Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

சர்ஜ் கட்டணமிடல் செயல்படும் முறை

ஓட்டுநருடன் பயணம் தேவைப்படும் ஒவ்வொரு நபரையும் அவர்கள் சேரும் இடங்களுக்குச் செல்ல உதவுவதற்கு சர்ஜ் கட்டணமிடல் எவ்வாறு உதவுகிறது என்பதை அறிக.

இது எப்படிச் செயல்படுகிறது?

பயணங்களுக்கான தேவை அதிகரித்தல்

சாலையில் போதுமான கார்கள் இல்லாத நிலையில் பலர் பயணக் கோரிக்கைகளை வைக்கும்போது அனைவருக்கும் உதவ இயலாத சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. உதாரணமாக மோசமான வானிலை, போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரம், சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் நேரம் போன்ற காலக்கட்டங்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே நேரத்தில் Uber-இல் பயணத்தைக் கோர வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.

கட்டணம் அதிகமாதல்

இதுபோன்ற தேவை அதிகம் உள்ள சமயங்களில் எவருக்கு அவசியமாகத் தேவையோ அவருக்குப் பயணம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு கட்டணம் அதிகரிக்கப்படலாம். இந்த முறைக்குப் பெயரே சர்ஜ் கட்டணமிடல். மேலும் இது Uber ஆப்பை ஒரு நம்பகமான தேர்வாக தொடர்ந்து இருக்கச் செய்ய உதவுகிறது.

பயணிகள் அதிகக் கட்டணம் செலுத்தலாம் அல்லது காத்திருக்கலாம்

சர்ஜ் கட்டணமிடல் காரணமாக கட்டணங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், பயணிகளுக்கு Uber ஆப் தெரியப்படுத்தும். கட்டணங்கள் குறைகிறதா என்று பார்க்க சிலர் காத்திருக்கலாம் என்று இருந்தாலும், சிலர் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பர்.

சர்ஜ் கட்டணமிடல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

விலைகள் சர்ஜ் ஆகும்போது, வழக்கமான கட்டணங்களின் பெருக்கியான கூடுதல் சர்ஜ் தொகை அல்லது சர்ஜ் தொகையை உள்ளடக்கிய ஒரு வெளிப்படையான தொகை உங்கள் ஆஃபர் கார்டில் தோன்றும். உங்கள் நகரத்தைப் பொறுத்து இது மாறுபடும். சர்ஜ் விலை மாற்றத்தின்போது Uber-இன் சேவைக் கட்டணச் சதவீதம் மாறாது.

நிகழ்நேரத் தேவைக்கேற்ப கட்டணங்கள் புதுப்பிக்கப்படும் என்பதால், சர்ஜ் விரைவாக மாறலாம். சர்ஜ் கட்டணம் ஒரு நகரத்தில் பகுதிகளுக்கு ஏற்ப இருக்கும். இதனால் ஒரு சமயத்தில் எல்லாப் பகுதிகளிலும் சர்ஜ் விலை மாற்றம் இருக்கும் என்று கூறமுடியாது.

ஆப்பில் சர்ஜை எவ்வாறு கண்டறிவது

உங்கள் நகரத்தில் சர்ஜ் விலை மாற்றம் பொருந்துகின்ற பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேவை அதிகமானால், அந்தப் பகுதியின் நிறம் மாறும். வரைபடத்தில் உள்ள வண்ணப் பகுதி வெளிர் ஆரஞ்சு நிறம் முதல் அடர்ந்த சிவப்பு நிறம் வரை இருக்கும். வெளிர் ஆரஞ்சு நிறப் பகுதிகள் சர்ஜ் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதையும், அடர் சிவப்பு நிறப் பகுதிகள் சர்ஜ் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதையும் குறிக்கும்.

சந்தையை மேம்படுத்த நாங்கள் பணியாற்றும்போது, இந்தத் தளத்தில் விவரிக்கப்படாத வழிகளில் நாங்கள் செயல்பாட்டையும் விலையிடலையும் சரிபார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو