முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள்

அனைவரும் ஆதரவுடனும் வரவேற்புடனும் உணர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் உடல்ரீதியான தொடர்பு, பாலியல் தாக்குதல் மற்றும் தவறான நடத்தை, அச்சுறுத்தல் மற்றும் முரட்டுத்தனமான நடத்தை, தேவையற்ற தொடர்பு, பாகுபாடு மற்றும் சொத்து சேதம் குறித்த தரநிலைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

அச்சுறுத்தல் மற்றும் முரட்டுத்தனமான நடத்தை

முரட்டுத்தனம், மோதல் அல்லது துன்புறுத்தும் நடத்தை அனுமதிக்கப்படாது. தவறான வார்த்தைகளையோ அல்லது அவமரியாதையான அல்லது அச்சுறுத்தலாக இருக்கும் சைகைகளையோ செய்யக்கூடாது. மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் போன்ற மாற்றுக் கருத்து இருக்கச் சாத்தியமுள்ள தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதில் இருந்து விலகியிருப்பது நல்லது.

தேவையற்ற தொடர்பு

பயணம் முடிந்ததும் தவறவிட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகத் தவிர வேறு காரணங்களுக்காக தொடர்பு கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டாக, பயணம் முடிந்ததும் உரைச் செய்தி அனுப்புதல், அழைப்பைச் செய்திகள், சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ளுதல், அவரை நேரில் சந்திக்கச் செல்லுதல் அல்லது சந்திக்க முயலுதல் அனுமதிக்கப்படாது.

பாகுபாடு

நீங்கள் எப்போதும் ஆதரவுடனும் வரவேற்புடனும் உணர வேண்டும். அதனால்தான் பாகுபாடான நடத்தையை நாங்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வயது, நிறம், உடல் இயலாமை, பாலின அடையாளம், திருமண நிலை, நாட்டினம், இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை போன்ற பண்புகளின் அடிப்படையில் ஒருவரிடம் பாகுபாடு காட்டக் கூடாது.

மேலும் சமூக வழிகாட்டல்களைக் காணுங்கள்

ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்

சட்டத்தைப் பின்பற்றுங்கள்