Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

எங்களைப் பற்றி

நகரத்திற்குள்ளேயே பயணித்தாலும் சரி, தங்களின் கனவுகளை நோக்கிப் பயணித்தாலும் சரி, மக்கள் பயணிக்கும்போது நல்லவை நடக்கும். வாய்ப்புகள் உருவாகிடும், கிடைக்கப்பெறும், நிஜமாகிடும். ஒரு பட்டனைத் தட்டிப் பயணத்தைப் பெறும் வகையில் தொடங்கிய எங்கள் நிறுவனம், இன்று உலகெங்கிலும் கோடான கோடி மக்கள் பல்வேறு வகையான இடங்களுக்குப் பல்வேறு வழிகளில் எங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிப்பதன் மூலம் தொடர்பு கொள்வதற்கான தருணங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது.

எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியின் கடிதம்

எங்களின் உலகளாவிய தளத்தில் உள்ள அனைவருக்கும், அவர்கள் பயணங்களைச் செய்வதில் உதவக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குவதில் எங்கள் குழுவினருக்கு உள்ள உறுதிப்பாடு குறித்துப் படியுங்கள்.

2040ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரப் பயன்பாடு கொண்ட, உமிழ்வு எதுவும் இல்லாத வாகனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று Uber உறுதியேற்கிறது. அதாவது பொதுப் போக்குவரத்து அல்லது சிறு பயணச் சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பயணங்களும் உமிழ்வு எதுவும் இல்லாத வாகனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தில் எதிர்கொண்டு வருகின்ற சவாலை அதிக முனைப்புடன் சமாளிப்பது, உலகிலேயே பெரும் பயணச் சேவைத் தளமாக உள்ள எங்களின் பொறுப்பாகும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பயணம் செய்வதற்கு இன்னும் அதிக வழிகளை வழங்குதல், ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவுதல், வெளிப்படைத்தன்மையை முன்னுரிமைப்படுத்துதல், முற்றிலும் தூய்மையான ஆற்றல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் NGOகள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டிணைதல் ஆகியவற்றின் மூலம் இதை நாங்கள் செய்வோம்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்குப் பயணிகளுக்கு உதவுவதுடன் கூடுதலாக, தானியங்கு வாகன ஓட்டுதல் தொழில்நுட்பம், நகர்ப்புற வான் போக்குவரத்து, விரைவாகவும் குறைந்த விலையிலும் மக்கள் உணவுகளை ஆர்டர் செய்வதில் உதவுதல், மருத்துவத் துறையிலுள்ள தடைகளை அகற்றுதல், புதிய சரக்கு முன்பதிவுத் தீர்வுகளை உருவாக்குதல், நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்குச் சுமூகமான பயணங்களை வழங்க உதவுதல் ஆகியவற்றை விரைவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் சரி, பயணியாக இருந்தாலும் சரி, உங்கள் பாதுகாப்பு இன்றியமையாதது. எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் உறுதி கொண்டுள்ளோம், மேலும் தொழில்நுட்பமே எங்கள் அணுகுமுறையின் மைய ஆதாரமாக உள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கும் அனைவரும் பயணிப்பதை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டிணைந்து, புதிய தொழில்நுட்பங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம்.

Uber-ஐ வழிநடத்துவது யார்?

பயணிகளும் ஓட்டுநர்களும் பணியாளர்களும் சரியான விஷயங்களைச் செய்ய வலியுறுத்துகின்ற ஒரு கலாச்சாரத்தை Uber-இல் கட்டமைத்து வருகிறோம். வழிநடத்தும் குழுவினரைப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

பன்முகத்தன்மையைச் சரியாகப் பெறுதல்

அனைவரும் உண்மையாகவும் சுயமாகவும் இருக்க இயலக்கூடிய, நம்பகத்தன்மை ஒரு வலுவான அம்சமாகக் கருதப்படுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பணியிடத்தை உருவாக்குவதும், நாங்கள் சேவை செய்யும் நகரங்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதுமே எங்களின் குறிக்கோள். எல்லாப் பின்னணிகளில் இருந்தும் மக்களை உள்ளடக்கிய ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம், பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான ஒரு சிறந்த நிறுவனமாக Uber-ஐ நாங்கள் ஆக்குவோம்.

நேர்மையுடன் செயல்படுவது

நிறுவனத்திற்குள் மிக உயர்ந்த நிலையிலான நேர்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை Uber-இன் நெறிமுறைகள் & இணக்கத் திட்ட சாசனம் கோடிட்டுக் காட்டுகிறது. நெறிமுறையான கலாச்சாரத்திற்கு வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது; எங்களின் நேர்மையான உதவி மையம் மற்றும் எளிதில் எய்தக்கூடிய மற்றும் பயனுள்ள இணக்க முயற்சிகளின் தொகுப்பு மூலம் இதை நாங்கள் சாதிக்கிறோம்.

Uber மூலம் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தி அதைக் கோடிக் கணக்கானவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.

செய்தி அறை

கூட்டிணைவுகள், ஆப் புதுப்பிப்புகள், நிறுவன முன்முயற்சிகள் மற்றும் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள பலவற்றையும் குறித்த அறிவிப்புகளைப் பெறலாம்.

வலைப்பதிவு

சுற்றிப் பார்ப்பதற்கான புதிய இடங்களைக் கண்டறியலாம், அத்துடன் Uber தயாரிப்புகள், கூட்டிணைவுகள் மற்றும் பலவற்றை அறியலாம்.

முதலீட்டாளர் தொடர்புகள்

நிதி அறிக்கைகளைப் பதிவிறக்கலாம், அடுத்த காலாண்டுக்கான திட்டங்களைக் காணலாம், எங்களின் பெருநிறுவனப் பொறுப்புடைமை தொடர்பான முன்முயற்சிகளைப் படிக்கலாம்

உங்களுக்கு ஓட்டம் கிடைத்துள்ளது. எங்களுக்கு வேலைகள் கிடைத்துள்ளன.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو