முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஊபர் ஹீரோ வழிகாட்டி

ஊபர் ஹீரோ என்பது ஊபரின் தளத்தில் மற்ற நபர்களை வெற்றிக்கு வழிநடத்துவதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கும் வணிகத்தை வளர்ப்பதற்கும் உங்களுக்கு உதவுகிற ஒரு புதுமையான திட்டமாகும்.

இதைத் தொடங்குவது அனைவருக்கும் சுலபமானது என்றாலும், ஊபர் ஹீரோவில் வெற்றி பெறுவதற்கு திறமையும், பயிற்சியும், அர்ப்பணிப்பும் தேவை.

ஊபர் ஹீரோவின் முக்கியப் பகுதிகள் குறித்த வழிகாட்டியை நீங்கள் இங்கு காணலாம்.

லீடைச் சேர்த்தல்

ஒருவர் ஓட்டுநர் அல்லது கூரியர் ஆக மாறுவதற்கு உங்கள் உதவி தேவை என்று நீங்கள் கண்டறிகின்ற நபரே லீட் ஆவார். கீழேயுள்ள படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது இந்தச் சிறு வீடியோவைப் பார்ப்பதான் மூலம் அவர்களை ஊபர் ஹீரோ ஆப்பில் எப்படிச் சேர்ப்பது என்பதை அறிந்திடுங்கள்.

‘ஓட்டுநரைச் சேர்’ என்பதைத் தட்டவும்

கணினியில், திரையின் மேல் வலதுபுறத்தில் 'ஓட்டுநரைச் சேர்' என்ற விருப்பத்தைக் காணலாம். மொபைலில், திரையின் கீழ் வலதுபுறத்தில் இருக்கின்ற ஐகானைத் தட்டி ஓட்டுநரைச் சேர்க்கலாம்.

ஓட்டுநர் விவரங்களை நிரப்பவும்

உங்கள் லீடின் அடிப்படை விவரங்களை (பெயர், ஃபோன் எண் மற்றும் நகரம்) உள்ளிடவும். உள்ளிட்டு முடித்த பின்னர், தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

லீட் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கவும்

ஊபரிடமிருந்து உங்கள் லீடுக்கு ஒரு SMS அனுப்பப்படும். 1) நீங்கள் ஒரு அதிகாரப்பூர்வ ஊபர் ஹீரோ என்பதையும் 2) உங்கள் லீட் உங்களது உதவிக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் என்பதையும் சரிபார்ப்பதற்கான வழி இது.

ஓட்டுநர் அகௌண்டை அமைத்தல்

உங்களுடைய லீட் பெறும் SMS செய்தியில் ஊபர் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குமாறு அழைக்கும் ஓர் இணைப்பு காணப்படும். இதை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் உதவலாம்.

உங்கள் பட்டியலிலிருந்து அவர்களின் தகவல்கள் நீக்கப்படுவதற்கு முன்பு, லீடு தனது செயல்முறையை முடிப்பதற்கு 14 நாட்கள் அளிக்கப்படும்.

ஆவணங்களைப் பதிவேற்றுதல்

உங்கள் லீடுக்கான ஆவணங்களைப் பதிவேற்ற ஊபர் ஹீரோ உங்களை அனுமதிக்கிறது. இதனால் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை உங்களிடம் கொடுப்பதுதான். எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதை நீங்கள் ஹீரோ ஆப்பில் காணலாம்.

ஓட்டுநரின் சுயவிவரத்தைத் திறக்கவும்

பெயர், மின்னஞ்சல் அல்லது ஃபோன் எண் மூலமாகத் தேடுவதன் மூலம் அல்லது லீட் பட்டியலை ஸ்கிரோல் செய்வதன் மூலம் லீடைக் கண்டறியலாம். உங்களுடைய ஆப்பில் அவர்களின் பெயரைக் க்ளிக் செய்து அவர்களின் சுயவிவரப் பக்கத்தைக் காணலாம்.

பதிவேற்றுவதற்கான ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் பதிவேற்றுவதைக் கண்டறிய ஆவணங்களின் பட்டியலை ஸ்கிரோல் செய்யவும்.

பதிவேற்றும் கருவியைத் திறக்கவும்

பதிவேற்றும் கருவிக்குக் கொண்டுவர வேண்டிய ஆவணத்தின் பெயரைக் க்ளிக் செய்யவும். உங்கள் புகைப்பட லைப்ரரியிலிருந்து படத்தை எடுத்துப் பதிவேற்றலாம் அல்லது ஃபோன் கேமரா மூலம் அதைப் படமெடுத்துப் பதிவேற்றலாம்.

பதிவேற்றம் முடிந்தது!

ஆவணத்தின் நிலை 'பதிவேற்றப்பட்டது' என்று மாறி, பதிவேற்றம் வெற்றிகரமாக முடிந்திருந்தால் பச்சை நிறமாக மாறும்.

ஆவணத்தின் நிலையைச் சரிபார்த்தல்

ஓட்டுநராக லீட் ஆவதற்கு அனைத்து ஆவணங்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும். 'தேவையான ஆவணங்கள்' என்ற பிரிவில் உள்ள எந்தவொரு சுயவிவரத்தையும் க்ளிக் செய்வதன் மூலம் அல்லது மேல் பட்டியில் ‘ஓட்டுநரைத் தேடு' என்பதைப் பயன்படுத்துவதன் மூலம், ஆவணங்களின் நிறைவு எந்த நிலையில் உள்ளது என்று பார்க்கலாம்.

தேவையான ஆவணம்

ஆவணம் இதுவரை பதிவேற்றப்படவில்லை.

மதிப்பாய்வுக்காகக் காத்திருக்கிறது

ஆவணம் காத்திருப்பு வரிசையில் உள்ளது. விரைவில் ஊபரால் மதிப்பாய்வு செய்யப்படும்.

அங்கீகரிக்கப்பட்டது

ஆவணத்திற்கு ஊபர் ஒப்புதல் அளித்துவிட்டது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.

நடவடிக்கை தேவை

ஊபரால் ஆவணம் நிராகரிக்கப்பட்டது. ஆவணத்தைக் க்ளிக் செய்தால், நிராகரிக்கப்பட்டதிற்கான காரணத்தை நீங்கள் காண்பீர்கள். இதன்மூலம் நீங்கள் நடவடிக்கை எடுத்து, முடிந்தால் பிரச்சனையைச் சரிசெய்யலாம்.

நிராகரிக்கப்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்றுதல்

அனைத்து ஹீரோக்களும் ஆவண நிராகரிப்பு நிலையை அனுபவித்திருப்பார்கள். ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு அவற்றின் செல்லுபடியை இருமுறை சரிபார்த்து நிராகரிப்பைக் குறைக்கலாம். மீண்டும் பதிவேற்றுவது எப்படி என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட ஆவணத்தைக் கண்டறியவும்

'நடவடிக்கை தேவை' என்ற நிலையில் இருக்கின்ற ஆவணத்தைக் கண்டறிய, ஆவணங்களின் பட்டியலை ஸ்கிரோல் செய்யவும்.

பிரச்சனையைக் கண்டறியவும்

நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தைக் காண்பதற்கு, 'நடவடிக்கை தேவை' எனக் குறிக்கப்பட்ட ஆவணத்தை க்ளிக் செய்யுங்கள்.

சிக்கலைத் தீர்த்தல்

சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் லீடுடன் பேசுங்கள். ஊபர் ஹீரோ ஆப் மூலம் நீங்கள் அவர்களுக்கு நேரடியாகச் செய்தி அனுப்பலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆவணத்தைச் சேர்த்தல்

சிக்கல் தீர்க்கப்பட்டது உறுதியான பிறகு, உங்களால் ஆவணத்தை மீண்டும் பதிவேற்ற முடியும். 'நடவடிக்கை தேவை' என்பதைக் கிளிக் செய்த பின்னர் 'ஆவணத்தைச் சேர்' என்பதை கிளிக் செய்யுங்கள்.

வாகனத் தகுதியைச் சரிபார்த்தல்

ஒரு வாகனத்தை ஒருமுறை மட்டுமே ஊபரில் பதிவுசெய்ய முடியும். நேர விரயத்தைத் தவிர்க்க, உங்கள் ஓட்டுநரின் வாகனம் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

டெஸ்க்டாப் திரையின் மேல் வலது ஓரத்தில் 'வாகனத் தகுதியைச் சரிபார்க்கவும்’ என்பதைக் கண்டறியவும். மொபைலில், திரையின் கீழ் வலது ஓரத்தில் உள்ள 'மேலும்' மெனுவைக் கிளிக் செய்யவும்.

வாகன உரிம எண் ஏற்கனவே ஊபரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க அதை உள்ளிடவும்.

லீட்கள் மற்றும் சம்பாத்தியங்களை நிர்வகித்தல்

புதிய அகௌண்ட்களை உருவாக்குவதற்கும் முன்னேற்றத்தை நிர்வகிப்பதற்கும் பணம் பெறுவதற்கும் ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வீடியோவைப் பாருங்கள்.

ஓட்டுநரின் பயண நிலை

தேடல் பட்டியை உபயோகிப்பதன் மூலம் அல்லது 'ஓட்டுநர்கள்' என்பதை மென்மையாகத் தொடுவதன் மூலம் ஓட்டுநரைக் கண்டறியுங்கள். சுயவிவரத்தைக் காண அவர்களின் பெயரைக் கிளிக் செய்யுங்கள்.

அவர்கள் எத்தனைப் பயணங்களை முடித்துள்ளனர், உங்களின் ஹீரோ கட்டணத்தைப் பெறுவதற்கான வரம்புக்கு அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிற முன்னேற்றப் பட்டியை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும் அவர்களின் கடைசிப் பயணத்தின் தேதியையும், ஊபர் மூலம் அவர்களின் அகௌண்ட் செயல்படுத்தப்பட்ட தேதியையும் நீங்கள் காணலாம்.

ஓட்டுநரைத் தொடர்புகொள்ளுதல்

தேடல் பட்டியை உபயோகிப்பதன் மூலம் அல்லது 'ஓட்டுநர்கள்' என்பதை மென்மையாகத் தொடுவதன் மூலம் ஓட்டுநரைக் கண்டறியுங்கள். சுயவிவரத்தைக் காண அவர்களின் பெயரைக் கிளிக் செய்யுங்கள்.

திரையின் மேல் வலது மூலையில், ஒரு ஸ்பீச் பபிள் ஐகானைக் காணலாம். தொடர்பு விருப்பங்களைத் திறக்க அந்த ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.

உங்கள் சம்பாத்தியத்தைக் கண்காணித்தல்

எல்லா ஓட்டுநர் சுயவிவரத்திலும், அந்தப் பக்கத்தின் மேற்புறத்திற்கு அருகில் 'முடிக்கப்பட்ட பயணங்கள்' என்பதைக் காட்டுகிற அவர்களின் முன்னேற்றப் பட்டியை நீங்கள் காணலாம்.

உங்கள் ஹீரோ வணிகத்தின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், ஓட்டுநரால் பயணங்கள் பட்டி நிரப்பப்படும்போது நீங்கள் எவ்வளவு தொகையைப் பெறுவீர்கள் என்பது காட்டப்படும்.

நீங்கள் உரிமையாளராக இல்லாத பட்சத்தில், பயணத்தின் வரம்பை நோக்கிய ஓட்டுநரின் முன்னேற்றத்தை மட்டுமே காண்பீர்கள். செலுத்தும் கட்டணத்தைக் காண முடியாது.

உங்கள் ஓட்டுநர்கள் வெற்றிபெற உதவுங்கள்

ஊபரின் வழங்கல்கள், ஓட்டுநரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் போன்றவை குறித்து ஊபர் தளத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஊபருடன் நீண்டகால வெற்றியைப் பெறும் சிறந்த வாய்ப்பை உங்கள் ஓட்டுநர்களுக்கு வழங்கிடுங்கள்.

 • வாகனத் தேவைகள்

  தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாகனத்தைக் கண்டறிவதில் நீங்கள் உங்கள் ஓட்டுநருக்கு உதவுவது, அவர்களின் இலாபத்தை அதிகரித்து நேர விரயத்தைக் குறைத்திடும்.

  மேலும் அறிக
 • வாகன விருப்பங்கள்

  ஓட்டுநர்களிடம் சொந்த வாகனம் இல்லை என்றாலும் கூட, குத்தகைக்கு அல்லது வாடகைக்கு எடுத்து தொடங்குவதற்கான விருப்பங்கள் அவர்களுக்கு உள்ளன. சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய உங்கள் ஓட்டுநருக்கு உதவுங்கள்.

  மேலும் அறிக
 • காரைத் தயார் செய்தல்

  உங்கள் ஓட்டுநர் சிறந்த முறையில் பயணங்களைத் தொடங்கத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகளும், யுக்திகளும் உள்ளன.

  மேலும் அறிக
1/3

அதிக லீட்களைக் கண்டறிதல்

ஊபருடன் வாகனம் ஓட்டுவதற்கான நபர்களைக் கண்டுபிடிப்பதே ஹீரோவின் முதல் பணி. உங்கள் அடைவதலை அதிகரிக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் இங்குள்ளன.

நிகழ் உலக சந்தைப்படுத்தல்

பெரும்பாலான ஹீரோக்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களைப் பயன்படுத்தியே தொடங்குகின்றனர். நீங்கள் வளர்ச்சியடையும்போது, இவற்றின் மூலம் இன்னும் நிறைய நபர்களைக் கண்டறிந்து ஆட்சேர்க்கலாம்:

தெரு அணிகள்

ஒருசில நபர்களை அணிதிரட்டி, மும்முரமாக உள்ள பொது இடத்திற்குச் சென்று புதிய லீட்களைக் கண்டறிந்து ஆட்சேர்க்கலாம். இது பரந்த அளவிலான நபர்களுடன் தனிப்பட்ட முறையில் இணைவதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

நெட்வொர்க்கிங் நிகழ்வுகள்

பயனுள்ளதாகவும், குறைந்த செலவில் பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் என்பவை குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்திற்கு லீட்களை அழைத்து உங்களின் வழங்கல் மூலம் அவர்களை ஈர்ப்பதை உள்ளடக்குகிறது.

ஃபிளையர் விநியோகித்தல்

ஆட்சேர்ப்பு குறித்த செய்தி மற்றும் வணிக விவரங்களை ஃப்ளையரில் பிரிண்ட் செய்து விநியோகியுங்கள். பிராண்ட் கிட்டிலிருந்து ஊபர் லோகோவைப் பெறுங்கள்.

ஆன்லைன் மார்க்கெட்டிங்

இதற்கு சற்று செலவாகும். மேலும் இது எளிதானதும் இல்லை. உலகம் முழுவதுமுள்ள மிகவும் வெற்றிகரமான ஹீரோக்களில் சிலர் ஆன்லைன் மார்க்கெட்டிங்கை கற்றுத் தேர்ந்ததற்கு காரணம் இருக்கத்தான் செய்கிறது. இதில் அடங்குபவை:

சமூக ஊடகம்

Facebook, Twitter, Instagram, Linkedin, இன்னும் பிற சமூக ஊடகத் தளங்கள், கட்டண விளம்பரங்கள் மூலம் சரியான நபர்களை அடைவதை எளிதாக்குகின்றன. படிப்படியான உதவிக்கு, ஒவ்வொரு தளத்திற்கும் சென்று பார்வையிடுங்கள்.

கட்டண விளம்பரங்கள்

சமூக ஊடக மார்க்கெட்டிங்கைப் போன்று, உங்கள் பார்வையாளர்கள் பார்வையிடுகின்ற தளங்களில் உங்களின் செய்தியைப் பதிவேற்ற நீங்கள் பணம் செலுத்துவீர்கள். ஆன்லைனில் தேடுவதன் மூலம் கூடுதல் தகவல்களைக் கண்டறியலாம்.

மின்னஞ்சல் மார்க்கெட்டிங்

சாத்தியமான லீட்களின் பட்டியலுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.