சேவை விலங்கு பயனர் வழிகாட்டி
பார்வையற்ற அல்லது குறைந்த பார்வைத் திறன் கொண்ட பயணிகள் நம்பகமான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து தீர்வுகளை பெறுவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.
Uber இன் சேவை விலங்குக் கொள்கையைக் கண்டறிவதற்கான வழிகாட்டி
கணினியில்
அணுகல் உதவி மையம்
- சேவை விலங்குக் கொள்கைக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
Uber ஆப்பில்
அணுகல் உதவி மையம்
- மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
- உதவிஎன்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- கீழே உருட்டி அணுகல்என்பதற்குச் செல்லுங்கள்.
- சேவை விலங்குகளுடன் பயணம் என்பதைத் தேர்ந்தெடுத்தபின்U.S என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சேவை விலங்கு கொள்கை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
சேவை விலங்கு மறுப்பை புகாரளித்தல்
எங்களின் பிரத்தியேக உதவிக் குழு, சேவை விலங்கு தொடர்பான சம்பவம் குறித்த அனைத்துப் புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, தீர்வு காணப்படுவதை உறுதிசெய்கிறது. இந்த அறிக்கைகளை எங்கள் அணுகல் உதவி மையத்திலிருந்து பதிவு செய்யலாம்.
சேவை விலங்கு மறுப்பை புகாரளிக்க பல வழிகள் உள்ளன:
Uber கணக்குகள் இல்லாத பயனர்களுக்கான கணினி
அணுகல் உதவி மையம்
- உங்கள் Uber உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி help.uber.com இணையதளத்திற்குள் உள்நுழையவும்.
- கீழே உருட்டி அணுகல்என்பதைக் கிளிக் செய்யவும்.
- "சேவை விலங்குக் கொள்கை" என்பதைத் தேடி, அமெரிக்க சேவை விலங்குக் கொள்கையை தேர்ந்தெடுக்கவும்.
- கீழே உருட்டி சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன்.என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நிறைவுற்ற பயணங்கள்
- உங்கள் Uber உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி help.uber.com இணையதளத்திற்குள் உள்நுழையவும்.
- பயணச் சிக்கல்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் பக்கத்தில், வரைபடத்தில் உள்ள பயண வரலாறு கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தி தொடர்புடைய பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பயணத்திற்கான பயண விவரங்களுக்கு கீழேமேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பொதுப் பிரச்சினைகள் பிரிவில் சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடு்க்கவும்.
Uber கணக்குகள் இல்லாத பயனர்களுக்கான கணினி
சேவை விலங்கு புகார் படிவத்தை இங்கேபார்க்கவும்.
Uber ஆப்பில்
அணுகல் உதவி மையம்
- மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
- உதவிஎன்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- பின்னர் அணுகல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தட்டவும்.
நிறைவுற்ற பயணங்கள்
- மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் தட்டவும்.
- உதவிஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் அனைத்து சிக்கல்களையும் பார்க்கவும்என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேவை விலங்குகளின் சிக்கலைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்பதைத் தட்டவும்.
By Phone
Call +1 (833) 715-8237 to reach Uber's Safety Incident reporting line. This phone number connects directly to a team of safety agents trained in the unique issues facing riders traveling with service animals.
கட்டணம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல்
இரத்து கட்டணம்
சேவை நிராகரிப்பின் காரணமாக உங்களிடம் ரத்து கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இப்பிரச்சனையைப் Uber இல் புகாரளிதன் மூலம் எங்கள் ஆதரவுக் குழுவால் இந்தக் கட்டணம் திருப்பியளிக்கப்படும். பணத்தைத் திரும்பப் பெறுதலுக்கான உங்கள் கட்டண முறையைச் செயல்படுத்த 5 வணிக நாட்கள் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
சேவை விலங்குகள் கொள்கை
Uber Driver ஆப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர் பார்ட்னர்கள், சேவை விலங்குகள் காரணமாக, சேவை விலங்குகளுடன் பயணம் செய்பவர்களுக்கு சேவையை மறுப்பதையும், சேவை விலங்குகளுடன் சவாரி செய்பவர்களிடம் பாகுபாடு காட்டுவதையும் மாநில மற்றும் மத்திய சட்டம் தடை செய்கிறது. Uber தனது சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விலங்கு கொள்கை இல், சட்டப்பூர்வக் கடமையை மீறி பாரபட்சமான நடத்தையில் ஈடுபடும் ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் ஆப்பைப் பயன்படுத்தும் திறனை இழக்க நேரிடும் என்பதை விளக்கியுள்ளது.
ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?
உங்கள் Uber கணக்க ு குறித்த கூடுதல் தகவல்களுக்கும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்பதற்கும், சமீபத்திய பயணம் குறித்த பின்னூட்டத்தை வழங்குவதற்கும் எங்களின் உதவி மையத்திற்குச் செல்லுங்கள்.
மாற்றுத் திறனாளி பயணிகளைக் கொண்டு செல்வது பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஓட்டுநர்களுக்கான இந்த ஆதாரங்களைப் பாருங்கள்.
*பிரான்சில் பொருந்தாது.