கும் ஒரு பணியிடமாக Uber இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.

Able at Uber

Uber’s community for caregivers and employees living with disabilities

Asian at Uber

Uber's Asian community

Equal at Uber

Uber's community for socioeconomic inclusion

Black at Uber

Uber's community for Black employees and allies

Immigrants at Uber

Uber's community for immigrants

Women at Uber

Uber's community for women

Los Ubers

Uber's community for Hispanic and Latinx employees and allies

Interfaith at Uber

Uber's community for people of various spiritual beliefs and cultures

Parents at Uber

Uber's community for parents and caregivers

Pride at Uber

Uber's community for LGBTQ+ inclusion and diversity

Sages at Uber

Uber's community for employees of all generations

Veterans at Uber

Uber's community for veterans and caregivers

Social impact

உலகமே ஸ்தம்பித்து நின்றாலும், இயக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு வணிக நிறுவனமாக இருக்கும் நாங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிந்தோம். எங்கள் நிறுவன வரலாற்றிலேயே முதல்முறையாக, மக்களை எங்கும் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டோம், இதன்மூலம் மிக முக்கியமானவற்றுக்காக நாங்கள் உதவ முடியும், அதாவது மருத்துவப் பணியாளர்களுக்காகவும், உணவு தேவைப்படுபவர்களுக்காகவும் உதவ முடியும்.

பயணிகள் தங்களால் முடிந்ததைச் செய்வதால், உலகளவில் அவசரத் தேவை உள்ளவர்களுக்கு, அதாவது சுகாதாரப் பணியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வயதானவர்கள், மருத்துவப் பொருட்கள் தேவைப்படும் நோயாளிகள் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு 1 கோடி எண்ணிக்கையிலான இலவசப் பயணங்கள், உணவு மற்றும் டெலிவரிகள் செய்யப்படும் என நாங்கள் உறுதிபூண்டோம். முதல் 3 மாதங்களில் மட்டும், Uber தான் வழங்கிய உறுதிப்பாட்டில் இரு மடங்குக்கு மேலாக, அதாவது 2.3 கோடி எண்ணிக்கையிலான இலவசப் பயணங்கள், உணவு மற்றும் டெலிவரிகளை வழங்கியது.

இந்த நெருக்கடி நிலையிலும் நமது சமூகங்களுக்கு உதவி செய்யும் டெலிவரிப் பணியாளர்களும் ஓட்டுநர்களும், பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுவதே எங்களின் தலையாயக் கடமை. அதற்காக, மாஸ்க்குகள் மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்களை வாங்கி வழங்கினோம், COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சுயமாகத் தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டவர்களுக்கும் நிதி உதவி வழங்கினோம், மேலும் எங்கள் தளத்தைத் தவிர மற்ற இடங்களிலும் வேலைகளைப் பெற, ஓட்டுநர்களுக்கு உதவினோம். நகரங்கள் மீண்டும் வழக்கமாகச் செயல்படத் தொடங்குகையில், இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் இவ்வுலகம் மீண்டும் பாதுகாப்பாக இயங்கவும், செல்லவும் உதவுவோம்.

Corporate leadership

இனச் சமத்துவத்திற்காக நாங்கள் செயல்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான உறுதிப்பாடாக, நாங்கள் நிறுவிய பொறுப்பேற்றுக்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றுதான் ‘இனச் சமத்துவத் தலைமைத்துவக் கவுன்சில்’ (Racial Equity Leadership Council - RELC). எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் துணைச் சேவைகளில் உள்ளகத்திலும் உலகளவிலும் இனச் சமத்துவத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாடுகளைச் செயல்படுத்துவதற்கு இந்த வழிநடத்தல் குழு பொறுப்பாகும். இந்த முக்கியமான பணிக்கு எங்கள் நிறுவனத்தின் தலைவர்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 2019 ஆம் ஆண்டில், எங்கள் D&I இலக்குகளுக்காக நிர்வாகப் பதிலீட்டுத் தொகையையும் இணைத்தோம். 2020 ஆம் ஆண்டில், தலைமைத்துவத்தில் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான இலக்குகளை நாங்கள் கொண்டுவந்தோம், அதன்மூலம், சிறிதளவு நல்ல முன்னேற்றத்தைக் கண்டோம், குறிப்பாகப் பெண்கள் மற்றும் சரியான எண்ணிக்கையில் இல்லாத திறமையான பணியாளர்களில் லேசான முன்னேற்றம்.

“இயக்கத்துக்கு உதவும் ஒரு நிறுவனம் என்ற வகையில், உடல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எல்லோரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இயங்கிச் செல்ல முடியும் என்பதை உறுதிசெய்வது எங்கள் குறிக்கோள். சமூகம் முழுவதும் நீடித்திருக்கும் இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கும், எங்கள் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சமத்துவத்திற்கான ஒரு சாம்பியனாக இருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

தாரா கோஸ்ரோஷாஹி, தலைமை நிர்வாக அதிகாரி, Uber

"வரலாறு நம்மை வடிவமைக்கலாம், ஆனால் வரையறுக்கக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் வெறுமனே ஒரு பக்கச்சார்பற்றவை மட்டுமல்லாமல், அதிகச் சமத்துவத்தை உருவாக்கும் வணிகத்தைச் செய்வதற்கான புதிய வழிகளை வரையறுக்க Uber உறுதிபூண்டுள்ளது.”

போ யங் லீ, தலைமைப் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கல் அதிகாரி, Uber

எங்கள் பணியாளர் தரவு

கடந்த 2 ஆண்டுகளுக்கான எங்கள் பணியாளர் பிரதிநிதித்துவம் மிக விரிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது¹

விளக்கப்படங்கள் | உலகளாவிய பாலினம் மற்றும் அமெரிக்க இனம்/இனப் பிரதிநிதித்துவம்

Global gender representation

%Men%Women

US race and ethnicity representation²

%White
%Asian
%Black or African American
%Hispanic or Latinx
%Multiracial
%Native Hawaiian or Other Pacific Islander
%American Indian or Alaska Native

Gender by region

%Men%Women

விளக்கப்படங்கள் | எங்கள் தலைமைப் பிரதிநிதித்துவம்⁴

Global gender representation

%Men%Women

அமெரிக்க இனம்/இனப் பிரதிநிதித்துவம்⁵

%White
%Asian
%Black or African American
%Hispanic or Latinx
%Multiracial
%Native Hawaiian or Other Pacific Islander
%American Indian or Alaska Native

‘மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கையின்’ 35 மற்றும் 36 ஆவது பக்கங்களில் அமெரிக்காவில் இனப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலான பாலின விளக்கப்படங்களைக் காண்க.

2020 ஆம் ஆண்டுக்கான முழு அறிக்கையையும் காண்க

விளக்கப்படங்கள் | எங்கள் புதிய பணியாளர்களின் பிரதிநிதித்துவம்⁶

Global gender representation

%Men%Women

அமெரிக்க இனம்/இனப் பிரதிநிதித்துவம்⁷

%White
%Asian
%Black or African American
%Hispanic or Latinx
%Multiracial
%Native Hawaiian or Other Pacific Islander
%American Indian or Alaska Native

‘மக்கள் மற்றும் கலாச்சார அறிக்கையின்’ 37 மற்றும் 38 ஆவது பக்கங்களில் அமெரிக்காவின் புதிய பணியாளர்களின் இனப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலான பாலின விளக்கப்படங்களைக் காண்க.

2020 ஆம் ஆண்டுக்கான முழு அறிக்கையையும் காண்க

¹தற்போதைய பிரதிநிதித்துவத் தரவு மார்ச் 2019 மற்றும் ஆகஸ்ட் 2020-க்கானது.

²முழு எண்ணாகக் காண்பிக்கும்படியாகத் தரவு உள்ளதால், இனம் மற்றும் இனம் தொடர்பான தரவுகளின் மொத்தச் சதவீதம் 100% ஆக இருக்காது.

³எங்களின் சென்டர்ஸ் ஆஃப் எக்சலன்ஸ் மற்றும் சேவை மையங்களில் உள்ள எங்களின் ஆதரவு மையப் பணியாளர்களில் (பொதுவாக தொழில்துறை அடிப்படையில் வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்) சமூக நிபுணர்களும் உள்ளனர்.

⁴தலைமை என்பது இயக்குநர் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிநிலையில் உள்ளவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

⁵முழு எண்ணாகக் காண்பிக்கும்படியாகத் தரவு உள்ளதால், இனம் மற்றும் இனம் தொடர்பான தரவுகளின் மொத்தச் சதவீதம் 100% ஆக இருக்காது.

⁶புதிய பணியாளர்களின் பிரதிநிதித்துவத் தரவு, ஆகஸ்ட் 2020 தரவை அடிப்படையாகக் கொண்டது.

⁷முழு எண்ணாகக் காண்பிக்கும்படியாகத் தரவு உள்ளதால், இனம் மற்றும் இனம் தொடர்பான தரவுகளின் மொத்தச் சதவீதம் 100% ஆக இருக்காது.