Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

சேவை விலங்கு பயனர் வழிகாட்டி

பார்வையற்ற அல்லது குறைந்த பார்வைத் திறன் கொண்ட பயணிகள் நம்பகமான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து தீர்வுகளை பெறுவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

Uber இன் நன்மைகள்

iOS VoiceOver மற்றும் Android TalkBack தொழில்நுட்பம்

iOS VoiceOver, Android TalkBack மற்றும் Braille டிஸ்ப்ளே அம்சங்கள், Uber இல் ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் பயணத்தைத் தொடங்குவதை சாத்தியமாக்குகிறது. iOS இல் VoiceOver ஐ இயக்க: அமைப்புகள் > பொது > அணுகல் > VoiceOver விருப்பத்தைத் தட்டுவதன் மூலம் triple-tap or Siri ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும். வயர்லெஸ் Braille டிஸ்ப்ளே இணைப்பின் உதவியுடன் VoiceOver அம்சத்தை பயன்படுத்த முடியும். இது Uber சேவை கிடைக்கப்பெறும் அனைத்து நகரங்கள் மற்றும் மொழிகளில் கிடைக்கிறது.

ரொக்கமில்லா பேமெண்ட்டுகள்

Uber இன் ரொக்கமில்லா அமைப்பு பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது, பயணிகள் பணத்தை எடுத்துச் செல்வது அல்லது ஓட்டுநருடன் கட்டணங்களைப் பரிமாறிக் கொள்வது பற்றி கவலைப்பட வேண்டியதன் அவசியத்தை குறைக்கிறது.

எளிய செலவுகள்

ஒவ்வொரு பயணமும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் ரசீதுகள் தானாகவே பயணிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும், இதனால் செலவு அறிக்கைகளை எளிதாக தாக்கல் செய்யலாம்.

10,000 திற்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது.

உலகெங்கிலும், மில்லியன் கணக்கான மக்கள் Uber ஐப் பயன்படுத்தி புள்ளி A இலிருந்து புள்ளி B க்குப் பயணிக்கின்றனர். எனவே பயணத்திற்காக வெளியில் காத்திருப்பதோ தெருக்களில் வாடகை வாகனங்களை பிடிப்பதோ இனி தேவையில்லை. பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் Uber ஆப்பை பயன்படுத்தத் தொடங்கலாம் மேலும் தங்கள் கார் வரும் வரை பாதுகாப்பாகக் காத்திருக்கலாம்—வாகனம் ஓட்ட முடியாத தனிநபர்களுக்கான மற்றொரு போக்குவரத்து விருப்பத்தை இது வழங்குகிறது.

அனைவருக்கும் சமமான அணுகல்

பயணி கோரிக்கை செய்யும் ஒவ்வொரு பயணமும் Uber ஆப் மூலம் அருகிலுள்ள ஓட்டுநருடன் பொருத்தப்படும். இதனால் சட்டவிரோதமான பாகுபாட்டிற்கு வாய்ப்பே இல்லை. நம்பகமான, கட்டுப்படியாகக்கூடிய கட்டணம் கொண்ட பயணத்தைப் பெறுவீர்கள். கண்பார்வையற்ற அல்லது குறைந்த பார்வைத் திறன் கொண்ட பயணிகள் மற்றும் சேவை விலங்குடன் பயணிக்கும் பயணிகளுக்குப் பயணங்களை வழங்கும்போது, Uber-இன்சமூக வழிகாட்டுதல்கள் மற்றும்சேவை விலங்கு கொள்கையின்படி சேவை விலங்குகளின் போக்குவரத்து தொடர்பான அனைத்து பொருந்தக்கூடிய சட்டங்களுக்கும் ஓட்டுநர்கள் இணங்க வேண்டும்.

உங்கள் ETA மற்றும் இருப்பிடத்தைப் பகிருங்கள்

பார்வையற்ற அல்லது குறைந்த பார்வைதிறன் கொண்ட பயணிகள், குறிப்பிட்ட வழி மற்றும் மதிப்பிடப்பட்ட வருகை நேரம் உட்பட தங்கள் பயண விவரங்களை எளிதாக நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் கூடுதலாக நிம்மதியாக உணரலாம். Uber ஆப்பை பதிவிறக்காமலேயே, ஓட்டுநர் பெயர், புகைப்படம், வாகனத் தகவல் மற்றும் நீங்கள் சேருமிடத்தை அடையும் வரை வரைபடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்காணிக்கும் இணைப்பைப் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெறுவார்கள்.

நிகழ்நேரக் கண்காணிப்பு

ஒவ்வொரு பயணத்தையும் ஆவணப்படுத்த Uber GPS ஐப் பயன்படுத்துகிறது. இது பயணிகள் சிறப்பான வழிகளில் தாங்கள் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து நிம்மதியாக இருக்க உதவுகிறது மேலும் பயணம் குறித்த கேள்விகளைக் கேட்கவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயணத்தின் நிலையை தெரிவிக்கவும் அனுமதிக்கிறது.

Uber இன் சேவை விலங்குக் கொள்கையைக் கண்டறிவதற்கான வழிகாட்டி

கணினியில்

அணுகல் உதவி மையம்

Uber ஆப்பில்

அணுகல் உதவி மையம்

  1. மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
  2. உதவிஎன்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  3. கீழே உருட்டி அணுகல்என்பதற்குச் செல்லுங்கள்.
  4. சேவை விலங்குகளுடன் பயணம் என்பதைத் தேர்ந்தெடுத்தபின்U.S என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சேவை விலங்கு கொள்கை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

சேவை விலங்கு மறுப்பை புகாரளித்தல்

எங்களின் பிரத்தியேக உதவிக் குழு, சேவை விலங்கு தொடர்பான சம்பவம் குறித்த அனைத்துப் புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, தீர்வு காணப்படுவதை உறுதிசெய்கிறது. இந்த அறிக்கைகளை எங்கள் அணுகல் உதவி மையத்திலிருந்து பதிவு செய்யலாம்.

சேவை விலங்கு மறுப்பை புகாரளிக்க பல வழிகள் உள்ளன:

Uber கணக்குகள் இல்லாத பயனர்களுக்கான கணினி

அணுகல் உதவி மையம்

  1. உங்கள் Uber உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி help.uber.com இணையதளத்திற்குள் உள்நுழையவும்.
  2. கீழே உருட்டி அணுகல்என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "சேவை விலங்குக் கொள்கை" என்பதைத் தேடி, அமெரிக்க சேவை விலங்குக் கொள்கையை தேர்ந்தெடுக்கவும்.
  4. கீழே உருட்டி சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன்.என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நிறைவுற்ற பயணங்கள்

  1. உங்கள் Uber உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி help.uber.com இணையதளத்திற்குள் உள்நுழையவும்.
  2. பயணச் சிக்கல்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் பக்கத்தில், வரைபடத்தில் உள்ள பயண வரலாறு கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தி தொடர்புடைய பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட பயணத்திற்கான பயண விவரங்களுக்கு கீழேமேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பொதுப் பிரச்சினைகள் பிரிவில் சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடு்க்கவும்.

Uber கணக்குகள் இல்லாத பயனர்களுக்கான கணினி

சேவை விலங்கு புகார் படிவத்தை இங்கேபார்க்கவும்.

Uber ஆப்பில்

அணுகல் உதவி மையம்

  1. மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
  2. உதவிஎன்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  3. பின்னர் அணுகல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தட்டவும்.

நிறைவுற்ற பயணங்கள்

  1. மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
  2. உதவிஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பின்னர் அனைத்து சிக்கல்களையும் பார்க்கவும்என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தட்டவும்.

கட்டணம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல்

இரத்து கட்டணம்

சேவை நிராகரிப்பின் காரணமாக உங்களிடம் ரத்து கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இப்பிரச்சனையைப் Uber இல் புகாரளிதன் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவால் இந்தக் கட்டணம் திருப்பியளிக்கப்படும். பணத்தைத் திரும்பப் பெறுதலுக்கான உங்கள் கட்டண முறையைச் செயல்படுத்த 5 வணிக நாட்கள் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

Uber இரண்டாவது இருக்கை பணத்தைத் திரும்பப்பெறுதல்

நீங்கள் UberPool பயணத்தில் ஒரு சேவை விலங்குடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் சேவை விலங்கின் உருவ அளவு காரணமாக கூடுதல் இடம் தேவைப்படலாம். சேவை விலங்கு, மற்றப் பயணிகள் மற்றும் உங்களுக்கும் தேவையான இடம் இருப்பதை உறுதிசெய்ய 2 இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்யுங்கள். இங்கே நீங்கள் Uber க்கு எழுதி தெரியப்படுத்தலாம். மேலும் உங்கள் இரண்டாவது இருக்கைக்கான கூடுதல் பணம் உங்களுக்குத் திரும்ப வழங்கப்படலாம்.

சேவை விலங்குகள் கொள்கை

Uber Driver ஆப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர் பார்ட்னர்கள், சேவை விலங்குகள் காரணமாக, சேவை விலங்குகளுடன் பயணம் செய்பவர்களுக்கு சேவையை மறுப்பதையும், சேவை விலங்குகளுடன் சவாரி செய்பவர்களிடம் பாகுபாடு காட்டுவதையும் மாநில மற்றும் மத்திய சட்டம் தடை செய்கிறது. Uber தனது சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விலங்கு கொள்கை இல், சட்டப்பூர்வக் கடமையை மீறி பாரபட்சமான நடத்தையில் ஈடுபடும் ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் ஆப்பைப் பயன்படுத்தும் திறனை இழக்க நேரிடும் என்பதை விளக்கியுள்ளது.

ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

உங்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறோம்

உங்கள் Uber கணக்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்பதற்கும், சமீபத்திய பயணம் குறித்த பின்னூட்டத்தை வழங்குவதற்கும் எங்களின் உதவி மையத்திற்குச் செல்லுங்கள்.

சிறந்த சேவையை வழங்கவும்

மாற்றுத்திறனாளி பயணிகளைக் கொண்டு செல்வது பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஓட்டுநர்களுக்கான இந்த ஆதாரங்களைப் பாருங்கள்.

*பிரான்சில் பொருந்தாது.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو