Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இனவெறியைச் சிறிதளவும் சகிக்க முடியாது

இனவெறிக்கும் பாகுபாட்டிற்கும் நமது உலகில் இடம் கிடையாது—அவற்றுக்கு எதிராகப் போராட நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை இங்கே காணலாம்.

10 மில்லியன் இலவசப் பயணங்கள், உணவு மற்றும் டெலிவரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொண்டிருந்தாலும், பெருந்தொற்று மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரே நெருக்கடி நிலை இல்லை என்பதைப் புரிந்துகொண்டோம். 2020 கோடை காலத்தில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டங்களின் போது, நாங்கள் கறுப்பினச் சமூகத்துடன் கைகோர்த்து நின்று சமத்துவத்திற்காக மட்டுமன்றி, இனவெறிக்கு எதிராகத் தீவிரமாகச்செயல்படும் நிறுவனம் என்பதையும் செயல்படுத்திக் காட்டினோம் எங்கள் தளத்திலும் எங்கள் நிறுவனத்திலும் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உலாவ முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாகும். அவ்வாறு செய்ய, இந்த முக்கியமான பணியை முன்னோக்கி நகர்த்த 14 உறுதிமொழிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மேலும், அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றதாக அதை உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். ஓட்டுநர்கள், டெலிவரி நபர்கள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஊழியர்களுக்குச் சமத்துவத்திற்கான பாதையை உருவாக்குவது முதல் அவர்களின் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது வரை அனைத்தையும் இது உள்ளடக்கியிருக்கும். வெளிப்படைத்தன்மையே எங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்பைடைக் காரணம்.

இன்று உலகமே சாட்சியாக இருக்கும் இன நீதி இயக்கத்தை Uber ஆதரிக்கின்றது.

ஓட்டுனர்கள் மற்றும் சவாரி செய்பவர்கள் எதிர்நோக்கும் புதிய இனவெறி எதிர்ப்பு மற்றும் தன்னுணர்வற்ற சார்பு வளங்களை விருத்திசெய்ய எங்களுக்கு உதவுமாறு துறைசார் நிபுணர்களையும் நாம் அழைத்துள்ளோம். பாகுபாடுக்கு எங்களிடம் மன்னிப்பு இல்லை, வாடிக்கையாளர் ஆதரவு குழுக்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க மற்றும் செயலியில் சம்பவங்களை முறைப்பாடு செய்வதை எளிதாக்குவது போன்றவற்றை மேற்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சம உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதிய திட்டங்கள் மற்றும் வளங்களை நாங்கள் உருவாக்கி வருகின்றோம், மேலும் சில பிரதான அமைப்புகளுக்கு ஆதரவளித்தும் வருகின்றோம். எங்கள் சரிசமமான நோக்கங்களுக்காக கீழ்வரும் 3 நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகின்றோம்

சமத்துவக் கொள்கைக்கான நிலையம் (ஐக்கிய அமெரிக்கா)

நடத்தைகளை அளவிடுவது கொள்கைகளைத் திருத்தியமைப்பது போன்ற காவல்துறையின் பணிகளில் அவர்களை நாங்கள் ஆதரிக்கின்றோம், இதனால் காவல்துறையில் பக்கச்சார்பு- காரணமாக மரணங்கள் மற்றும் சிறைத் தண்டனைகளைத் தடுத்து நிறுத்தலாம். நீதித்துறைப் பணியகத்தின் புள்ளிவிவர ஆராய்ச்சிகள், வெள்ளை மக்களை விட அமெரிக்காவில் சட்ட செயல்பாடுகள் கறுப்பின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காண வாய்ப்பு2 முதல் 4 மடங்கு அதிகம் உள்ளதாக காட்டுகின்றன

ஹோலாபேக்! ( ஐக்கிய அமெரிக்கா)

ஆசிய அமெரிக்கன்ஸ் அட்வான்சிங் ஜஸ்டிஸ் (AAAJ) உடன் இணைந்து AAPI துன்புறுத்தலுக்கு எதிரான அவர்களின் பயிற்சித் திட்டம் க்கு (2021 வரை) நிதியளிக்க நாங்கள் கூட்டிணைந்து வருகிறோம். அமெரிக்காவில் Uber உடன் வாகனம் ஓட்டுபவர், டெலிவரி செய்பவர், பயணம் செய்கிறார், சாப்பிடுகிறார், பணிபுரிபவர் என அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பார்வையாளர் தலையீட்டுக் கல்வியை உருவாக்குவதன் மூலம் எங்கள் பார்ட்னர்ஷிப் ஐ மேலும் ஆழப்படுத்துகிறோம்.

சிறைச்சாலை சீர்திருத்த அறக்கட்டளை (இங்கிலாந்து)

நியாயமான, மனிதாபிமான மற்றும் ஆக்கபூர்வமான தண்டனை முறையை உருவாக்குவதற்கான அவர்களின் பணியை நாம் ஆதரிக்கின்றோம். அவர்களின் பணி இங்கிலாந்தில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பில் இன வேறுபாடுகளைக் கையாளுகின்றது. சிறையிலும், அதற்கான பயணத்திலும் கறுப்பின மக்கள் எதிர்நோக்கும் நியாயமில்லாத முடிவுகளை விளிக்கும் வகையில் செயல்பட அவர்கள் முயல்கின்றார்கள்

வறுமைக்கு எதிராகச் சவால் விடுவதற்கும், இன நீதிக்குப் போராடுவதற்கும், அனைத்து இடங்களிலும் நியாயமான நடத்துவதற்காக வாதிடுவதற்கும் இந்த அமைப்புகளில் அவர்களின் அன்றாட வேலைகளை ஆதரிக்கும் அதே வேளையில், சமத்துவத்திற்காக அழுத்தம் கொடுக்கவும் எங்கள் அறிவையும் வலையமைப்பையும் பயன்படுத்த நாம் முற்படுகின்றோம்

கறுப்பினத்தவருக்குச் சொந்தமான உணவகங்களை ஆதரிக்கும் எங்கள் பணியைப் பற்றி மேலும் இங்கே தெரிந்து கொள்ளலாம் , மேலும் எங்கள் இனவெறிக்கு எதிரான கடமைகளைப் பற்றி இங்கே காணலாம்

எங்கள் செல்வாக்குமிக்க பணிகள் பற்றி மேலும் வாசிக்க

எங்கள் கடமைகள்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

குளிர் காலங்களில் கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உதவுதல்.

வாஷிங்டன், டிசி யில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான உணவகங்களைப் புதிய சுற்றுப்புறத்தில் விரிவுபடுத்த உதவுதல்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو