ஆடியோ ரெக்கார்டிங்
நம்பிக்கையுடன் பயணம் செய்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், எங்கள் பயணங்களைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் எங்களின் கவனம் உள்ளது.
பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை
பயணத்தின்போது உங்களுக்கு சங்கடமாக இருந்தால், பயணத்தின் ஆடியோவை இப்போது நீங்கள் ஆப்பிலேயே ரெக்கார்டு செய்யலாம்.
ஆடியோ ரெக்கார்டிங் விருப்பத்தை அணுக, பாதுகாப்பு அம்சத்தின் ஷீல்டைக் கிளிக் செய்யவும். ஆப்பினுள் பயணம் ரெக்கார்டு செய்யப்படும். தேவைப்பட்டால், பயணம் முடிந்த பிறகு அதை நீங்கள் Uber உடன் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது
வாகனத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படாது. எல்லா ஆடியோவும் மறைகுறியாக்கப்ப ட்டு, உங்கள் சாதனத்திலேயே இருக்கும். ரெக்கார்டிங்கை ஓட்டுநர்களோ பயணிகளோ கேட்க முடியாது.
Uber விசாரணை செய்வதற்கு உதவுங்கள்
பாதுகாப்பு குறித்த புகார்களை நாங்கள் தீவிரமாகக் கருத்தில் கொள்கிறோம். நீங்கள் ஒரு புகாரைப் பதிவு செய்தால், அதில் இணைக்கப்பட்டுள்ள ரெக்கார்டிங்கை எங்களின் பாதுகாப்புக் குழு மதிப்பாய்வு செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- Uber ஆப்பில் ஆடியோ ரெக்கார்டிங் அம்சம் என்றால் என்ன?
ஆடியோ ரெக்கார்டிங் என்பது பயணங்களின்போது ஆப்பின் மூலம் பாதுகாப்பான, வசதியான தொடர்புகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய திறனா கும். பயனரால் மட்டுமே ரெக்கார்டிங்குகளைச் செயல்படுத்த முடியும், மேலும் அவை சாதனத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கேட்க முடியாது. ஆனால் Uber ஆப்பின் மூலம் அனுப்பப்படும் பாதுகாப்பு அறிக்கையுடன் மட்டுமே இணைக்க முடியும். அது நிகழாத பட்சத்தில், Uber ஆல் எந்த உள்ளடக்கத்தையும் அணுக முடியாது.
- ஆடியோ ரெக்கார்டிங்கை Uber ஆப்பில் எங்கு காணலாம்?
அதைப் பாதுகாப்புக் கருவித்தொகுப்பில் கண்டறியலாம். பயணத்தை மேற்கொள்ளும்போது வரைபடத்தில் உள்ள ஷீல்டு ஐகானைத் தட்டுவதன் மூலம் கண்டறியலாம்.
நாங்கள் தற்போது பயணிகளுக்கான ஆடியோ ரெக்கார்டிங் அம்சத்தை மேம்படுத்தி வருகிறோம். இன்னும் சில வாரங்களில் அது மீண்டும் கிடைக்கும்
- ஆடியோ ரெக்கார்டிங்கை நான் எவ்வாறு பயன்படுத்தலாம்?
இந்த அம்சம் கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களின் ஸ்மார்ட்ஃபோன்களின் மூலம் ரெக்கார்டிங்கைச் செய்யலாம். இந்த அம்சம் கிடைக்கப்பெறுவது குறித்து பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, ரெக்கார்டிங் செய்யும்போது அதுகுறித்து வாகனத்தில் உள்ள மற்றொரு தரப்பினருக்கு அறிவிக்கப்படாது.
- ஆடியோ ரெக்கார்டிங்கை யார் பயன்படுத்தலாம்?
பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் தங்களின் சாதனத்தின் மூலம் தனித்தனியே ரெக்கார்டு செய்து கொள்ளலாம். பாதுகாப்பு அறிக்கையுடன் இணைக்கப்படும் ரெக்கார்டிங்கை மட்டுமே Uber கேட்க இயலும். சட்டப்பூர்வமாகத் தேவைப்பட்டால், பகிரப்பட்ட ரெக்கார்டிங்கைச் சட்ட அமலாக்கம் போன்ற தகுதிவாய்ந்த ஆணையத்திற்கு Uber வழங்கலாம்.
- ரெக்கார்டிங்கை ஓட்டுநரோ பயணியோ பின்னர் கேட்க இயலுமா?
இல்லை, வாகனத்தில் உள்ளவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க, ரெக்கார்டு செய்யப்பட்ட உள்ளடக்கம் மறைகுறியாக்கப்படும். அதை ஓட்டுநர்களோ பயணிகளோ கேட்க முடியாது.
- நான் ரெக்கார்டு செய்ய விரும்பவில்லை என்றால் என்ன செய்வது?
இது கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், தங்களின் சொந்தப் பாதுகாப்புக்காக பொதுவாகப் பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களின் உரையாடலை ரெக்கார்டு செய்ய அனுமதிக்கப்படுவர். இந்தத் தளத்தை அனைவருக்குமான ஒரு பாதுகாப்பான தளமாகச் செய்ய முயலுவதோடு, அந்த நகரங்களில் உள்ள மக்களின் சட்ட உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
உங்கள் தனியுரிமையை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கருத்தில் கொள்கிறோம், மேலும் ஆடியோ ரெக்கார்டிங்கின் மதிப்பாய்வு தேவைப்படக்கூடிய சூழலில் அதற்கென ஒரு தனிப்பட்ட குழு Uber-இல் உள்ளது. பாதுகாப்பு சம்பவத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத ஒரு ரெக்கார்டிங்கை நாங்கள் பெற்றால், அதை நீக்கி விடுவோம்.
- நான் அதை Uber-க்கு அனுப்பாவிட்டாலும் கூட Uber அதை அணுக முடியுமா?
இல்லை, பாதுகாப்பு அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்காத பட்சத்தில், Uber அந்த ரெக்கார்டிங்கை அணுக முடியாது.
- நான் வேறொருவருடன் அழைப்பில் இருக்கும்போதும் ரெக்கார்டிங் தொடர்ந்து இயங்குமா?
இல்லை, மைக்ரோஃபோனை உங்கள் ஃபோன் கட்டுப்படுத்தி, ரெக்கார்டிங் செயல்பாட்டைத் தானாகவே நிறுத்திடும். உங்கள் அழைப்பை முடித்த பிறகு நீங்கள் அதை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். WhatsApp போன்ற மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் பிற ஆப்களுக்கும் இது பொருந்தும்.
- ரெக்கார்டிங் செய்யப்படும்போது Uber அதைக் கேட்கிறதா?
இல்லை, ரெக்கார்டிங் உங்கள் சாதனத்திற்குள்ளேயே இருக்கும். வேறு எவராலும் அதைக் கேட்க முடியாது. Uber-க்கு நீங்கள் அதைப் பகிர்ந்தால் மட்டுமே, சாத்தியமான பாதுகாப்புச் சம்பவத்துக்காக Uber அதை மதிப்பாய்வு செய்ய இயலும்.
- நான் ரெக்கார்டு செய்வது ஓட்டுநர் / பயணிக்குத் தெரியுமா?
இல்லை, வாகனத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படாது. எந்தவொருவரும் ரெக்கார்டிங் செய்யத் தொடங்கலாம். இதன் மூலம் தனியுரிமைப் பாதுகாக்கப்படுகிறது.
- எவ்வளவு சேமிப்பகம் தேவைப்படும்?
இது சாதனத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் பொதுவாக 5-7 நிமிடங்கள் கொண்ட ரெக்கார்டிங் உங்கள் சாதனத்தில் 1எம்.பி இடத்தைப் ஆக்கிரமித்துக் கொள்ளும் (இது ஒரு WhatsApp படத்தைப் போன்ற அதே அளவிலானதுதான்).
- Uber உடன் பகிர எவ்வளவு டேட்டா செலவாகும்?
ரெக்கார்டிங்கை இணைத்து ஒரு பாதுகாப்பு அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க விரும்பினால், முதலில் உங்கள் சாதனத்தை வைஃபையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால், வழக்கமான டேட்டா கட்டணங்கள் பொருந்தும்.
- நான் ரெக்கார்டிங்கை எவ்வாறு பகிர்வது?
இப்போதே பகிர்தல்: பயணத்தின் முடிவ ில் ஒரு பாப்-அப் விண்டோ தோன்றும், அதன் மூலம் Uber உடன் பகிரலாம்.
பின்னர் பகிர்தல்: பயண வரலாற்றுக்குச் சென்று, பயண விவரங்களின் கீழ் ரெக்கார்டிங்கைக் கண்டுபிடித்து Uber உடன் பகிரலாம்.
பயணம் முடிந்த பிறகே Uber உடன் ஆடியோவைப் பகிர முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
- ரெக்கார்டிங்கை நான் Uber உடன் பகிர்ந்த பிறகு என்ன நடக்கும்?
Uber இன் பாதுகாப்புக் குழு உறுப்பினர் உங்கள் அறிக்கையை மதிப்பாய்வு செய்து, ரெக்கார்டிங்கைக் கேட்பார். மதிப்பாய்வைப் பொறுத்து, எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒரு ரெக்கார்டிங்கைத் தற்செயலாக நீக்கிவிட்டேன். அதை மீட்க ஏதாவது வழி இருக்கிறதா?
இல்லை, உள்ளடக்கம் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும். நீங்க ள் அதை நீக்கினால், Uber-ஆல் அதை மீட்டெடுக்க இயலாது.
- ரெக்கார்டிங் எப்போது தொடங்கும்?
பாதுகாப்புக் கருவித்தொகுப்பு மூலம் தொடங்கும்போது மட்டுமே ரெக்கார்டிங் தொடங்கிடும்.
- ரெக்கார்டிங் எப்போது நிறுத்தப்படும்?
பாதுகாப்புக் கருவித்தொகுப்புக்குச் சென்று நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரெக்கார்டிங்கை நிறுத்தலாம்.
- ரெக்கார்டிங்கை நிறுத்துவதற்கு நான் மறந்துவிட்டால் என்ன ஆகும்?
பயணிகளைப் பொறுத்தவரை, பயணம் முடிந்த பிறகு ரெக்கார்டிங் தானாகவே நிறுத்தப்படும். ஓட்டுநர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆஃப்லைனுக்குச் செல்லும்போது ரெக்கார்டிங் நிறுத்தப்படும்.
- நான் Uber ஆப்பில் இல்லாதபோதும் / அதிலிருந்து வெளியேறிய பின்பும் ரெக்கார்டிங் இயக்கத்தில் இருக்குமா?
பயணத்தின்போது நீங்கள் வேறு ஆப்களுக்கு மாறினாலும் உங்கள் ஃபோனைப் பூட்டினாலும், ரெக்கார்டிங் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். நீங்கள் Uber ஆப்பை விட்டு வெளியேறினால் ரெக்கார்டிங் நிறுத்தப்படும்.
- ரெக்கார்டிங் கோப்பு எங்கு சேமிக்கப்படுகிறது?
ஆடியோ ரெக்கார்டிங் மறைகுறியாக்கப்பட்டு Uber ஆப்பின் ஆப் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுகிறது, கோப்பு முறைமையிலிருந்து இதை அணுக முடியாது. பயண வரலாற்றை அணுகுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்களால் சாதனத்திலிருந்து ரெக்கார்டிங்கை நீக்க இயலும்.
- ரெக்கார்டிங்கை யார் கேட்க முடியும்?
ரெக்கார்டிங்கைக் கேட்பதற்கான அணுகல் Uber பாதுகாப்புக் குழுவுக்கு மட்டுமே உள்ளது. மேலும் அது ஒரு பயணி அல்லது ஓட்டுநரால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதைக் குழுவால் அணுக முடியும். தேவைப்பட்டால், பகிரப்பட்ட ரெக்கார்டிங்கைச் சட்ட அமலாக்கம் போன்ற தகுதிவாய்ந்த ஆணையத்திற்கு Uber வழங்கலாம்.
அறிமுகம்
அறிமுகம்