Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பன்முகத்தன்மையையும் உள்ளடக்கலையும் வளர்த்தல்

ஒவ்வொரு நாளும் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் சம உரிமைகளை அடைவதற்கான நோக்கங்களை ஆதரிப்பதற்கும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம்.

சம உரிமைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பு

சமூக நலன், பயிற்சி, ஆட்சேர்ப்பு மற்றும் தக்கவைப்பு ஆகியவற்றின் மூலம் அனைவரும் தத்தமது உண்மையான இயல்புடன் இருப்பதற்கான ஒரு பணியிடத்தை உருவாக்க உதவுகிறோம்.

பிரைடை ஊக்குவித்தல்

உலகெங்கிலும் பிரைடு நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கும் நிதியுதவி செய்வதற்கும் LGBTQ+ சமூகத்தின் ஊக்கமளிக்கும் உறுப்பினர்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

ஒன்றாகப் பணிபுரிதல்

LGBTQ+ சமத்துவத்திற்கான சிறந்த பணியிடங்களில் ஒன்றாக Uber தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

LGBTQ+ பணியாளர்களுக்கு உதவி வளங்களை வழங்குதல்

LGBTQ+ தனிநபர்கள் வரவேற்கப்படுவதாக, ஆதரிக்கப்படுவதாக மற்றும் அதிகாரமளிக்கப்படுவதாக உணரக்கூடிய ஒரு பணியிடத்தையும் சமூகத்தையும் உருவாக்குவதை Uber பணியாளர் வளக் குழுவின் பிரைடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைவருக்குமான Uber

70-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் பணிபுரிவதற்கான ஒரு வரவேற்கத்தக்க தளமாகவும், பணியாளர்களுக்குப் பணிபுரிவதற்கு ஆதரவளிக்கும் இடமாகவும் இருக்கக்கூடிய வகையில் செயல்முறை, வளங்கள், தொழில்நுட்பம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோரை ஆதரித்தல்

2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணத் தடைகளைச் செயல்படுத்தியபோது, பல குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்காகவும், நூற்றுக்கணக்கானவர்களுக்கு இலவசச் சட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நாங்கள் உதவிக்கரம் நீட்டினோம்.

ட்ரீமர்களுக்கு ஆதரவாக இருத்தல்

உள்ளடக்கல் மற்றும் சமத்துவம் ஆகிய எங்கள் மதிப்புகளைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம், நடவடிக்கை எடுக்கிறோம். DACA கொள்கையைத் திரும்பப் பெற்றதற்குப் பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ட்ரீமர்களுக்கு (புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள்) இலவசச் சட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். மேலும் இரு கட்சியும் இணைந்து பொதுவான தீர்வைக் கண்டறியுமாறு காங்கிரஸை வலியுறுத்த, கொயலிஷன் ஃபார் அமெரிக்கன் ட்ரீம் (Coalition for the American Dream) என்ற கூட்டணியில் இணைந்துள்ளோம்.

"பன்முகப்பட்ட குழுக்கள் என்பவை புதுமையைத் தூண்டுபவை என்பதால், சரியான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் நமது மிகப்பெரும் சொத்தாக மாறமுடியும்."

போ யங் லீ, தலைமைப் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கல் அதிகாரி, Uber

பணியிட வலுவூட்டல்

Uber-இல் பணிபுரிபவர்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். பணியாளர்கள் தலைமையிலான எங்கள் பணியாளர் வளக் குழுக்கள் (ERGகள்), சமூகத்திற்கு வழங்கலைச் செய்யவும் அந்நியோன்யமான உணர்வை உருவாக்கவும் உதவி, எங்கள் நோக்கத்தையும் மதிப்பீடுகளையும் வளர்த்து, உள்ளூர்மயமாக்கப்பட்ட கவனத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், உலகளாவிய உள்ளடக்கலுக்காக குரலெழுப்புவதற்கும் உதவுகின்றன.

பாலின இடைவெளியை அகற்றுதல்

தொழில்நுட்பத்தில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஆதரவளிக்கும பொருட்டு, உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து Uber செயல்படுகிறது.

Uber செயலி மூலம் 1 மில்லியன் பெண்கள் வாகனம் ஓட்ட வேண்டும் எங்கள் இலக்கை அடைதல்

வாகனம் ஓட்டுவது என்பது ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே பலகாலமாக இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் பெண்களை ஓட்டுநர்களாகப் பதிவுசெய்ய Uber உறுதிகொண்டிருந்தது. ஆனால் ஜூலை 2017ஆம் ஆண்டிலேயே அந்த எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.