Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஊபரில் ஆப் மூலமான வெகுமானங்கள்

வெகுமானம் அளிப்பது நன்றி கூறுவதற்கான சுலபமான ஒரு வழியாகும். பயணிகள் மற்றும் Uber Eats வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பயணம் அல்லது டெலிவரிக்குப் பிறகும் ஆப்பிலிருந்தே வெகுமானம் அளிப்பதற்கான விருப்பம் உள்ளது.

இது எப்படிச் செயல்படுகிறது?

சுலபமானது மற்றும் வசதியானது

வசதியான, தடையில்லா பயணத்தை உறுதிசெய்ய, உங்கள் பயணத்திற்குப் பிறகு 30 நாட்கள் வரை ஓட்டுநர்களுக்கு உங்களுக்கு வசதியான நேரத்தில் வெகுமானம் அளிக்கலாம்.

சேவைக் கட்டணம் கிடையாது

வெகுமானங்கள் நேரடியாக ஓட்டுநர்களுக்குச் செல்கின்றன; வெகுமானங்களில் சேவைக் கட்டணங்களை ஊபர் வசூலிப்பதில்லை.

தனியுரிமை

வெகுமானம் அளிப்பது என்பது உங்களுடைய பயணத்துடன் தொடர்புடையது, உங்களுடைய பெயருடன் அல்ல.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • வெகுமானம் அளித்தல் விருப்பத்திற்குரியது. வெகுமானத்தை நீங்கள் தடையில்லாமல் சேர்க்கலாம், அதுபோல ஓட்டுநர்கள் வெகுமானத்தை தடையில்லாமல் அக்செப்ட் செய்யலாம்.

  • ஆப்பின் மூலம் சுலபமான வழியில் உங்களுடைய ஓட்டுநருக்கு வெகுமானம் அளிக்கலாம். உங்களுடைய பயணத்தின் முடிவில், உங்களுடைய ஓட்டுநரை மதிப்பிடுமாறு கேட்கப்படுவீர்கள். நீங்கள் தரமதிப்பீட்டை வழங்கியதும், வெகுமானத்தைச் சேர்ப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும். உங்களுடைய ஓட்டுநரிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுப்பதும் ஒரு விருப்பமாகும்.

  • வெகுமானம் அளிப்பதைச் செயல்படுத்த, உங்கள் ஆப்பைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். கூடுதலாக, சில ஓட்டுநர்கள் ஆப்பின் மூலம் வெகுமானங்களை அக்செப்ட் செய்யாதிருக்க முடிவு செய்யலாம். அல்லது ஆப் மூலம் வெகுமானம் அளிக்கும் வசதி இதுவரையிலும் கிடைக்காத பிராந்தியத்தில் நீங்கள் இருக்கக்கூடும். நீங்கள் விரும்பினால், எப்போதும் உங்கள் ஓட்டுநருக்கு ரொக்கமாக வெகுமானம் அளிக்கலாம்.

  • அவை அனைத்தும். வெகுமானங்களில் இருந்து ஊபர் எதையும் எடுத்துக்கொள்வதில்லை.

  • வெகுமானங்களுக்கு ஊபர் கேஷ் மற்றும் பரிசு அட்டைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உங்களுடைய ஓட்டுனருக்கு வெகுமானம் அளிக்க, ஊக்கத்தொகைகளைப் பயன்படுத்த முடியாது.

  • பயணம் முடிந்ததும், ஆப்பில், riders.uber.com இல் அல்லது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பயண ரசீதில் இருந்து வெகுமானத்தைச் சேர்க்க உங்களுக்கு 30 நாட்கள் உள்ளன.

  • பயணத்தை முதலில் கோரிய பயணியால் ஒரு பயணத்திற்கான வெகுமானத் தொகையைத் தேர்ந்தெடுக்க முடியும். முதலில் கோரிய நபர் வெகுமானத்தைச் சேர்த்தால், அது மற்ற பயணிகளுடன் பிரிக்கப்படாது.

ஆப்பின் அம்சங்கள்

கோரிக்கைகள் சுலபமாக்கப்பட்டன

தடையற்ற கட்டணங்கள்

உங்களுடைய பயணத்தைத் திட்டமிடுங்கள்

பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو