Skip to main content

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசு அட்டைகளை மொத்தமாக வாங்கவும்

உங்கள் குழுவிற்கு வெகுமதி அளிப்பதற்கும் உங்கள் வணிகத்திற்கு முக்கியமானவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் பரிசு அட்டைகள் சிறந்த வழியாகும்.

பரிசு அட்டைகளை வவுச்சர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்

பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை நீங்கள் சில வழிகளில் ஈடுசெய்யலாம் எந்த அணுகுமுறை உங்களுக்குச் சரியானது என்பதைக் கண்டறியுங்கள்.

கண்ணோட்டம்

பரிசு அட்டைகள்: உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்த வழங்குவதற்கு நீங்கள் Uber கிரெடிட்டை வாங்குவீர்கள்.

வவுச்சர்கள்: பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு Uber கிரெடிட்டை நீங்கள் வழங்கி, அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் அல்லது ஆர்டர் செய்த உணவுகளுக்கு மட்டும் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் அளவுருக்களையும் கட்டுப்படுத்தலாம் மேலும் கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்கலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?

பரிசு அட்டைகள்: டிஜிட்டல் கார்டுகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறுநர்களுக்கு அனுப்பலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அசல் பரிசு அட்டைகள் எங்கள் விற்பனைக் குழு மூலம் கிடைக்கின்றன. கார்டுகளை இங்கே வாங்கவும்.

வவுச்சர்கள்: Uber கிரெடிட்டை பெறுநர்களுக்கு விநியோகித்து காலாவதியாகும் தேதிகள், இட வரம்புகள் மற்றும்/அல்லது கிரெடிட்டைப் பயன்படுத்தக்கூடிய நாள் மற்றும் நேரம் போன்ற கட்டுப்பாடுகளை அமைக்கவும். பெறுநர்கள் தங்களின் Uber அல்லது Uber Eats ஆப்பில் இருந்து பயணங்கள் அல்லது உணவுகளைக் கோரி அவற்றை வாங்க வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்.

நான் எவ்வாறு பணம் செலுத்துவது?

பரிசு அட்டைகள்: பரிசு அட்டையை வாங்கும் போது அதற்கான முழுத் தொகையையும் நீங்கள் செலுத்துவீர்கள்.

வவுச்சர்கள்: பயனர் வவுச்சரை ரிடீம் செய்யும்போது அல்லது பயணத்துக்கோ உணவுக்கோ பயன்படுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் $100-ஐ வவுச்சராக விநியோகிக்கும் போது அதில் $50 மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் $50 செலுத்துவீர்கள்.

இந்தத் தயாரிப்புகளைப் பொதுவாக வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

பரிசு அட்டைகள்: பரிசு அட்டைகளை நிறுவனங்கள் பயன்படுத்தும் சில வழிகள்: ஆண்டு முடிவின்போது அல்லது விடுமுறைக் காலத்தின்போது பணியாளர்களுக்கு வழங்கும் பரிசுகள், கார்ப்பரேட் பரிசுகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் அல்லது இலவசங்கள்.

வவுச்சர்கள்: நிறுவனங்கள் வவுச்சர்களைப் பயன்படுத்தும் சில வழிகளில் விர்ச்சுவல் நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு உணவுகளை வாங்குதல், தங்கள் வணிகத்திற்கு அதிகப் பயனர்களை வரவைப்பதற்காக பயணச் செலவுகளை ஈடுசெய்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு வெகுமதியாக மானிய விலையில் உணவை வழங்குவது ஆகியவை அடங்கும்.

பரிசு அட்டைகள் வாங்குவதற்கு எளிதானவை, பயன்படுத்துவதற்கு சுலபமானவை

விற்பனைக் குழுவினருடன் பேசுங்கள்

$5,000 மேல் பரிசு அட்டைகளை வாங்க வேண்டுமா? பல நாணய ஆர்டர்களில் உதவி தேவையா அல்லது அசல் கார்டுகளை வாங்க முயற்சி செய்குறீர்களா? உங்கள் ஆர்டரை ஒழுங்கமைத்து வழங்க உதவுவதில் எங்கள் குழு மகிழ்ச்சியடைகிறது.

நிறுவனங்கள் எங்கள் பரிசு அட்டைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன

1/3

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பரிசு அட்டைகளைப் பெறுபவர்கள் அவற்றை Uber மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்த முடியுமா?

ஆம், பரிசு அட்டைகள் ஒரு கணக்கில் பயன்படுத்தப்பட்டதும், அது ஆப்-இன் பணப்பை பிரிவில் Uber Cash அல்லது Uber கிரெடிட்டாக மாற்றப்படும். மேலும் அதை Uber-இல் பயணம் செய்யவோ Uber Eats-இல் உணவு ஆர்டர் செய்யவோ பயன்படுத்தலாம்.

பரிசு அட்டைகள் வரிகளையும் கட்டணங்களையும் உள்ளடக்குமா?

ஆம், Uber பரிசு அட்டைகளில் Uber பரிவர்த்தனைக்கான வரி, கட்டணம், வெகுமானங்கள் ஆகியவை உள்ளடக்கப்படும்.

பரிசு அட்டைகள் எங்கே கிடைக்கின்றன?

பரிசு அட்டைகள் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இந்தியா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றன. AUD, BRL, CAD, INR, MXN, ZAF, GBP மற்றும் USD ஆகியவை ஆதரிக்கப்படும் நாணயங்களில் அடங்கும்.

பரிசு அட்டைகள் அசலா அல்லது டிஜிட்டலா?

பரிசு அட்டைகள் இயல்பாக டிஜிட்டல் வடிவில் இருக்கும் (அசல் அட்டை இல்லை). அசல் பரிசு அட்டைகள் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன, அவற்றை எங்கள் விற்பனைக் குழு மூலம் மட்டுமே வாங்க முடியும்.

பரிசு அட்டைகளை எவ்வாறு வழங்குவது?

பெறுநர்கள் டிஜிட்டல் அட்டைகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். பெரும் தொகையை ஏற்று ஒவ்வொரு பரிசுக் குறியீட்டையும் தனிப்பட்ட பெறுநர்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் செய்வோம் அல்லது அவற்றை நீங்களே விநியோகிக்கும் வகையில் அசல் அட்டைகளைப் பெறவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

பரிசு அட்டைகளுக்கு நான் எவ்வாறு பணம் செலுத்துவது?

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ACH/வயர் பரிமாற்றம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம். வயர் பரிமாற்றக் கட்டணத்தை உங்கள் வங்கி நிறுவனம் விதிக்கலாம், அதனை உள்ளடக்குவது உங்கள் பொறுப்பாகும்.

என்னென்ன நாணய பிரிவில் கிடைக்கின்றன?

ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சப் பரிசு அட்டைத் தொகைகள் உள்ளன. டிஜிட்டல் பரிசு குறியீடுகளை, கிடைக்கக்கூடிய எந்த நாணயத்திலும் பல முழுத் தொகைகளில் உருவாக்கலாம். எங்கள் விற்பனைக் குழுவுடன் பண மதிப்புத் தேவைகளைப் பற்றி விவாதிக்கவும்.