Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

வாகனம் ஓட்டுங்கள். பணம் பெற்றிடுங்கள். வெகுமதி பெறுங்கள். புதிய Uber Pro-க்கு உங்களை வரவேற்கிறோம்: இது நீங்கள் வாகனம் ஓட்டும்போதும் ஓட்டாதபோதும் உங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையிலும் உங்கள் ஆர்வங்களின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்ட வெகுமதிகள் திட்டமாகும்.

இது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்

நீங்கள் ஏற்கனவே Uber Pro உடன் வாகனம் ஓட்டுகிறீர்கள். இப்போது Uber Pro உடன் சம்பாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புள்ளிகளைச் சம்பாதிக்கவும்

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திற்கும் 1 புள்ளியையும், அதிக எண்ணிக்கையிலான நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கு போனஸ் புள்ளிகளையும் பெறுங்கள். எவ்வளவு அதிகமாக ஓட்டுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிக்கலாம்.

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குங்கள்

அதிக அடுக்கு வெகுமதிகளைப் பெறுவதற்கும் அவற்றைத் திறப்பதற்கும் சில நிபந்தனைகளைப் பின்பற்றுங்கள். தேவைகள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும், மேலும் தகவலுக்கு ஓட்டுநர் ஆப்பைப் பார்க்கவும்.

அடுக்குகளைத் திறக்கவும்

புள்ளிகள் உங்கள் நிலையைத் தீர்மானிக்க உதவும்: Blue, Gold, Platinum அல்லது Diamond. உங்கள் அடுக்கு உயர்ந்தால், அதிக வெகுமதிகள் கிடைக்கும். ஒரு நிலையான 3 மாத காலப்பகுதியில் உங்கள் புள்ளிகள் மற்றும் தரமதிப்பீடுகளின் அடிப்படையில் உங்கள் அடுக்கு கணக்கிடப்படுகிறது.

வெகுமதிகளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து முன்னேறுங்கள்

  • உங்கள் ஒட்டுமொத்த நட்சத்திர மதிப்பீடு என்பது உங்களின் கடந்த 500 பயணங்களில் பயணிகள் உங்களுக்கு வழங்கிய தனிப்பட்ட மதிப்பீடுகளின் சராசரியாகும்.

    மோசமான GPS வழி அல்லது சாலை நெரிசல் போன்ற உங்களால் கட்டுப்படுத்த இயலாத காரணத்தினால் குறிப்பிட்ட பயணத்திற்கு 4 நட்சத்திரங்கள் அல்லது அதற்குக் கீழேயான மதிப்பீட்டைப் பெற்றால், அந்த மதிப்பீடு உங்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் சேர்க்கப்படாது. தரமதிப்பீடுகள் பற்றி மேலும் அறிய இங்கே காண்க.

    ரத்து விகிதம்

    நீங்கள் Gold, Platinum அல்லது Diamond நிலையிலுள்ள ஓட்டுனராக இருந்து உங்களது ரத்து விகிதம் 4.01% முதல் 10% வரை உயர்கிறது எனில், அதிகப் புள்ளிகளைப் பெற்றாலும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. உங்களுடைய தற்போதைய நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டால் மட்டுமே, உங்களின் தற்போதைய வெகுமதிகளை நீங்கள் பயன்படுத்த இயலும்.

    உங்கள் ரத்து விகிதம் 10%-க்கு மேல் அதிகரித்தால், உங்கள் Gold, Platinum மற்றும் Diamond வெகுமதிகளுக்கான அணுகலை உடனடியாக இழப்பீர்கள். உங்கள் வெகுமதிகளைத் திரும்பப் பெற, உங்களின் ரத்து விகிதம் 4% அல்லது அதற்குக் குறைவாக வர வேண்டும்.

  • நிலையான 3 மாதக் காலங்களில் நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள். 3 மாதக் காலத்தின் தொடக்கத்தில் முந்தைய 3 மாதக் காலத்தில் நீங்கள் பெற்றிருந்த புள்ளிகளால் உங்களது நிலை தீர்மானிக்கப்படுகிறது. அடுத்த நிலைக்குத் தேவையான புள்ளிகளைப் பெற்று, குறிப்பிட்ட தகுதிநிலைகளை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் பட்சத்தில், நீங்கள் எந்த நேரத்திலும் அடுத்த நிலைகளையும் அதிக வெகுமதிகளையும் பெறலாம்.

  • Uber Eats மூலம் டெலிவரி செய்யும் ஓட்டுனர்களுக்கும் டெலிவரிப் பயணங்களுக்கான புள்ளிகள் கிடைக்கும். Uber Eats பயணங்களில் முழுப் பயணக் காலத்தின் பார்வைகளை வழங்கும் வெகுமதிகள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

    Uber Eats ஆப்பைப் பயன்படுத்தி டெலிவரி மட்டுமே செய்யும் டெலிவரி செய்யும் நபர்கள் Uber Pro-க்குத் தகுதி பெற முடியாது. திட்டம் கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் Uber Eats Pro விற்குத் தகுதி பெறலாம். இங்கே மேலும் அறிக.

  *திட்ட வெகுமதிகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் மேலும் அது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்தப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ள வெகுமதிகள், Uber Pro கிடைக்கும் எல்லா நகரங்களிலும் கிடைக்காமல் போகலாம். முழு விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.

¹ஏரியா விருப்பத்தேர்வுகள் தற்போது அனைத்து அமெரிக்க நகரங்களிலும் கிடைக்காது. இந்த அம்சம் Uber Pro Platinum மற்றும் Diamond நிலைகளைக் கொண்ட ஓட்டுநர்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் வரை ரிடீம் செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, Uber Pro விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பாருங்கள்.

²ரொக்க வெகுமதியைப் பெற, 31 அக்டோபர் 2023-க்குள் ஒரு முழு Uber Pro திட்டச் சுழற்சிக்கான Diamond நிலையை அடைய வேண்டும் அல்லது அதற்கு மீண்டும் தகுதிபெற வேண்டும். Diamond நிலையை அடைந்த பிறகு, காலண்டர் காலாண்டில் வெகுமதி வழங்கப்படும். Uber இந்தப் புதிய சலுகையைப் பரிசோதித்து வருவதால் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். தொகை மாறுபடக்கூடும்.

²வங்கிச் சேவைகளை வழங்குவோர்: Evolve Bank & Trust வங்கி, FDIC உறுப்பினர். Uber Pro கார்டு Mastercard டெபிட் கார்டு ஆகும். அது Branch நிறுவனத்தால் இயக்கப்பட்டு, Mastercard வழங்கும் உரிமத்தின் அடிப்படையில் Evolve Bank & Trust வங்கியால் வழங்கப்படுகிறது. Mastercard டெபிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். பிற நிறுவனங்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளுக்கோ, அந்தத் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகள் சார்ந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்குமோ (நிதிசார் விதிமுறைகள் உட்பட) Uber பொறுப்பேற்காது.

இந்தத் திட்ட வெகுமதிகள் இடத்திற்கு இடமும் ஊபர் பிளஸ் நிலைக்கேற்றவாறும் மாறுபடும், மேலும் இது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்தப் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ள வெகுமதிகள், ஊபர் பிளஸ் உள்ள எல்லா நகரங்களிலும் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் மற்றும் விதிவிலக்குகள் பொருந்தும். முழு விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو