நம்பிக்கையுடன் ஓட்டுங்கள்
வாய்ப்பு எங்கிருந்தாலும் அங்கு செல்வதற்கு நீங்கள் தகுதியானவர். உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க உதவும் சாலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் அங்கு சென்றடையுங்கள்.
முகக்கவசங்கள் இனி தேவையில்லை
ஏப்ரல் 19, 2022 நிலவரப்படி, Uber-ஐப் பயன்படுத்தும்போது பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. எனினும், உங்களுக்கு சில தனிப்பட்ட ஆபத்து காரணிகள் இருந்தாலோ மற்றும்/அல்லது உங்கள் பகுதியில் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிக அளவில் இருந்தாலோ, முகக்கவசத்தை அணியுமாறு CDC பரிந்துரைக்கிறது.
நினைவில் கொள்ளவும்: தனிப்பட்ட அல்லது குடும்ப ஆரோக்கிய சூழ்நிலைகளின் காரணமாக பலர் இன்னும் முகக்கவசத்தை அணிவதைப் பாதுகாப்பாக உணரலாம், எனவே அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கவும். மேலும் நீங்கள் எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்தால், பயணத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.
முன் இருக்கையில் பயணிகள் உட்கார முடியாது என்ற கொள்கையைப் புதுப்பிக்கிறது
பயணிகள் இனி பின் இருக்கையில் அமர வேண்டியதில்லை. இருப்பினும், உங்களுக்கு அதிக இடத்தை வழங்குவதற்காக, பயணிகள் தங்கள் குழுவின் அளவைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் மட்டுமே முன் இருக்கையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ள உதவியதற்கு நன்றி
தொற்றுநோய் காலம் கடினமாக இருந்தது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும், முகக்கவசம் அணிதல், ஒருவருக்கு ஒருவர் இடம் கொடுத்தல், அல்லது மக்களுக்குத் தேவையான உணவைப் பெற உதவுதல்—என எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் நம் சமூகப் பாதுகாப்பிற்காகக் கூடுதல் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.
வாகனம் ஓட்டும் போதும் டெலிவரி செய்யும் போதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது இன்னும் முக்கியம். எனவே கூடுதல் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களை கீழே இறக்கிக்கொள்வதை, பயணங்கள் அல்லது டெலிவரிகளுக்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை சானிடைஸ் செய்துகொள்வதை மற்றும் இருமல் அல்லது தும்மல் வந்தால் எப்போதும் முகத்தை மறைத்துக்கொள்வதை உறுதி செய்யவும்.
தொடக்கம் முதல் இறுதி வரையிலான எங்களின் பாதுகாப்புத் தரநிலை
Uber-இன் புதுமையான தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற, பொறுப்பைப் பகிர்வதை ஊக்குவிக்கின்ற, சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை உள்ளடக்குகின்ற இந்தப் புதிய நடவடிக்கைகள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொடக்கம் முதல் இறுதி வரையிலான எங்களின் பாதுகாப்புத் தரநிலை
உங்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் புதிய நடவடிக்கைகள்.
இதில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்
உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க, அனைத்துப் பயணிகளும் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் அதிக இடைவெளியை விடும் பொருட்டு, பயணிகள் இனி முன் இருக்கையில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முகமூடியைச் சரிபார்த்தல்
நீங்கள் ஆன்லைனுக்குச் செல்வதற்கு முன், உங்களைப் புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் நீங்கள் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்திருக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொருட்கள்
உங்களுக்கு முகமூடிகள், கிருமிநாசினிகள் மற்றும் கையுறைகள் போன்ற சுகாதார மற்றும் பாதுகாப்புப் பொருட்களை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நிபுணர் தலைமையிலான வழிகாட்டுதல்
பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
பயணப் பாதுகாப்பு குறித்த பின்னூட்டம்
‘பயணி முகமூடி அல்லது மாஸ்க் அணியவில்லை’ என்பது போன்ற உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் குறித்த பின்னூட்டத்தை இப்போது நீங்கள் தெரிவிக்க முடியும். இது எங்களை மேம்படுத்துவதற்கும் அனைவரையும் பொறுப்புடையவர்களாக மாற்றுவதற்கும் உதவுகிறது.
பாதுகாப்பான அனுபவத்தை வடிவமைத்தல்
உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அம்சங்கள்
உங்கள் அன்புக்குரியவர்களுடனும், எங்கள் ஆதரவுக் குழுவினருடனும் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையிலான தொழில்நுட்பத்துடன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தொடர்ந்து மேலும் செல்லலாம்.
உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி
பிரத்யேகமாகப் பயிற்சியளிக்கப்பட்ட சம்பவப் பதிலளிப்புக் குழுவினர், எந்த நேரத்திலும் ஆப்பில் உடனடியாகக் கிடைக்கப்பெறுவர்.
ஒரு சமதர்மச் சமூகம்
நகரங்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களுடனான எங்களது கூட்டு முயற்சிகள் மூலமும், ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும், அனைவருக்கும் பாதுகாப்பான பயணங்களை எங்களால் உருவாக்க முடிகிறது.
உங்கள் பாதுகாப்பே எங்களின் உந்துதல்
ஒவ்வொரு அம்சத்திலும் பாதுகாப்பை வடிவமைத்துள்ளோம். இதனால் இரவு வேளையிலும் நீங்கள் சிரமமின்றி வாகனம் ஓட்டிச் செல்லலாம். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று அன்பானவர்களிடம் கூறலாம். எனவே, ஏதேனும் நடந்தால் உங்களுக்காக உதவ ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.*
24/7 சம்பவ ஆதரவு
சம்பவங்களுக்குப் பதிலளிப்பதற்காக பிரத்யேகமாகப் பயற்சியளிக்கப்பட்ட ஊபர் வாடிக்கையாளர் அசோஸியேட்டுகள் நாள் முழுவதும் கிடைக்கப்பெறுகின்றனர்.
உங்கள் பயணத்தைப் பின்தொடர்தல்
நீங்கள் செல்கின்ற வழியை உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் கண்காணிக்க முடியும். மேலும் நீங்கள் இடத்தை வந்தடைந்தவுடன் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
2-வழி மதிப்பீடுகள்
உங்கள் கருத்து முக்கியமானது. குறைந்த மதிப்பீட்டுடன் பயணங்கள் பதிவு செய்யப்படும்போது, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஊபர் சமூகத்தில் இருந்து அந்தப் பயனர்கள் அகற்றப் படலாம்.
தொலைபேசி அநாமதேயமாக்கல்
ஆப்பின் வழியே பயணியை நீங்கள் தொடர்புகொள் கொள்ள வேண்டியிருந்தால், உங்கள் தொலைபேசி எண் அவருக்குக் காட்டப்படாது.
ஜிபிஎஸ் கண்காணிப்பு
எல்லா ஊபர் பயணங்களும் பயணத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை கண்காணிக்கப்படும். எனவே ஏதேனும் நடந்தால் உங்கள் பயணத்தின் பதிவு உதவிடும்.
அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை ஏற்படுத்துவதில் நீங்கள் முக்கியமானவர்
நகரங்களைப் பாதுகாப்பானதாகவும், சாலைகளை நட்பாகவும் மாற்ற உதவுவதில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள்.
வாகனம் ஓட்டும்போது கவனம் செலுத்துதல்
இடுகையிடப்பட்ட வேக வரம்பிற்குள் நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதை ஆப் உங்களுக்கு நினைவூட்டுகிறது, எனவே நீங்கள் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பீர்கள்.
பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
பயணிகளை பிக்அப் செய்ய பாதுகாப்பான இடத்தைக் கண்டறிவது முதல் அவர்களை சீட் பெல்ட் அணிய வைக்க நினைவூட்டுவது வரை, உங்கள் பாதுகாப்பிலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பிலும் நீங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
நமது சமூகத்தைப் பலப்படுத்துதல்
பயணிகளும் ஓட்டுனர்களும் மன அழுத்தமில்லாத பயணத்தை அனுபவிப்பதற்கு ஊபரின் சமூக வழிகாட்டுதல்கள் உதவுகின்றன. வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத எந்தவொரு நபரும் ஊபர் சமூகத்தின் ஓட்டுமொத்தப் பாதுகாப்பிற்காக தளத்திலிருந்து அகற்றப்படும் அபாயம் உள்ளது.
*சில தேவைகளும் அம்சங்களும் பிராந்தியத்தின் அடிப்படையில் வேறுபடலாம் மற்றும் அவை கிடைக்கப்பெறாமல் கூட இருக்கலாம்.
¹ இந்த அம்சம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே தற்போது கிடைக்கப்பெறுகிறது.
நிறுவனம்