Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஆடியோ ரெக்கார்டிங்

நம்பிக்கையுடன் பயணம் செய்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், எங்கள் பயணங்களைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் எங்களின் கவனம் உள்ளது.

பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை

பயணத்தின்போது உங்களுக்கு சங்கடமாக இருந்தால், பயணத்தின் ஆடியோவை இப்போது நீங்கள் ஆப்பிலேயே ரெக்கார்டு செய்யலாம்.

ஆடியோ ரெக்கார்டிங் விருப்பத்தை அணுக, பாதுகாப்பு அம்சத்தின் ஷீல்டைக் கிளிக் செய்யவும். ஆப்பினுள் பயணம் ரெக்கார்டு செய்யப்படும். தேவைப்பட்டால், பயணம் முடிந்த பிறகு அதை நீங்கள் Uber உடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது

வாகனத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படாது. எல்லா ஆடியோவும் மறைகுறியாக்கப்பட்டு, உங்கள் சாதனத்திலேயே இருக்கும். ரெக்கார்டிங்கை ஓட்டுநர்களோ பயணிகளோ கேட்க முடியாது.

Uber விசாரணை செய்வதற்கு உதவுங்கள்

பாதுகாப்பு குறித்த புகார்களை நாங்கள் தீவிரமாகக் கருத்தில் கொள்கிறோம். நீங்கள் ஒரு புகாரைப் பதிவு செய்தால், அதில் இணைக்கப்பட்டுள்ள ரெக்கார்டிங்கை எங்களின் பாதுகாப்புக் குழு மதிப்பாய்வு செய்யும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • ஆடியோ ரெக்கார்டிங் என்பது பயணங்களின்போது ஆப்பின் மூலம் பாதுகாப்பான, வசதியான தொடர்புகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய திறனாகும். பயனரால் மட்டுமே ரெக்கார்டிங்குகளைச் செயல்படுத்த முடியும், மேலும் அவை சாதனத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கேட்க முடியாது. ஆனால் Uber ஆப்பின் மூலம் அனுப்பப்படும் பாதுகாப்பு அறிக்கையுடன் மட்டுமே இணைக்க முடியும். அது நிகழாத பட்சத்தில், Uber ஆல் எந்த உள்ளடக்கத்தையும் அணுக முடியாது.

  • அதைப் பாதுகாப்புக் கருவித்தொகுப்பில் கண்டறியலாம். பயணத்தை மேற்கொள்ளும்போது வரைபடத்தில் உள்ள ஷீல்டு ஐகானைத் தட்டுவதன் மூலம் கண்டறியலாம்.

    நாங்கள் தற்போது பயணிகளுக்கான ஆடியோ ரெக்கார்டிங் அம்சத்தை மேம்படுத்தி வருகிறோம். இன்னும் சில வாரங்களில் அது மீண்டும் கிடைக்கும்

  • இந்த அம்சம் கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களின் ஸ்மார்ட்ஃபோன்களின் மூலம் ரெக்கார்டிங்கைச் செய்யலாம். இந்த அம்சம் கிடைக்கப்பெறுவது குறித்து பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, ரெக்கார்டிங் செய்யும்போது அதுகுறித்து வாகனத்தில் உள்ள மற்றொரு தரப்பினருக்கு அறிவிக்கப்படாது.

  • பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் தங்களின் சாதனத்தின் மூலம் தனித்தனியே ரெக்கார்டு செய்து கொள்ளலாம். பாதுகாப்பு அறிக்கையுடன் இணைக்கப்படும் ரெக்கார்டிங்கை மட்டுமே Uber கேட்க இயலும். சட்டப்பூர்வமாகத் தேவைப்பட்டால், பகிரப்பட்ட ரெக்கார்டிங்கைச் சட்ட அமலாக்கம் போன்ற தகுதிவாய்ந்த ஆணையத்திற்கு Uber வழங்கலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو