Please enable Javascript
Skip to main content

டாரா கோஸ்ரோவ்ஷாஹி

தலைமை நிர்வாக அதிகாரி

டாரா கோஸ்ரோவ்ஷாஹி Uber-இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக, 2017 முதல் உலகெங்கிலும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் வணிகத்தை நிர்வகித்து வருகிறார்.

டாரா முன்னதாக Expedia-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. பொறியியல் மற்றும் நிதி இரண்டிலும் சிறந்த தொழில்முறை பின்னணியைக் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த நிர்வாகியான டாரா, தனது தீவிர முயற்சிகளால் நிறைய வெற்றிகளை அடைந்துள்ளார். இது Expedia-இன் சலுகைகளை வலுப்படுத்தியதோடு மொபைலில் பெரிய அளவில் முதலீடு செய்யவும் தூண்டியது. இது இப்போது Expedia-இன் பாதிக்கும் மேலான வணிகப் போக்குவரத்திற்கு பங்கு வகிக்கிறது. Expedia பணியாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இவர் Glassdoor-இல் உயர் தரமதிப்பீடு பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகளில் (CEO) ஒருவராகத் திகழ்கிறார். 2002-இல் Expedia-வை வாங்கியப் பின் 2005-இல் அதைப் புதிய நிறுவனமாக உருவாக்கிய IAC-இன் ஒரு பிரிவான IAC Travel-இன் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர், டாரா Expedia-இன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் (CEO) பதவி உயர்வு பெற்றார். IAC-இன் பயண பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

IAC-இல் இணைவதற்கு முன்பு, டாரா Allen & Company-இன் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார் மேலும் ஒரு வணிகப் பகுப்பாய்வாளராகப் பல ஆண்டுகள் தன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இதற்கு முன்னர் New York Times நிறுவன குழுமத்தில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருந்தவர் தற்போது Expedia மற்றும் Catalyst.org-இன் இயக்குநர்கள் குழுமத்தில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருந்து வருகிறார். 9 வயதில் ஈரானிய புரட்சியின் போது ஈரானை விட்டு வெளியேறியவர், உலகெங்கிலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அகதிகளுக்காக உற்சாகத்துடன் உதவி வரும் ஒரு வழக்கறிஞராகத் திகழ்ந்து வருகிறார்.

டாரா நியூயார்க்கின் டாரிடவுனில் வளர்ந்தவர், மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.