Please enable Javascript
Skip to main content

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்காமலும் போகலாம். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கம் அல்லது ஆப்பில் காணலாம்.

X small

Uber Auto

கட்டுப்படி ஆகும் விலையில் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே Uber Auto பயணத்தை ஆரம்பிக்கலாம்

search
Navigate right up
search
search
Navigate right up
search

Uber Auto உடன் அதைச் சாத்தியமாக்குங்கள்

மலிவான மற்றும் விரைவான பயணத்தைத் தேடுகிறீர்களா?

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே Uber Auto உடன் பயணத்தைத் தொடங்கலாம்.

உங்கள் முதல் 2 பயணங்களுக்கு 4 கிலோமீட்டருக்கு ரூ.29 முதல் விலை தொடங்குகிறது.


AUTO50 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தவும்.

Uber Auto உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்

வீட்டுவாசலில் பிக்அப்

தெருக்களில் ஆட்டோவைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே பயணத்தைத் தொடங்கலாம்.

செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றிடுங்கள்

நீங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு வர மறுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களால் சோர்வடைந்து விட்டீர்களா? உங்கள் நகரத்தைச் சுற்றி எங்கும் செல்ல Uber Auto வைக் கோருங்கள்.

பேரம் பேசத் தேவையில்லை

முன்கூட்டியே காட்டப்படும் மதிப்பிடப்பட்ட விலைகளுடன் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ பயணங்களைப் பெறுங்கள்.

எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான பயணம்

நேரடி GPS கண்காணிப்பு மற்றும் 24/7 பாதுகாப்பு ஆதரவு போன்ற தொழில்துறையின் முன்னணி பாதுகாப்பு அம்சங்களுடன், நீங்கள் இப்போது பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.

1. வேண்டுகோள்

ஆப்பைத் திறந்து "எங்கே செல்ல வேண்டும்?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். உங்கள் பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தியதும், Uber Autoவைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கான ஓட்டுநர் கிடைத்தவுடன், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையையும் கண்காணிக்க முடியும்.

2. பயணம்

வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.

ஓட்டுநரிடம் உங்களை வேகமாக வந்தடைவதற்கான வழிகளும் சேருமிடமும் இருக்கும். ஆனால், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் வரும்படி கோரலாம்.

3. இறங்குதல்

ஏற்கனவே கோப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் வாகனத்தில் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.

Uber பயணங்கள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் அமைந்திட உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுவது மூலம் எங்களுக்கு உதவிடுங்கள்.

உலகம் முழுவதும் பயணங்கள்

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*

1/9
1/5
1/3

நாடு, பிராந்தியம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடலாம்.

Uber ஆப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்துவதை Uber பொறுத்துக்கொள்ளாது. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நீங்கள் நம்பினால், தயவுசெய்து, ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.