ஓ ட்டுநரின் தேவைகள்
சம்பாதிப்பதற்கான மூன்று வழிகள்
உரிமையாளராக உள்ள ஓட்டுனர்
ஓர் உரிமையாளராக உள்ள ஓட்டுநர் தனது சொந்த வாகனத்தை ஓட்டுவார். தேவைகள் நகரத்திற்கு ஏற்ப மாறும், ஆனால் பின்வரும் குறைந்தபட்ச தேவைகள் சில உள்ளன:
- வணிக ஓட்டுநர் உரிமம்
- போலீஸ் சரிபார்ப்பு
- பதிவுச் சான்றிதழ் (RC)
- வாகனக் காப்பீட்டு ஆவணம்
- சுற்றுலா அனுமதிப் பத்திரம்
பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்
ஓட்டுநரல்லாத பார்ட்னரின் வாகனத்தை பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுநர் ஓட்டுகிறார். பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுநர்களுக்கு கீழுள்ள ஆவணங்கள் தேவை:
- ஓட்டுநர் உரிமம்
- போலீஸ் சரிபார்ப்பு
ஓட்டுனரல்லாத பார்ட்னர்
ஒரு ஓட்டுநரல்லாத பார்ட்னர் அல்லது ஃப்ளீட் பார்ட்னர் என்பவர் Uber தளத்தில் வாகனம் ஓட்ட மாட்டார் ஆனால் வாகனத்தை (ங்களை) கொண்டிருப்பார் மற்றும் குறைந்தது ஒரு ஓட்டுநரை நிர்வகிப்பார். ஓட்டுநரல்லாத பார்ட்னர் ஆவதற்கான தேவைகள்:
- ஓட்டுநர் உரிமம் அல்லது புகைப்பட ID
- பதிவுச் சான்றிதழ் (RC)
- வாகனக் காப்பீட்டு ஆவணம்
- சுற்றுலா அனுமதிப் பத்திரம்
தொடங்குதல் மிகவும் எளிது
1. ஆன்லைனில் பதிவு செய்தல்
உங்களைப் பற்றியும், உங்களிடம் கார் இருந்தால் அது பற்றியும் எங்களிடம் தெரிவியுங்கள். இல்லையெனில், நீங்கள் ஒரு காரைப்பெற நாங்கள் உதவுகிறோம்.
2. சில ஆவணங்களைப் பகிரவும்
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் ஒரு நகல் பிரதி எங்களுக்கு தேவைப்படும்.
3. உங்கள் அகௌண்டைச் செயல்படுத்துதல்
உங்களது காரை உள்ளூர் சேவை மையத்திற்கு கொண்டு வரவும். நகரத்தைப் பொறுத்து தேவைகள் மாறும், அதனால் கூடுதல் தகவல்களைப் பார்க்க பதிவு செய்யவும்.
உங்கள் தனிப்பட்ட காரை வணிக வாகனமாக மாற்றவும்
பணம் சம்பாதிக்க அதைப் பயன்படுத்தத் தயாராகுங்கள்
உங்கள் தனிப்பட்ட காரை வணிக ரீதியான காராக ஏன் மாற்ற வேண்டும்?
விதிமுறைகளின் படி, இந்தியாவில் வணிகக் காராக இயங்கும் ஒவ்வொரு க ாருக்கும் வணிக உரிமம் இருக்க வேண்டும்.
மாற்றுச் செயல்முறைக்கு எவ்வளவு நேரம் ஆகலாம்?
நேரம் நகரத்திற்கு நகரம் மாறுபடும், ஆனால் பொதுவாக இதற்கு 7 முதல் 30 நாட்கள் ஆகும். கீழே உள்ள இணைப்பில் உங்கள் நகரத்திற்கான விவரங்களைக் கண்டறியவும்:
இதற்கு எவ்வளவு செலவாகும்?
நகரத்திற்கும் கார் மாடலுக்கும் ஏற்றவாறு கட்டணம் மாறுபடும். மாற்றுவதற்கு ரூ. 4,000 முதல் ரூ. 24.000. கீழே உள்ள இணைப்பில் உங்கள் நகரத்திற்கான விவரங்களைக் கண்டறியவும்:
உள்ளூர் வாகனத் தேவைகள்
மேலே உள்ள குறைந்தபட்ச தேவைகளுடன், ஒவ்வொரு நகரமும் அவற்றிற்கான விதிமுறைகளைக் கொண்டிருக்கும்.
உங்களுக்கு நீங்களே முதலாளி
இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் அறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.
அறிமுகம்