ஊபர் பிளஸை அறிமுகப்படுத்துகிறோம்
ஊபர் பிளஸ் என்பது வெகுமதிகளை வழங்கும் திட்டமாகும், இது சிறப்பாகச் செயல்படும் ஓட்டுனர்களை அங்கீகரித்து, சாலையில் பயணம் செய்கின்ற மற்றும் செய்யாத உங்களின் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவுகிறது.
இது எப்படிச் செயல்படுகிறது?
புள்ளிகளைச் சம்பாதிக்கவும்
ஊபரில் சேர்ந்து வாகனம் ஓட்டுவதன் மூலம் புள்ளிகளைப் பெறலாம். சில குறிப்பிட்ட பயணங்கள் மற்ற பயணங்களை விட உங்களுக்கு அதிகப் புள்ளிகளைப் பெற்றுத்தரலாம். மேலும் விவரங்களை ட்ரைவர் ஆப்பில் பாருங்கள்.
பயணிகளுக்குத் தரமான சேவையை வழங்குகிறது
புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாமல், கோல்டு, பிளாட்டினம் மற்றும் டைமண்ட் வெகுமதிகளைப் பெற, நீங்கள் குறிப்பிட்ட மதிப்பீடுகளைத் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும். பகுதிக்கு ஏற்றவாறு தேவைகள் மாறுபடும். மேலும் தகவல்களுக்கு ட்ரைவர் ஆப்பைப் பாருங்கள்.
வெகுமதிகளைப் பெறவும்
அடுத்தடுத்த உயர் நிலையைப் பெற்றால், அதிக வெகுமதிகளும் கிடைக்கும். ஒரு நிலையான 3 மாதக் காலத்தில் உங்களின் புள்ளிகள் மற்றும் தர மதிப்பீடுகளின் அடிப்படையில் உங்கள் நிலை தீர்மானிக்கப்படுகிறது.
வெகுமதிகளை வேகமாகப் பெறுங்கள்
ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட நேரங்களில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்குக் கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். புள்ளிகளை எப்போது வேகமாகப் பெற முடியும் என்பதை ட்ரைவர் ஆப்பில் பாருங்கள்.
பயணிகளுக்குத் தரமான சேவை வழங்கினால் அதிக வெகுமதிகளைப் பெறலாம்
நீங்கள் Uber ஆப்பை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. கோல்டு, பிளாட்டினம் மற்றும் டைமண்ட் நிலையை அடையவும், தொடர்ந்து வெகுமதிகளைப் பெறுவதற்கும், நீங்கள் புள்ளிகளைப் பெறுவதோடு குறிப்பிட்ட மதிப்பீடுகளைத் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும். மேலும் தகவல்களைப் பெற, ட்ரைவர் ஆப்பில் உள்ள மெனு ஐகானைத் தட்டவும், பின்னர் Uber பிளஸ் என்பதைத் தட்டி திரையின் மேற்புறத்திற்கு அருகிலுள்ள வலது அம்புக்குறியைத் தட்டவும்.
நிலையான 3 மாதக் காலங்களில் புள்ளிகளைப் பெற்று வெகுமதிகளைப் பயன்படுத்தி மகிழுங்கள்
நிலையான 3 மாதக் காலங்களில் நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள். ஒவ்வொரு காலத்திற்கும் பின்பு புள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும்.
நீங்கள் வெகுமதிகளின் அடுத்த நிலைகளைப் பெறப் போதுமான புள்ளிகளைச் சம்பாதிக்கும் போது, அப்போதே உங்கள் புதிய வெகுமதிகளையும் பயன்படுத்தி மகிழத் தொடங்கலாம். அடுத்த 3 மாதக் காலத்தின் இறுதி வரை வெகுமதிகளைப் பயன்படுத்தி மகிழ, உங்கள் மதிப்பீட்டை அதிகமாகவும் ரத்து விகிதத்தைக் குறைவாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தத் திட்ட வெகுமதிகள் இடத்திற்கு இடமும் ஊபர் பிளஸ் நிலைக்கேற்றவாறும் மாறுபடும், மேலும் இது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்தப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ள வெகுமதிகள், ஊபர் பிளஸ் உள்ள எல்லா நகரங்களிலும் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் மற்றும் விதிவிலக்குகள் பொருந்தும். முழு விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.
நிறுவனம்