Uber-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டி
நகரத்தில் பயணிக்க வேண்டியிருந்தாலும் சரி, தொலைவில் உள்ள நகரத்திற்குப் பயணிக்க வேண்டியிருந்தாலும் சரி, நீங்கள் விரும்பும் இடத்திற்கு எளிதாகச் செல்லலாம். Uber ஆப் மூலம் எவ்வாறு பயணிப்பது என்று அறிந்துகொள்ளுங்கள்.
Uber ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது
கணக்கை உருவாக்குங்கள்
ஒரு மின்னஞ்சல் முகவரியும் மொபைல் எண்ணும் இருந்தால் போதும். உலாவி மூலம் அல்லது Uber ஆப் மூலம் நீங்கள் பயணத்தைக் கோரலாம். ஆப்-ஐப் பதிவிறக்க, App Store அல்லது Google Play-க்குச் செல்லுங்கள்.
உங்கள் சேருமிடத்தை உள்ளிடுங்கள்
ஆப்-ஐத் திறந்து, எங்கு செல்ல வேண்டும்? என்ற பெட்டியில் உங்களின் சேருமிடத்தை உள்ளிடுங்கள். பிக்அப் இடத்தை உறுதிப்படுத்த, உறுதிசெய் என்பதைத் தட்டி, அருகிலுள்ள ஓட்டுநருடன் உங்களைப் பொருத்துவதற்கு அதை மீண்டும் தட்டுங்கள்.
ஓட்டுநரைச் சந்தியுங்கள்
அவரின் வருகையை நீங்கள் வரைபடத்தில் கண்காணிக்கலாம். அவர் சில நிமிடத் தொலைவில் இருக்கும்போது, உங்கள் பிக்அப் இடத்தில் காத்திருங்கள்.
பயணத்தைச் சரிபாருங்கள்
நீங்கள் Uber மூலம் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும், உங்கள் ஆப்-இல் காட்டப்படும் வாகன உரிம எண், கார் பிராண்டு மற்றும் மாடல், ஓட்டுநரின் புகைப்படம் ஆகியவற்றைச் சரிபார்த்து, சரியான காரில் ஏறுவதையும் சரியான ஓட்டுநருடன் செல்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆப் மூலம் மட்டுமே Uber பயணங்களைக் கோர முடியும். இதனால் உங்கள் ஆப்-இல் காட்டப்படும் விவரங்களுடன் பொருந்தாத அல்லது வேறு ஓட்டுநருடைய வாகனத்தில் ஏற வேண்டாம்.
வசதியாக அமர்ந்து ஓய்வெடுங்கள்
நீங்கள் சேருமிடத்தை அடைந்த பின்பு, எளிதாகப் பேமெண்ட் செய்யலாம். உங்கள் பகுதியைப் பொறுத்து, உங்களுக்கு விருப்பத்தேர்வுகள் உள்ளன. ரொக்கமாகச் செலுத்தலாம் அல்லது கிரெடிட் கார்டு, Uber Cash பேலன்ஸ் போன்ற பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
உங்கள் பயணத்தைத் தரமதிப்பிடுங்கள்
உங்கள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஆப்-இல் ஓட்டுநரை நீங்கள் பாராட்டலாம் அல்லது அவருக்கு வெகுமானம் அளிக்கலாம்.
பயணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சிரமமின்றி பயணியுங்கள்
நிகழ்நேர வெளிப்படையான கட்டணம்
நீங்கள் பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்பு, மதிப்பிடப்பட்ட கட்டணத்தை ஆப்-இல் காணலாம். இதனால் எவ்வளவு கட்டணம் ஆகும் என்பதை நீங்கள் ஊகிக்க வேண்டியதில்லை. மேலும் உங்களுக்கேற்ற பயணத்தைக் கண்டறிய ஒவ்வொரு முறையும் கட்டணங்களை ஒப்பிட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் பிக்அப் இடத்தைப் பெறுங்கள்
பயணம் செய்யக் கோரும்போது, ஓட்டுநரைச் சந்திப்பதற்கான உகந்த இடத்தை ஆப் தானாகவே பரிந்துரைக்கும். உங்கள் இருப்பிடத்தை மாற்ற, புதிய முகவரியைத் உள்ளிடுங்கள் அல்லது உங்கள் இடத்தைக் குறிக்கும் பின்னானது சாம்பல் நிற வட்டத்திற்குள் இருக்கும்படி பின்னை இழுத்து விடுங்கள்.
ஓட்டுநர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்
ஆப்-இல் ஓட்டுநர் சுயவிவரங்களைப் பார்த்து ஓட்டுநர் குறித்த வேடிக்கையான விஷயங்கள், அவர் பெற்றுள்ள தரமதிப்பீடுகள், பாராட்டுகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
தரமதிப்பீடுகள் மற்றும் வெகுமானங்கள்
பயணங்களைத் தரமதிப்பீடு செய்வதன் மூலம் உங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் எங்களுக்கு உதவுங்கள். அருமையான ஓட்டுநரிடமிருந்து சிறந்த சேவையைப் பெற்றிருந்தால், நீங்கள் வெகுமானமும் அளிக்கலாம்.
ஒவ்வொரு பயணத்திலும் மன அமைதி
ஓட்டுநருக்கான திரையிடல் செயல்முறை, காப்பீடு முதல் பயணத்தைக் கண்காணித்தல், தொடர்ந்து தொடர்பில் இருத்தல் போன்ற ஆப் அம்சங்கள் வரை, உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமையாக உள்ளது.
மக்கள் பயணம் செய்வதற்கான பல்வேறு வழிகள்
10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்வேறு வகையான பயண விருப்பங்களுடன் நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்வதற்கான வசதியை Uber ஆப் உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் பயணத்தின் மூலம் பலவற்றைப் பெறுங்கள்
உங்கள் பயணத்திற்குப் பிறகு
பயணிகளின் பிரபலக் கேள்விகள்
- பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியுமா?
Uber மூலம் 30 நாட்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிடலாம். ஆப்-ஐத் திறந்து, சேருமிடத்தை உள்ளிடுவதற்கான எங்கு செல்ல வேண்டும்? என்ற பெட்டியை அடுத்துள்ள ‘கார் மற்றும் கடிகார’ ஐகானைத் தட்டுங்கள்.
- நண்பருக்காகப் பயணம் கோருவது எப்படி?
ஆப்-ஐத் திறந்து, சேருமிடத்தை உள்ளிடுவதற்கான எங்கு செல்ல வேண்டும்? பெட்டியைத் தட்டுங்கள். பயணியை மாற்று என்ற ஸ்கிரோல்-டவுன் விருப்பத்தேர்வு தோன்றும். அதைத் தட்டி, உங்கள் நண்பரைத் தேர்ந்தெடுங்கள். பயண விவரங்களுடன் கூடிய உரைச் செய்தியைப் பெறுவீர்கள். அதில் கார் மாடல், வாகன உரிம எண், ஓட்டுநர் பெயர், தொடர்புத் தகவல்கள், ETA போன்ற விவரங்கள் இருக்கும்.
- கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
நேரம் மற்றும் தூரத்துக்கு ஏற்ப கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன. இவை கூடுதல் கட்டணங்கள், பயண வழியில் எதிர்கொள்ளும் சுங்கச் சாவடிக்கான கட்டணங்கள், ரத்து மற்றும் காத்திருப்புக் கட்டணங்கள் (பொருந்தினால்), முன்பதிவுக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டவை.
வெளிப்படையான கட்டணத்தைக் கணக்கிடும்போது பல கட்டணங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. கணக்கிடப்பட்ட பயண நேரம், பிக்அப் இடத்திற்கும் சேருமிடத்திற்கும் இடையிலான தூரம், நேரம், வழி, பயணத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது இருக்கும். சுங்கக் கட்டணங்கள், வரிகள், பிற கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
- ஓட்டுநர்களின் கருத்தின்படி, பயணிக்கு 5 நட்சத்திரத் தரமதிப்பீட்டைப் பெற்றுத் தருவது எது?
தரமதிப்பீடுகள் இரு வழிகளிலும் பெறப்படுகின்றன. ஓட்டுநர்களிடமிருந்து பெறப்படும் பின்னூட்டங்களில், நட்பாக உரையாடுதல், தங்களின் கார் மற்றும் உடைமைகளை மதித்தல், காரில் ஏறும்போதும் இறங்கும்போதும் கதவை அறைந்து மூடாமல் இருத்தல், வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல் ஏற்படுத்தாமல் இருத்தல் போன்ற கருத்துகளையே நாங்கள் பெரும்பாலும் பெறுகிறோம். மேலும் தகவல்களுக்கு, எங்கள் சமூக வழிகாட்டல்களைப் பாருங்கள்.
- எனது பயணத்தில் கூடுதல் நிறுத்தங்களைச் சேர்க்கலாமா?
பயணத்திற்கு முன்பு அல்லது பயணத்தின்போது 2 கூடுதல் நிறுத்தங்கள் வரை நீங்கள் சேர்க்கலாம். எங்கு செல்ல வேண்டும்? என்பதை அடுத்துள்ள + என்பதைத் தட்டி, உங்கள் முகவரியை உள்ளிடுங்கள். நேரம் மற்றும் சேருமிடத்தின் தூரத்துக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடக்கூடும்.
*இந்த அம்சம் Uber Lite ஆப்-இல் கிடையாது. இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு ஏதுமின்றிப் புதுப்பிக்கப்படலாம்.
நிறுவனம்