முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

அனைவருக்கும் பாதுகாப்பு, அனைவருக்கும் மரியாதை

ஊபரின் சமூக வழிகாட்டுதல்கள்  

 

ஒவ்வொரு அனுபவமும் பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் நேர்மறையானதாக உணர உதவும் வகையில் எங்கள் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர்கள், பயணிகள், டெலிவரி பார்ட்னர்கள், ஊபர் ஈட்ஸ் பயனர்கள், வணிகர்கள் மற்றும் ஊபர் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் எந்தவொரு வணிகங்கள் உட்பட, ஆனால் வரம்புக்குட்பட்டவை அல்ல, எங்கள் எல்லா ஆப்களிலும் ஊபர் அக்கவுண்ட்டில் பதிவுபெறும் ஒவ்வொருவரும், அதிகார வரம்புக்கு ஏற்ப, வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இவை ஆன்லைன் அமைப்புகள் அல்லது ஃபோன் மூலம் சேவை மையத்தில் உள்ள ஊபர் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடனான தொடர்புகளுக்கும் பொருந்தும்.

அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள்

The guidelines in this section help to foster positive interactions within our diverse community during every experience.

ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்

அனைவருக்கும் பாதுகாப்பான அனுபவங்களை உருவாக்க எங்கள் குழு தினமும் செயல்படுகிறது. அதனால்தான் இந்தத் தரநிலைகள் எழுதப்பட்டுள்ளன.

சட்டத்தைப் பின்பற்றுங்கள்

சட்டத்தைப் பின்பற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் ஆப்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்றும், பொருந்தக்கூடிய சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

உங்கள் தேர்வுகளின் வலிமை

ஊபருடன் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் சிறந்த அனுபவங்களைப் பெறுகிறார்கள். இந்த நேர்மறையான தொடர்புகள் நாம் யார் என்பதை வரையறுக்க உதவுகின்றன. ஊபரைப் பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க ஒரு சமூகமாக மாற்ற உதவியதற்கு நன்றி.

உங்கள் பின்னூட்டம் முக்கியமானது

நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் நீங்கள் அதை எங்களிடம் சொல்வதை எளிதாக்குகிறோம். எங்கள் குழு தொடர்ந்து எங்கள் தரநிலைகளை மேம்படுத்திவருகிறது. மேலும் உங்கள் பின்னூட்டத்தை முக்கியமாகக் கருதுகிறோம். இதன்மூலம் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எங்கள் தொழில்நுட்பம் உருவாகும்போது எங்கள் தரநிலைகளைப் பொருத்தமானதாக வைத்திருக்கவும் முடியும்.

உதவியைக் கண்டறிவது எப்படி

சம்பவத்தைப் புகாரளிக்க விரும்பினால், எங்கள் ஆப்பின் மூலம் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அழைக்கலாம் அல்லது help.uber.com என்பதற்குச் செல்லலாம். நீங்கள் உடனடி ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், ஊபருக்கு அறிவிக்கும் முன் உங்கள் உள்ளூர் அதிகாரிகளை எச்சரிக்கவும்.

மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன

நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உயர் தரமதிப்பீடு குறிக்கிறது. உங்கள் தரமதிப்பீடு உங்களின் நகரத்தின் சராசரியை விடக் குறைவாக இருந்தால், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்கள் தரமதிப்பீடு சராசரியை விடக் கணிசமாகக் குறைவாக இருந்தால், ஆப்பிற்கான அணுகலை நீங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இழக்க நேரிடும்.

எங்கள் வழிகாட்டல்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும்

எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக எங்கள் ஆதரவுக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் ஊபர் மதிப்பாய்வு செய்கிறது. மேலும் நாங்கள் ஒரு சிறப்புக் குழு மூலம் விசாரிக்கலாம். எங்கள் மதிப்பாய்வு முடியும் வரை உங்கள் அக்கவுண்ட் நிறுத்திவைக்கப்படலாம். எங்கள் வழிகாட்டுதல்களில் எதையேனும் பின்பற்றாமல் இருப்பது, ஊபர் அக்கவுண்ட்களுக்கான உங்கள் அணுகலை இழக்கச் செய்யலாம்.

இந்தப் பக்கம் ஊபரின் சமூக வழிகாட்டுதல்களைச் சுருக்கமாக வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் சமூக வழிகாட்டுதல்களை விரிவாகப் படிக்க, இங்கே செல்லவும் . பயணிகள் தங்களின் பயன்பாட்டு விதிமுறைகளை இங்கே அணுகலாம். ஊபருடனான தங்களின் சட்ட ஒப்பந்தத்தை ஓட்டுநர்கள் இங்கே அணுகலாம்.

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் எதையேனும் பின்பற்றாமல் இருப்பது, ஊபர் அக்கவுண்ட்களுக்கான உங்கள் அணுகலை இழக்கச் செய்யலாம். இதில் ஆப்பிற்கு வெளியே நீங்கள் எடுக்கக்கூடிய, ஊபர் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது ஊபர் பிராண்ட், நற்பெயர் அல்லது வணிகத்திற்குத் தீங்கிழைக்கும் என்று நாங்கள் தீர்மானிக்கக்கூடிய சில நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.