பதிவுசெய்வதிலோ விற்பனைக் குழு உறுப்பினரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதிலோ உங்களுக்குச் சிக்கல் இருக்கக்கூடும். பயணங்களுக்கான வவுச்சர்கள் உங்கள் நாட்டில் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பயணங்கள் மற்றும் உணவுகளின் செலவை வவுச்சர்கள் மூலம் ஈடுகட்டுங்கள்
புதிய வாடிக்கையாளர்களை அடையலாம், உங்கள் வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கு வி.ஐ.பி கவனிப்பை வழங்கலாம்.
வவுச்சர்கள் மூலம் எந்தவொரு அனுபவத்தையும் மேம்படுத்திடுங்கள்
வாடிக்கையாளர் மன நிறைவை மேம்படுத்துங்கள்
நீங்கள் வியப்பூட்ட விரும்பினாலும் சரி, மகிழ்ச்சியூட்ட விரும்பினாலும் சரி, அல்லது விஷயங்களைச் சரி செய்ய விரும்பினாலும் சரி, வாடிக்கையாளர் விசுவாசத்தை தூண்டுவதை வவுச்சர்கள் எளிதாக்குகின்றன.
வாடிக்கையாளர் வருகையை அதிகரியுங்கள்
அதற்கு நீங்கள் பணம் கொடுத்தால், அவர்கள் வருவார்கள். உங்கள் கடைக்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்குத் தள்ளுபடி வழங்கலாம். பெரிய அறிமுக நிகழ்வுகளுக்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் வர வைப்பதற்கும் மிகச் சிறந்தது.
விளம்பரங்களின்மூலம் தேவையை உருவாக்குங்கள்
இலவசப் பயணங்கள் மற்றும் உணவுகளைச் சுற்றி உருவாக்கப்பட்ட சலுகைகள் மூலம் உங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளை இன்னும் சிறப்பாக்கலாம். வாடிக்கையாளர் கையகப்படுத்துதலுக்கு மிகச் சிறந்தது.
விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு மதிய உணவு வழங்குங்கள்
அதிக விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு வவுச்சர்களை அனுப்புவதன் மூலம் மதிய உணவுக்கான செலவை ஈடுசெய்யலாம். உணவளிப்பது எப்போதும் நல்ல உரையாடலைத் தொடங்க உதவிடும்.
ஒரு தனித்துவமான பணியாளர் பெர்க்கை வழங்குங்கள்
ஒரு வேலை நிகழ்வுக்கான பயணம், அல்லது உணவுக்கான மாதாந்திர உதவித்தொகை என எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் மக்களை மகிழ்ச்சியாகவும் ஊக்கத்துடனும் வைத்திருக்க வவுச்சர்கள் உதவும்.
உங்கள் ஆட்சேர்ப்பை மேம்படுத்துங்கள்
விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் அவர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதிசெய்ய இயலுவதுடன், சிறப்பு சலுகையை அளித்து அவர்களை மகிழ்விக்கலாம்.
வவுச்சர்களைப் பரிசு அட்டைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை நீங்கள் சில வழிகளில் ஈடுகட்டலாம். எந்த அணுகுமுறை உங்களுக்குச் சரியானது என்பதைக் கண்டறியுங்கள்.
- கண்ணோட்டம்
வவுச்சர்கள்: பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு Uber கிரெடிட்டை நீங்கள் வழங்கி, அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் அல்லது ஆர்டர் செய்த உணவுகளுக்கு மட்டும் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் செலவைக் கட்டுக்குள் வைக்க இயலுவதோடு, கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்க இயலும்.
பரிசு அட்டைகள்: பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்காக உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு நீங்கள் கிரெடிட்டை வாங்குவீர்கள்.
- இது எவ்வாறு வேலை செய்கிறது?
வவுச்சர்கள்: காலாவதியாகும் தேதி, பயன்படுத்தும் இடம் தொடர்பான வரம்புகள் மற்றும்/அல்லது கிரெடிட்டைப் பயன்படுத்தக்கூடிய கடைசி நாள் மற்றும் நேரம் போன்றவற்றைக் கட்டுப்பாடுக்களாக அமைத்து, Uber கிரெடிட்டைப் பயனர்களுக்கு வழங்குவீர்கள். பெறுநர்கள் தங்களின் Uber அல்லது Uber Eats ஆப்-இல் இருந்து பயணங்கள் அல்லது உணவைக் கோரிக்கை செய்து, அவற்றுக்குப் பணம் செலுத்த வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். இங்கே பதிவுசெய்யலாம்.
பரிசு அட்டைகள்: டிஜிட்டல் அட்டைகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறுநர்களுக்கு அனுப்பலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அசல் பரிசு அட்டைகளை எங்கள் விற்பனைக் குழுவிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். கார்டுகளை இங்கே ஆன்லைனிலும் இங்கே விற்பனைக் குழுவிடமிருந்தும் வாங்கலாம்.
- நான் எவ்வாறு பணம் செலுத்துவது?
வவுச்சர்கள்: பயனர் வவுச்சரை ரிடீம் செய்யும்போது அல்லது பயணம் அல்லது உணவுக்குப் பயன்படுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் $100 வவுச்சரைச் கொடுத்திருந்து அதில் $50 மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் $50 செலுத்துவீர்கள்.
பரிசு அட்டைகள்: பயனர் பர்ச்சேஸ் செய்யும்போது பரிசு அட்டைக்கான தொகையை முழுமையாக நீங்கள் செலுத்துவீர்கள்.
- இந்தத் தயாரிப்புகளைப் பொதுவாக வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?
வவுச்சர்கள்: வவுச்சர்களை நிறுவனங்கள் பயன்படுத்தும் சில வழிகள்: விர்ச்சுவல் நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு உணவுகளை வாங்குதல், தங்கள் வணிகத்திற்கு அதிகப் பயனர்களை வரவைப்பதற்காக பயணச் செலவுகளை ஈடுசெய்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு வெகுமதி வடிவில் வவுச்சர்களை வழங்குதல்.
பரிசு அட்டைகள்: பரிசு அட்டைகளை நிறுவனங்கள் பயன்படுத்தும் சில வழிகள்: ஆண்டு முடிவின்போது அல்லது விடுமுறைக் காலத்தின்போது பணியாளர்களுக்கு வழங்கும் பரிசுகள், கார்ப்பரேட் பரிசுகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் அன்பளிப்புகள், மற்றும் பரிசுகள் அல்லது இலவசங்கள்.
வவுச்சர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?
உங்கள் மக்கள் விரும்பும் ஒரு நன்மை
உலகளவில் இலட்சக்கணக்கான கணக்கான மக்கள் Uber-ஐப் பயன்படுத்துகின்றனர். உங்கள் வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் ஏற்கனவே நம்பிக்கை கொண்டுள்ள ஒரு சேவையின் செலவை ஈடுசெய்து அவர்களை மகிழ்விக்கலாம்.
அனுப்புவதும் பயன்படுத்துவதும் எளிது
வவுச்சர்களை உடனடியாக உருவாக்கி மின்னஞ்சல், உரைச்செய்தி மற்றும் பிற வழிமுறைகளின் மூலம் அனுப்பலாம். வாடிக்கையாளர்கள் ஒரே தட்டலில் அவற்றைப் பயன்படுத்தலாம், உங்கள் செலவில் அவர்கள் பயணங்களை மேற்கொள்ளலாம்.
நுண்ணறிவுகளையும் அறிக்கைகளையும் உருவாக்குவது எளிது
Uber for Business டேஷ்போர்டு வழியாக வவுச்சர்களின் பயன்பாட்டு நிலையைப் பின்தொடரலாம். உங்கள் அடுத்த முயற்சியை இன்னும் வெற்றிகரமாகச் செய்ய, முடிவுகளைப் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்களுக்கு $100 மதிப்புள்ள Uber Eats கிரெடிட்டை அளித்த பின், Samsung நிறுவனம் தனது Galaxy மொபைல் கருவி விற்பனையில் 20% அதிகரிப்பைக் கண்டுள்ளது.
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
வழங்கல்
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்