Uber உடன் ஓட்டுனர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்?
Uber செயலி மூலம் வாகனம் ஓட்டுவதால் சம்பாதிக்கும் தொகையானது, நீங்கள் எப்போது, எங்கே, எத்தனை பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்களது கட்டணங்க ள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள் மற்றும் ஊக்கத்தொகை குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள், இது உங்கள் சம்பாத்தியத்தை அதிகரிக்க உதவும்.¹
சம்பாத்தியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
Uber உடன் வாகனம் ஓட்டி உங்களால் எவ் வளவு சம்பாதிக்கமுடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒவ்வொரு பயணம் மும் நீங்கள் சம்பாதிக்கிற தொகையைத் தீர்மானிக்க, பின்வரும் காரணிகள் உதவுகின்றன.
வழக்கமான கட்டணம்
பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டணம் ஈட்டுகிறீர்கள்.
சர்ஜ்
பயணத்தின் தேவை எப்போது, எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிய, உங்கள் ஆப்பில் உள்ள ஹீட் மேப்பைச் சரிபார்க்கவும், இதன் மூலம் உங்கள் நிலையான கட்டணத்திற்கு மேல் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம்.
குறைந்தபட்ச பயணச் சம்பாத்தியம்
ஒவ்வொரு நகரத்திலும் எந்தவொரு பயணத்திற்கும் நீங்கள் சம்பாதிக்கும் குறைந்தபட்சத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூரப் பயணங்களை மேற்கொண்டால் கூட உங்களது முயற்சிக்கேற ்ற சம்பாத்தியம் வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
சேவைக் கட்டணம்
செயலி மேம்பாட்டிற்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் நிதியளிக்க இந்தக் கட்டணம் உதவும்.
ரத்துசெய்தல்கள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயணி ஒருவர் கோரிக்கையை ரத்து செய்தால், ரத்துசெய்தல் கட்டணத்தைப் பெறுவீர ்கள்.
ஊக்கத்தொகை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது
உங்களது சம்பாத்தியத்தை அதிகரிக்கும் இலக்குகளை அமைப்பதற்கும், முன்னதாகத் திட்டமிடுவதற்கும், உங்களின் பகுதியில் எங்கு அதிகப் பயணக் கோரிக்கைகளை Uber Driver செயலி எதிர்பார்க்கிறதோ அந்த இடத்தின் அடிப்படையில் செயலியில் ஊக்கத்தொகைகள் இருக்கும். எல்லா ஓட்டுநர்களுக்கும் எல்லா ஊக்கத்தொகைகளும் கிடைக்காது. விதிமுறைகளைக் கீழே காண்க.²
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்யுங்கள்
சலுகை கிடைக்கும் வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்து கூடுதல் பணம் சம்பாதியுங்கள்.
பிஸியான நேரங்களில் ஓட்டுங்கள்
பிஸியான நேரங்களில், சில பகுதிகளில் பயணங்களுக்குக் கூடுதல் பணம் பெறுங்கள்.
சம்பாதிப்பதற்கான இன்னும் சில வழிகள்
செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
உங்களின் பெரும்பான்மை நேரத்தைப் பய ணத்தில் செலவிட உதவும் சக்திவாய்ந்த அம்சங்கள் செயலியில் உள்ளன. போக்குகளைக் கண்காணிப்பதில் இருந்து அருகிலுள்ள சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது குறித்து உங்களுக்குத் தெரிவிப்பது வரை, சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான உங்களின் கருவியாக ஆப் இருக்கும்.
உங்கள் சேவைக்காக வெகுமானம் பெறுதல்
ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும், ஆப்பின் மூலம் பயணிகள் எளிதாக வெகுமானத்தை உங்களுக்கு அளிக்க முடியும். உங்களின் வெகுமானத்தை 100% நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுது மற்றும் எப்படி நீங்கள் பணம் பெறுகிறீர்கள்
கேஷ் அவுட்டை விரைவில் பெறுங்கள்
பணம் பெறுவது எளி து. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே. உங்கள் சம்பாத்தியம் வாரத்திற்கு ஒருமுறை பரிமாற்றப்படும்.
உங்களின் வாடிக்கையாளர்கள் பணமாகக் கொடுத்தால்
பணத்துடன், ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். ஆப் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையைக் காண்பிக்கும் மற்றும் Uber-க்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கிடும்.
ஓட்டுநர் செலவுகளில் சேமிக்கப்படுகிறது
உங்களின் சொந்த வியாபாரத்தை நடத்துவது இணக்கத்தன்மையையும், சில மேற்செலவுகளையும் கொண்டுவரும். எரிபொருள், காப்பீடு மற்றும் வாகன பராமரிப்பு ஆகியவற்றிற்கு வரிப்பிடித்தம் செய்யப்படலாம், மேலும் Uber உங்களை ஆதரிக்க, சலுகையை வழங்க பார்ட்னர்ஷிப்களைக் கொண்டுள்ளது.