முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஊபர் கேஷ் மூலம் உங்கள் பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறுங்கள்

ஊபர் கேஷ் எங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் பணம் செலுத்துவதற்கான எளிதான முறையாகும், இதன் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பயணங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தலாம். இந்தக் கட்டண முறை உங்கள் பகுதியில் கிடைக்கிறதா என்பதை அறிய, ஆப்பின் கட்டணங்கள் பிரிவைப் பாருங்கள்.

ஊபர் கேஷை ஏன் பயன்படுத்த வேண்டும்?

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

ஒரு பட்ஜெட்டை அமைத்து, செலவு செய்யுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் பயணங்களுக்கும் ஆர்டர்களுக்குமான தொகையைத் திட்டமிட்டு முன்கூட்டியே பணத்தை ஒதுக்கிக்கொள்ள ஊபர் கேஷ் உதவிடும்.

இப்போதே பணம் செலுத்தி, டென்ஷன் இல்லாமல் இருங்கள்

உங்கள் ஊபர் வாங்குதல்ளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கும், அவற்றிற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கும் ஊபர் கேஷ் உதவும். இந்த வகையில், எளிதில் கட்டணங்களைச் செலுத்தும் அனுபவத்தைப் பெறுவீர்கள்.

காலாவதித் தேதிகள் இல்லை

வாங்கிய நிதி ஒருபோதும் காலாவதியாகாது. உணவு, விமான நிலையப் பயணங்கள், பைக்குகள் மற்றும் பலவற்றிற்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஊபர் கேஷை எவ்வாறு பயன்படுத்துவது

நிதியைச் சேர்த்தல்

  • ஊபர் ஆப் மெனுவைத் திறந்து, கட்டணம்
  • என்பதைத் தட்டவும்
  • நிதியைச் சேர் என்பதைத் தட்டி, ஊபர் கேஷ் பேலன்ஸில் நீங்கள் சேர்க்க விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, வாங்கு
  • என்பதைத் தட்டவும்

 

நீங்கள் ஒரு வணிகச் சுயவிவரத்தைப் பயன்படுத்தினால் தவிர, உங்களின் அடுத்த பயணம் அல்லது ஊபர் ஈட்ஸ் ஆர்டருக்கு ஊபர் கேஷ் தானாகவே பயன்படுத்தப்படும். ஊபர் கேஷை முடக்க, நீங்கள் சேருமிடத்தை உள்ளிட்டு உங்கள் கட்டண முறையைத் தட்டவும்.

வசதியானது, தானியங்கியானது

தானாக மீண்டும் நிரப்புதலைத் தேர்வுசெய்து உங்கள் சேமிப்புகளில் சேருங்கள். உங்கள் பேலன்ஸ் $10-ஐ விடக் குறையும் போதெல்லாம் தானாக மீண்டும் நிரப்புதல் மூலம் உங்களின் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகை சேர்க்கப்படும்.*

பயணிகளின் பிரபலக் கேள்விகள்

மேலும் ஊபர் ஆப் அம்சங்களை ஆராயுங்கள்

*தானாக மீண்டும் நிரப்புதலுக்கான அமைப்புகளை மாற்றுவதற்கோ முடக்குவதற்கோ, ஊபர் ஆப்பில் உள்ள கட்டண மெனுவிற்குச் செல்லவும்.