Uber Shuttle: நம்பகமான மற்றும் குறைந்த கட்டண பயணம்
பயணம் செய்திடுங்கள், சிரமம் கொள்ளவேண்டாம்! எங்கள் நம்பகமான, மலிவான ஷட்டில் சேவைகள் மூலம் டெல்லி NCR மற்றும் கொல்கத்தா வழியாக பயணித்திடுங்கள். பணியிடத்திற்குச் செல்ல மென்மையான, வசதியான பயணத்திற ்கு இருக்கையை முன்பதிவு செய்யுங்கள். நீண்ட காத்திருப்பு நேரங்கள், நெரிசலான பயணங்கள் மற்றும் பீக் ஹவர் டிராஃபிக்கில் எண்ணற்ற மணிநேரம் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். #கஷ்டம் இல்லை
முன்கூட்டியே முன்பதிவு செ ய்தல்
உங்கள் இருக்கையை 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யுங்கள்.
மலிவான கட்டணங்கள்
குறைவான கட்டணத்தில் உத்தரவாதமான இருக்கை.
நேரடிக் கண்காணிப்பு
நேரடி கண்காணிப்பு மூலம் உங்கள் Shuttle-ஐக் கண்காணிக்கலாம்.
உங்கள் ஷட்டில் பயணத்தை முன்பதிவு செய்வது எப்படி
வேண்டுகோள்
உங்களுக்கு மிகவும் வசதியான ஷட்டிலில் இருக்கை முன்பதிவு செய்ய திட்டமிடுங்கள். உங்கள் ஏற்றும் மற்றும் இறக்கும் இடங்களை உள்ளிடி, ‘ஷட்டில்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கட்டணத்தை பரிசீலித்து, உங்கள் பாதையும் ஏற்றும் நேரத்தையும் தேர்வு செய்து, பிறகு "வேண்டுகோள்" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்றுதல்
உங்கள் ஷட்டிலின் வருகையை கண்காணித்து நேரத்துக்கு சரியாக ஏறுங்கள். வரைபடத்தில் காட்டப்படும் ஏற்றும் இடத்திற்கு நடந்து சென்று குறைந்தது 5 நிமிடம் முன்பே அங்கு இருங்கள். உங்கள் தொலைபேசியில் நேரடி ஷட்டில் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள்.
பயணத்தின் போது
ஷட்டிலில் ஏறி, உங்கள் தொலைபேசியில் உள்ள QR ஐ ஸ்கேன் செய்து எளிதாக செக்-இன் செய்யுங்கள். ஒரு வசதியான பயணத்தை அனுபவிக்கவும்.
இறக்குதல்
உங்கள் டிரைவர் உங்களை நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இறக்குவார். உங்கள் இறுதி இலக்கிற்கு நடந்து செல்ல Uber செயலியைப் பயன்படுத்துங்கள்.
பணியாளர்களுக்கான கார்ப்பரேட் ஷட்டில் தீர்வு வேண்டுமா?
முழு விவரங்களுக்கும் நன்மைகளுக்கும் எங்கள் கார்ப்பரேட் ஷட்டில் தீர்வுகளை ஆராயுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- முன்கூட்டியே முன்பதிவு செய்யலாமா?
ஆம், உங்கள் பயணத்தை 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.
- எனது பகுதியில் Uber Shuttle விருப்பத்தை நான் ஏன் பார்க்க முடியவில்லை?
நீங்கள் கோரிய வழித்தடத்தில் இந்த நேரத்தில் Shuttle சேவை எதுவும் இல்லை.
- எங்கிருந்து வேண்டுமானாலும் Shuttle பயணத்தைக் கோரலாமா?
இல்லை. நாங்கள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே சேவையளிக்கிறோம். எனவே உங்கள் பிக்அப் மற்றும் ட்ராப் ஆஃப் இடங்கள் அந்தப் பகுதிகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
- செயல்படும் நேரங்கள்?
ஷட்டில் காலை 5:30 முதல் இரவு 9:30 வரை இயக்கப்படுகிறது (நேரம் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்). நீங்கள் விரும்பும் வழிக்கான சரியான நேரங்களுக்கு எங்கள் ஆப்பைப் பாருங்கள்.
- நான் ஒரு நண்பருடன் இணைந்து பயணிக்கலாமா?
ஆம், உங்கள் கணக்கிலிருந்து 3 இருக்கைகள் வரை கோரலாம். முன்பதிவு செய்த விவரங்கள் QR குறியீட்டில் பிரதிபலிக்கும்.
- Uber Shuttle என்பது வீட்டு வாசலுக்கு வந்து பிக்அப் மற்றும் ட்ராப் ஆஃப் செய்யும் சேவையா?
இல்லை, நீங்கள் பிக்அப் இடத்திற்கு நடந்து சென்று ஓட்டுநர் வரும் வரை காத்திருக்க வேண்டும். நடந்து செல்வதற்கான வழிகள் Uber ஆப்-இல் கொடுக்கப்பட்டிருக்கும். பயணத்தின் முடிவில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள ஓர் ட்ராப் ஆஃப் இடத்தில் இறக்கிவிடப்படுவீர்கள்.
- எனது வணிகத்திற்கு Corporate Shuttle சேவையை Uber வழங்குமா?
பணியாளர்களுக்கான தினசரிப் பயணங்கள், பணியிடங்களுக்கு இடையேயான பயணங்கள், பணியிடத்திலிருந்து பொது போக்குவரத்து மையங்களுக்கு இடையேயான பயணங்கள் ஆகியவற்றை வழங்க வணிகங்களுக்கு உதவிடும் வகையில் Corporate Shuttle சேவையை Uber வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் Corporate Shuttles இணையதளத்தைப் பார்க்கவும்.
- வாடிக்கையாளர் சேவை மையத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது?
படி 1 - உங்கள் ஆப்பின் கீழ் வலதுபுறத்தில் உள்ள "கணக்கு" என்பதைத் தட்டவும்
படி 2 - "செயல்பாடு" என்பதைத் தட்டவும்
படி 3 - நீங்கள் உதவி பெற விரும்பும் பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
படி 4 - கீழே உள்ள "உதவி" பிரிவிற்குச் சென்று, "பயண உதவி பெறுக" என்பதைத் தட்டவும்
படி 5 - மிகவும் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தேவையான தகவலை நிரப்பி "சமர்ப்பி" என்பதைத் தட்டவும்
ஆப்-இல் இன்னும் பலவற்றைச் செய்யுங்கள்
இந்த வலைப் பக்கத்தில் உள்ள விவரங்கள் தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பின்றி புதுப்பிக்கப்படலாம்.