நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள பாப்-அப் உணவகங்கள்
குளிர் காலங்களில் கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உதவுதல்.
COVID-19 ஆல் கறுப்பினத்தவருக்குச் சொந்தமான உணவகங்கள் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான உணவகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து செயல்பட, Valinc PR இன் வலேரி வில்சன், Harlem Park to Park இன் நிகோவா எவன்ஸ்-ஹென்ட்ரிக்ஸ் மற்றும் EatOkra ஆகியோருடன் அமெரிக்காவின் நியூயார்க், ஹார்லெமின் வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சுற்றுப் பகுதிகளில் வெளிப்புறங்களில் உணவு உண்ணும் அனுபவத்தை உருவாக்க இணைந்து செயல்பட்டோம். ஸ்ட்ரைவர்ஸ் ரோவில் ரினைசான்ஸ் பெவிலியனில், அமைந்துள்ள இந்த அமைப்பு பாதுகாப்பான, மனதிற்குகந்த மற்றும் இணக்கமான வெளிப்புற இருக்கைக்கான இடத்தை வழங்கியதின் மூலம் 6 சுயாதீன உணவகங்களை ஆதரித்தது.
புதிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பமுடியாத உணவு வகைகளைக் காட்சிப் படுத்தும் பாப்-அப்கள் மற்றும் உணவக அனுபவங்களை எளிதாக்குகிறோம், எங்கள் தளத்தில் அவர்களின் இருப்பை அதிகரிக்கிறோம், மேலும் அவர்கள் வளர உதவும் வகையில் தொடர்ந்து ஆதரிக்கப்படுவதை உறுதிசெய்கிறோம்.
2020 ஆம் ஆண்டு கோடையிலிருந்து ஹார்லெம் பிளாக் லைவ்ஸ் மேட்டர் சுவரோவியத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்ட 6 கலைஞர்களில் ஒருவரால் ஒவ்வொரு பகுதியும் கலைப்படைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களுக்கும் வணிக நிலையங்களுக்கும் ஹீட்டர்கள் மற்றும் ஏராளமான காற்றோட்ட வசதிகள் உணவருந்தும் அனுபவத்தை இனிமையாக்குவதற்குச் சேர்க்கப்பட்டுள்ளன.
அலிபி லவுஞ்ச்
நியூயார்க்கின் சில கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான LGBTQ+ பார்களில் ஒன்று, LGBTQ+ சமூகத்திற்கு வேடிக்கையான, நேர்த்தியான, நெருக்கமான, பாதுகாப்பான இடத்தை உருவாக்கியுள்ள, காபோனிலிருந்து குடியேறிய வித்தியாசமான கறுப்பினத்தவர் அலெக்ஸி மிங்கோ என்பவருக்குச் சொந்தமானது மேலும் அதை அவரே நடத்தியும் வருகிறார். முழுமையாக்கப்பட்ட பழமையான காக்டெய்ல்களுக்காக நகரெங்கும் பிரபலமான அ லிபிக்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
ஹார்லெம் சாக்லேட் தொழிற்சாலை
டிரஃபிள்ஸ், போன்பன்கள், பார்கள் மற்றும் பல: ஹார்லெம் சாக்லேட் தொழிற்சாலையின் நிறுவனர் ஜெசிகா ஸ்பால்டிங், ஹார்லெம் சமூகத்தின் வளமிக்க இன பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட இனிப்புகளை உருவாக்குகிறார்.
மா ஸ்மித்தின் டெசர்ட் கஃபே
குடும்பத்தினரால் நடத்தப்படும் இந்தப் பேக்கரி, வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான கேக்குகள் மற்றும் இனிப்புகளை நட்புடன் கூடிய தெற்கத்திய விருந்தோம்பலுடன் கலந்து வழங்குகிறது. பழுப்பு நிற வெல்வெட் கப்கேக்குகள் உள்ளிட்ட புதிய படைப்புகளுடன் பழைய விருப்பமானவை இடம் பெற்றிருக்கும்.