Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ரெஃபரல்கள் எவ்வாறு வேலை செய்கின்றன

Uber உடன் வாகனம் ஓட்ட நண்பர்களை அழைப்பதன் மூலம் நீங்கள் அதிகப் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் அவர்களுக்கு அழைப்பை அனுப்பி, ஒதுக்கப்பட்ட காலநேரத்தில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை முடித்தால், நீங்கள் கூடுதல் தொகையைச் சம்பாதிப்பீர்கள்.

டெலிவரி குறித்த தகவலைத் தேடுகிறீர்களா?

ரெஃபரல்களுக்கான அடிப்படைகள்

The app makes it easy for you to invite friends to drive with Uber directly from your contact list. Send a personalized text message or trigger an invite email in seconds.

1. Uber-இல் பதிவுசெய்யுமாறு உங்களுக்குத் தெரிந்தவர்களை அழைக்க, உங்களின் அழைப்புக் குறியீட்டைப் பகிரவும். அதை உங்களுடைய செயலியில் காணலாம்.

2. உங்கள் நண்பர்களின் முன்னேற்றத்தை Uber Driver செயலியில் நீங்கள் கண்காணிக்கலாம். அவர்களுடைய நிலை குறித்து தகவலளிக்க உங்களுக்கு மின்னஞ்சல் செய்வோம்.

3. நண்பர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவுசெய்து மற்ற அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்திசெய்கின்ற பட்சத்தில் வெகுமதியைப் பெறுவீர்கள். தேவையான எண்ணிக்கையிலான பயணங்களும் ரெஃபரல் வெகுமதித் தொகையும் நகரத்திற்கு ஏற்ப மாறுபடும். உங்கள் நண்பர் பதிவுசெய்ததும், நீங்கள் அழைத்த நபர் ஒவ்வொருவருக்குமான சாத்தியமான வெகுமதிகள் குறித்த விவரங்களை ஓட்டுநர் செயலியில் காணலாம்.

4. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை உங்கள் நண்பர் நிறைவுசெய்து, ரெஃபரல் சலுகையின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், உங்களுடைய கணக்கில் வெகுமதி சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது வரவிருக்கும் வாரத்துக்கான அறிக்கையில் காட்டப்படும்.

ஒருசில எளிய படிகளில் நண்பர்களை அழையுங்கள்

1. Uber Driver செயலிக்குச் சென்று மெனு ஐகானைத் தட்டவும்.

2. சம்பாத்தியம் > அழைப்பை அனுப்பி சம்பாதியுங்கள் > மேலும் அறிக என்பதைத் தட்டவும்.

‘தொடர்புகொள்களிலிருந்து தேர்ந்தெடு’ என்பதைத் தட்டி, ஒரு தொடர்பைத் தேர்வுசெய்து ‘அழைப்புகளை அனுப்பு’ என்பதைத் தட்டவும்.

வெகுமானங்கள்

Uber உடன் வாகனம் ஓட்ட ஆர்வம் கொண்டிருக்கும் நபர்களை அறிந்திருந்தாலே போதும். உங்களுடைய நண்பர்கள் பதிவுசெய்வதற்கு உதவும் சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுடைய நண்பருக்கு நினைவூட்டுதல்

செயலி அல்லது ஓட்டுநர் டேஷ்போர்டில், நினைவூட்டு என்பதைத் தட்டினால்/கிளிக் செய்தால், பதிவுசெய்தலை நிறைவு செய்வதற்கு அல்லது பயணங்களை எடுக்கத் தொடங்குவதற்கு உங்கள் நண்பருக்கு நினைவூட்டும் உரைச்செய்தி அல்லது மின்னஞ்சலை அனுப்பும்படி உங்களிடம் கேட்கப்படும்.

உங்கள் நண்பருக்கு உதவுதல்

பதிவுசெய்தல் என்பது பல படிநிலைகளைக் கொண்ட ஒரு செயல்முறை என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். குறிப்பிட்ட படியை முடிப்பதில் உங்கள் நண்பருக்குச் சிக்கல் ஏற்பட்டால், அவருக்கு உதவுவதற்கான நிறைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, உள்ளூர் தேவைகள் மற்றும் உரிமங்கள் தொடர்பான தகவலை இங்கே காணலாம்.

சமூக வலைத்தளங்களில் பகிர்தல்

Uber உடன் வாகனம் ஓட்டுவதற்கு ஆர்வமாக இருப்பவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு, இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்கான சிறந்த வழி சமூக வலைத்தளம் ஆகும். உங்களின் முழு நெட்வொர்க்கையும் நொடிகளில் தொடர்பு கொள்ளலாம். செயலியில் இதைச் செய்ய, சம்பாத்தியம் என்பதற்குச் சென்று, அதன் பின்னர் அழைப்பை அனுப்பி சம்பாதியுங்கள் என்பதற்குச் சென்று, மேலும் அறிக என்பதைத் தட்டவும். அழைப்புகளை அனுப்பு என்பதைத் தட்டி, Facebook அல்லது Twitter ஐகான்களைத் தேர்ந்தெடுக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • Referral rewards vary by city. You can look up the reward offered in your city in your app.

  • ஆமாம், நீங்கள் செய்யலாம். அழைக்கப்படும் நபர் நீங்கள் இருக்கும் அதே நாட்டில் வாகனம் ஓட்டுவதற்குப் பதிவுசெய்து, அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில் தேவையான பயணங்களை முடிக்கும் வரை, அந்த நகரத்தில் அளிக்கப்படும் ரெஃபரல் வெகுமதியை நீங்கள் பெறலாம்.

    ரெஃபரல் தேவைகள் நகரத்தைச் சார்ந்து மாறுபடும். எனவே நீங்கள் அழைக்கும் நபர் வேறு நகரத்தில் பதிவுசெய்து தேவையான பயணங்களையும், ரெஃபரல் சலுகையின் மற்ற அனைத்து நிபந்தனைகளையும் நிறைவுசெய்தால், Uber-இல் வாகனம் ஓட்டுவதற்கு அவர்கள் பதிவுசெய்துள்ள நகரத்தில்தான் ரெஃபரல் ஊக்கதொகையைப் பெறுவீர்களே தவிர, நீங்கள் வாகனம் ஓட்டுகின்ற நகரத்தில் பெறமாட்டீர்கள்.

  • பதிவு செய்வதற்கான ரெஃபரல் இணைப்பைச் சமூக வலைத்தளத்தில் பகிர அல்லது எந்தவொரு மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணிற்கும் அழைப்புகளை அனுப்ப, ஓட்டுநர் டேஷ்போர்டுக்குச் செல்லவும். அதை அனுப்புவதற்கு முன்பு உங்கள் நண்பரிடம் ஒப்புதலைப் பெற்றுக் கொள்வது நல்லது.

  • உங்கள் நண்பர்கள் பதிவுசெய்தவுடன் அவர்களுடைய முன்னேற்றத்தை நீங்கள் கண்காணிக்கலாம்.

  • Uber has many resources if they get stuck. For help with local requirements and licenses, go here. For an overview of the app, go here. You can also refer them to a Greenlight Hub.

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் அறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو