வெகுமானம் அளித்தல்
சிறந்த சேவை வெகுமதி பெறத் தகுதியானது. ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு ஆப்பிலிருந்தே வெகுமானம் வழங்க பயணிகளுக்கான விருப்பம் உள்ளது.
ஓட்டுநர் ஆப்பின் மூலம் நேரடியாக வெகுமானங்களைப் பெறுவது எளிது.
பூஜ்ஜிய சேவைக் கட்டணம் எப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
உடனடி ஊதியத்துடன் எந்த நேரத்திலும் வெகுமானங்களையும் சம்பாத்தியத்தையும் பெறுங்கள்.
இது எப்படிச் செயல்படுகிறது?
உங்கள் நகரத்தில் வெகுமானம் வழங்கும் அம்சம் கிடைத்தவுடன், உங்கள் ஓட்டுநர் ஆப்பிலும் மின்னஞ்சல் மூலமும் உங்களுக்கு அறிவிக்கப்படும். பயணிகளிடமிருந்து வெகுமானங்களைப் பெறத் தொடங்க: 1) ஓட்டுநர் ஆப்பின் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்கவும் அல்லது பதிவிறக்கவும், 2) உங்கள் ஆப்பை மூடி மீண்டும் தொடங்கவும், 3) வெகுமானங்களை அக்செப்ட் செய்கிறேன் என்பதைத் தட்டவும்.
முடிக்கப்பட்ட பயணத்தை மதிப்பிடும்போது வெகுமானத்தைச் சேர்ப்பதற்கான விருப்பம் பயணிகளுக்கு உள்ளது.
முன்னமைக்கப்பட்ட வெகுமான அளவுகளில் இருந்து பயணிகள் எளிதாகத் தேர்வுசெய்யலாம்.
அல்லது பயணிகள் தனிப்பயன் வெகுமானத் தொகையைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒவ்வொரு பயணத்திற்கும் சரியான வெகுமானத் தொகையைப் பயண விவரங்களில் காணலாம்.
உங்கள் பயண வரலாற்றில் உங்கள் எல்லா வெகுமானங்களையும் காண்க.
உங்கள் வாராந்திரச் சுருக்கத்தில் மொத்த வெகுமானங்களைக் காணலாம். உங்கள் பிற சம்பாத்தியத்தைப் போலவே, உடனடிக் கட்டணத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் வெகுமானங்களைக் கேஷ் அவுட் செய்யலாம்.
ஒரு பயணம் முடிந்ததும், 30 நாட்கள் வரை பயணிகள் வெகுமானத்தைச் சேர்க்கலாம். நீங்கள் ஆன்லைனில் செல்லும்போது, கடைசியாக நீங்கள் Uber Driver ஆப்பைத் திறந்ததிலிருந்து நீங்கள் பெற்ற புதிய வெகுமானங்களைக் காண்பீர்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- வெகுமானம் வழங்குவதை நான் எவ்வாறு தேர்வு செய்வது?
உங்கள் நகரத்தில் வெகுமானம் வழங்கும் அம்சம் கிடைத்தவுடன், ஆப்பிலும் மின்னஞ்சல் மூலமும் உங்களுக்கு அறிவிக்கப்படும். பயணிகளிடமிருந்து வெகுமானங்களைப் பெறத் தொடங்க: 1) Uber Driver ஆப்பின் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்கவும் அல்லது பதிவிறக்கவும், 2) உங்கள் ஆப்பை மூடிவிட்டு மீண்டும் தொடங்குங்கள், 3) வெகுமானங்களை ஏற்கிறேன் என்பதைத் தட்டவும்.
- எனது சம்பாத்தியங்களுடன் வெகுமானங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
வெகுமானங்கள் உங்களுடையவை, அவை உங்கள் மொத்தச் சம்பாத்தியத்தில் தானாகவே சேர்க்கப்படும். உங்கள் வெகுமானங்களுக்குச் சேவைக் கட்டணம் இல்லை. Xchange Leasing அல்லது FuelCard போன்ற சேவைகளுக்குப் பேமெண்டுகளைச் செலுத்துவதற்கு உங்கள் சம்பாத்தியத்தைப் பயன்படுத்த நீங்கள் முன்பு ஒப்புக்கொண்டிருந்தால், அந்தப் பேமெண்ட்டுகளைச் செய்ய உங்கள் மொத்தச் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியாக உங்கள் வெகுமானங்கள் பயன்படுத்தப்படலாம்.
- எனது எல்லா Uber பயணங்களுக்கும் வெகுமானங்களை ஏற்க முடியுமா?
UberX, UberPool, Uber Black, Uber SUV, uberTAXI, Uber Select, UberXL, WAV, Assist, Uber Hop, Uber Commute ஆகியவை உள்ளிட்ட Uber பயணங்களில் பெறும் வெகுமானங்களையும் நீங்கள் ஏற்கலாம்.
- தரமதிப்பீடுகள் எனது வெகுமானங்களை எவ்வாறு பாதிக்கின்றன?
வெகுமதிகளைத் தரமதிப்பீடுகள் பாதிக்காது, வெகுமதிகள் 5 நட்சத்திரத் தரமதிப்பீடுகளுடன் பிணைக்கப்படவில்லை. இருப்பினும், Uber பயணிகள் வெகுமானத்தைச் சேர்ப்பதற்கு முன்பு தங்கள் பயணத்தைத் தரமதிப்பிட வேண்டும்.
- தற்செயலாக விருப்பத்தைத் தவிர்த்துவிட்டால் வெகுமானங்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?
Uber Driver ஆப்பின் முகப்பு ஊட்டத்தில் உள்ள அறிவிப்பிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- வெகுமானத்தில் எனக்கும் Uberக்கும் எவ்வளவு கிடைக்கும்?
உங்கள் வெகுமானங்களுக்குச் சேவைக் கட்டணம் பொருந்தாது.
- எனது வெகுமானங்களை நான் எங்கே பார்ப்பது?
உங்கள் வெகுமானங்களை Uber Driver ஆப்பின் சம்பாத்தியம் பிரிவிலும் drivers.uber.com என்ற தளத்திலும் கண்காணிக்கலாம். உங்கள் வாராந்திர அறிக்கை, பரிவர்த்தனைச் செயல்பாடு மற்றும் தினசரி/வாராந்திரச் சம்பாத்தியச் சுருக்க விவரங்களிலும் வெகுமானங்கள் காண்பிக்கப்படும். பயணம் முடிந்து 30 நாட்கள் வரை பயணிகள் வெகுமானங்களைச் சேர்க்கலாம். Uber Eats இல், பயணம் முடிந்த 7 நாட்கள் வரை வாடிக்கையாளர்கள் வெகுமானங்களைச் சேர்க்கலாம்.
- உடனடி ஊதியத்திற்கான வெகுமானங்கள் எனக்கு எப்போது கிடைக்கும்?
வெகுமானங்கள் அவற்றைப் பெற்ற உடனேயே கிடைக்கும்.
- வெகுமானங்களை வழங்க வாடிக்கையாளர்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?
ஆப் வெகுமானங்களைைக் கொடுக்கத் தொடங்க, ஆப்பின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்த வேண்டும். வெகுமானங்களைக் கொடுக்கத் தொடங்க ஆப்பை மேம்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சலை அனைத்துப் பயணிகளும் பெறுவார்கள்.
- நான் ஏன் தேர்வுசெய்ய வேண்டும்?
Uber ஆப்புடன் வாகனம் ஓட்டும் சிலர் தங்கள் சம்பாத்தியத்தை Uber இன் வணிகப் பார்ட்னர்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காகச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். XChange Leasing, Enterprise அல்லது FuelCard போன்ற பார்ட்னர்களுக்குப் பேமெண்ட்டுகளைச் செலுத்த நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்தப் பேமெண்ட்டுகளைச் செய்ய உங்கள் வெகுமானங்கள் உங்கள் மொத்த சம்பாத்தியத்திலிருந்து கழிக்கப்படலாம். வெகுமானங்களை ஏற்றுக்கொள்வதற்கும் இந்தப் பேமெண்ட்டுகளைச் செய்வதற்கும் வெகுமானங்களைப் பிரத்தியேகமாக ரொக்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் இந்த அம்சத்தை இயக்குவதற்கான விருப்பத்தை ஓட்டுநர்கள் தேர்வுசெய்கின்றனர்.
- பயணிகள் வெகுமானம் வழங்க வேண்டுமா?
இல்லை, பயணிகள் தங்கள் ஓட்டுநர்களுக்கு வெகுமானங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை.
- எனது பயணம் முடிந்த எவ்வளவு நாட்களுக்குப் பிறகு வெகுமானத்தை வழங்க முடியும்?
உங்கள் பயணம் முடிந்த பின் 30 நாட்கள் வரை உங்கள் பயணிகள் உங்களுக்கு வெகுமானத்தை வழங்க முடியும். பயணம் முடிந்ததும், அவர்களின் பயண வரலாறு, help.uber.com, riders.uber.com அல்லது அவர்களின் மின்னஞ்சல் ரசீதுகளிலிருந்து பயணிகள் ஓட்டுநர்களுக்கு வெகுமானத்தை வழங்க முடியும்.
- ஒரு குறிப்பிட்ட பயணி அல்லது வாடிக்கையாளரால் நான் எவ்வளவு வெகுமானம் பெற்றேன் என்று பார்க்க முடியுமா?
உங்கள் பயணியின் தனியுரிமையைப் பாதுகாக்க, பயண ரசீதில் நீங்கள் பெறும் வெகுமானங்களைக் காண முடியும், ஆனால் அந்த நபரின் பெயர் அல்லது புகைப்படத்தைக் காண முடியாது.
- நான் ஒரு ஃப்ளீட்டுக்கு ஓட்டுகிறேன். வெகுமானங்களை எவ்வாறு பெறுவது?
நீங்கள் ஒரு ஃப்ளீட்டிற்கு வாகனம் ஓட்டினால், உங்கள் சம்பாத்திய அறிக்கைகளைப் பார்த்த பிறகு உங்களுக்கு ஏதேனும் வெகுமானங்களைச் செலுத்துவதற்கு ஃப்ளீட் உரிமையாளரே பொறுப்பு.
- மேலும் கேள்விகள் உள்ளனவா?
help.uber.com என்பதற்குச் செல்லவும்.
நிறுவனம்