Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber உடன் ஓட்டும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல்

சரியான பயணியைப் பிக்அப் செய்வதில் இருந்து, உதவிக்கு எப்போது அழைக்க வேண்டும் என்பதை அறிவது வரை, ஒவ்வொரு பயணத்தையும் மன அழுத்தமில்லாமல் செய்ய உதவும் வழிகள் இங்குள்ளன.

பயணியைப் பற்றிய தகவலைத் தேடுகிறீர்களா? பயணியின் பாதுகாப்புப் பக்கத்திற்கு மாறவும்.

ஓட்டுநர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு எங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறோம். ஆனால் நீங்கள் எடுக்கக்கூடிய செயல்களும் கூட உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவலாம். Uber உடன் ஓட்டும்போது பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் இந்த உதவிக்குறிப்புகளை உருவாக்க நாங்கள் சட்ட அமலாக்கத்துடன் கலந்தாலோசித்தோம்.

1. உங்கள் பயணியைச் சரிபார்த்தல்

உங்கள் உரிமத் தகடு, உங்கள் காரின் மேக் மற்றும் மாடல் மற்றும் அவர்களின் ஆப்பில் காட்டப்படும் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தின் பொருத்தம் ஆகியவற்றைச் சரிபார்ப்பதன் மூலம் உங்களைக் கண்டுபிடிக்குமாறு பயணிகளுக்குக் கூறப்படும். உங்கள் வாகனத்தில் நுழைவதற்கு முன்பு உங்கள் பெயரை உறுதிப்படுத்துமாறு பயணிகளிடம் நீங்கள் தாராளமாகக் கேட்கலாம்.

2. ஓட்டுவதிலேயே கவனத்தைச் செலுத்துதல்

விழிப்புடன் இருப்பது, சாலையைப் பார்த்தபடியே ஓட்டுவது, தூக்கக்கலக்கத்தில் ஓட்டுதலைத் தடுக்க, தேவைப்படும்போது ஓய்வெடுப்பது ஆகியவற்றின் மூலம் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் உதவ முடியும். நினைவில் கொள்ளுங்கள்: ஓட்டும் போது குறுஞ்செய்தி அனுப்புவது பெரும்பாலான மாநிலங்களிலும் நாடுகளிலும் சட்டவிரோதமானது. சில ஓட்டுநர்கள் ஆபத்தான கவனச்சிதறல்களைக் குறைக்க உதவுவதற்காக, தங்கள் தொலைபேசியை எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்க ஒரு மவுண்டைப் பயன்படுத்துகிறார்கள். சில நகரங்களில், சட்டங்கள் அவற்றைப் பயன்படுத்தும்படி வேண்டுகின்றன.

3. உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல்

ஆப்பின் மூலம் உங்கள் பயணியை நீங்கள் அழைக்கும்போதோ அவருக்குச் செய்தி அனுப்பும்போதோ உங்கள் தொலைபேசி எண்ணை அநாமதேயப்படுத்தும் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம், இதனால் அவர்கள் உங்கள் தனிப்பட்ட எண்ணைப் பார்க்க மாட்டார்கள்.*

4. சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை வழங்குங்கள்

பல இடங்களில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இருவரும் சீட் பெல்ட்டைப் பயன்படுத்துமாறு சட்டத்தால் வேண்டப்படுகிறது. {2/}Centers for Disease Control{3/} கூறுவதன்படி, உயிரைக் காப்பாற்றுவதற்கும், கார் விபத்துகள் தொடர்பான காயங்களைக் குறைப்பதற்கும் இது மிகவும் பயனுள்ள வழியாகும்.{4/}

5. பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் வருகிறார்களா எனப் பாருங்கள்

நடைபயிற்சியும் பைக்கிங்கும் செய்பவர்கள் குறித்து கவனமாக இருக்கும்படி சாலையின் பொதுவான விதிகள் கூறுகின்றன. நீங்கள் ஒரு இறங்குமிடம் அல்லது பிக்அப் இடத்தை நோக்கிச் செல்லும்போதும், இரவில் ஓட்டும்போதும் இது குறிப்பாக முக்கியமானது.

6. சட்டப்பூர்வமான இறங்குமிடங்களில் பயணிகளை இறக்கிவிடுங்கள்

பயணிகளின் இறங்குமிடம் குறித்த உள்ளூர் சட்டங்களை அறிந்திருப்பது, ஏற்றும் பகுதிகள், பார்க் செய்யப்பட்ட வாகனங்கள் போன்ற பலவற்றை நீங்கள் எதிர்கொள்ளும்போது உங்களுக்கு உதவும்.

7. உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள்

உங்கள் உள்ளுணர்வு மற்றும் அனுபவத்தை நம்புங்கள் மற்றும் Uber உடன் வாகனம் ஓட்டும்போது உங்கள் சிறந்த தீர்ப்பைப் பயன்படுத்துங்கள். நீங்கள் எப்போதாவது அவசரகாலச் சூழ்நிலையில் இருப்பதாக உங்களுக்கு உணர்வு ஏற்பட்டால், உங்கள் ஆப்பில் உள்ள அவசரநிலை பட்டனைப் பயன்படுத்தி அவசர உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் எந்த நேரத்திலும் பயணத்தை முடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. கனிவாகவும் மரியாதையுடனும் இருத்தல்

பாதுகாப்பிற்கான எங்கள் உறுதியளிப்பு

அனைவரின் பாதுகாப்புக்கும் Uber உறுதிபூண்டுள்ளது. ஆப்பிலும் அதற்கு அப்பாலும் பயணி மற்றும் ஓட்டுநர் அனுபவங்களில் பாதுகாப்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது உட்பட மேலும் அறிக.

பயணியின் பாதுகாப்பு

இலட்சக்கணக்கான பயணங்கள் தினமும் கோரப்படுகின்றன. ஒவ்வொரு பயணிக்கும் ஆப்-இன் உள்ளே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கான அணுகல் உள்ளது. உங்களுக்குத் தேவைப்படும்போது உதவ ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு சேவைக் குழு உண்டு.

*இந்த அம்சம் காலாவதியாகிவிட்டால், தொலைபேசி எண்கள் அநாமதேயப்படுத்தப்படாமல் போகலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو