Please enable Javascript
Skip to main content

நிலைத்தன்மையின் சவாலை எதிர்கொள்வோம்

காலநிலை மாற்றத்தை சமாளிப்பது ஒரு குழுவாக மேற்கொள்ளும் முயற்சி. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் பெருமைமிகு நிலைத்தன்மை பார்ட்னராக, எதிர்கால காலநிலை இலக்குகளில் தற்போதே தாக்கத்தைக் கொண்டுவர Uber for Business உதவுகிறது.

கார்பன் உமிழ்வை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

Uber for Business ஆனது விரிவான காலநிலை அளவீடுகள், வெளிப்படையான உமிழ்வு கண்காணிப்பு மற்றும் ஒவ்வொரு பணியாளருக்குமான பசுமையான விருப்பங்களை வழங்க உதவும்.

நிறுவனம் முழுவதிற்குமான உமிழ்வு அறிக்கை

மொத்த CO₂ உமிழ்வுகள், குறைந்த உமிழ்வுப் பயணங்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் சராசரியாக ஒரு மைலுக்கு வெளியாகும் CO₂-இன் அளவு உட்பட உங்கள் நிறுவனத்தின் சாதனைகளை அளவிடவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் தெளிவான காலநிலை அளவீடுகளைப் பெறுங்கள்.

உமிழ்வு இல்லாத மற்றும் குறைந்த உமிழ்வுப் பயணங்கள்

உங்கள் நிலைத்தன்மை இலக்குகள் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. எங்களின் Uber Green, EV மற்றும் ஹைப்ரிட் பயண விருப்பமானது, உமிழ்வு இல்லாத அல்லது குறைந்த உமிழ்வுடன் கூடிய பயணங்களுக்கு மிகவும் பரவலாகக் கிடைக்கக் கூடிய போக்குவரத்துத் தீர்வாகும், உங்கள் பணியாளர்கள் ஒரே தட்டுதலில் இந்தப் பயணங்களைப் பெறலாம்.*

குழு ஆர்டர்களுடன் டெலிவரி செய்வதற்கான பசுமையான விருப்பங்கள்

டெலிவரி செயல்திறனை மேம்படுத்தும் அதே நேரத்தில் நிறுவனத்தின் நம்பிக்கையையும் வழங்குங்கள். டெலிவரிக்கு குறைவானப் பயணங்களே தேவைப்படும் என்பதால், குழு ஆர்டர்கள் உங்கள் முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எளிதான, நிலையான தேர்வாக இருக்கும்.

டேஷ்போர்டில் உங்கள் காலநிலை முன்னேற்றத்தைக் கண்காணியுங்கள்

உங்கள் வணிகத்தில் நிலைத்தன்மை இலக்கை அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எளிதாகப் பார்க்கவும், கண்காணிக்கவும், பகிரவும் Uber for Business டேஷ்போர்டைப் பார்வையிடுங்கள்.

படி 1

நீங்கள் பார்ட்னராக மாறும்போது, உங்களுக்கான நிறுவனத்தின் டேஷ்போர்டு அமைக்கப்படும், மேலும் உங்கள் Uber for Business கணக்கில் சேர்வதற்கான இணைப்புகளைப் பணியாளர்கள் பெறுவார்கள்.

படி 2

பணியாளர்கள் தங்கள் Uber for Business கணக்கை இணைத்ததும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட சுயவிவரத்திலிருந்து வணிக சுயவிவரத்திற்கு மாறலாம் மற்றும் Uber ஆப்-இல் இருந்து நேரடியாக Uber Green உடன் பயணம் செய்யக் கோரலாம்.*

படி 3

ஒவ்வொரு உமிழ்வு இல்லாத மற்றும் குறைந்த உமிழ்வு பயணமும் உங்கள் நிறுவனத்தின் டேஷ்போர்டில் தானாகவே கணக்கிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, அளவிடப்படும்.

படி 4

மொத்த உமிழ்வுகள், குறைந்த உமிழ்வு பயணங்கள், சராசரியாக ஒரு மைலுக்கு வெளியாகும் CO₂ உமிழ்வுகள் மற்றும் அந்தந்தக் காலங்கில் நிறுவனத்தின் முன்னேற்றம் போன்ற முக்கிய புள்ளிவிவரங்களைப் பார்க்க நிர்வாகிகள் எந்த நேரத்திலும் டேஷ்போர்டை அணுகலாம்.

“வாகன போக்குவரத்து பக்கத்தில், அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் குறைந்த உமிழ்வு மற்றும் உமிழ்வு இல்லாத பயணத்தை ஒரு பொத்தானைத் தட்டினால் அணுகக்கூடிய வகையில் மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். நீங்கள் Uber உடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், அது உலகில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும்."

கிறிஸ்டோபர் ஹூக், உலகளாவிய நிலைத்தன்மை தலைவர், Uber

பூஜ்ய உமிழ்வை நோக்கிய பாதையில்

எதிர்கால நிலைத்தன்மை இணைந்து செயல்படுதலில் உள்ளது

*Uber Green is available only in certain cities. In addition, availability may be limited outside of downtown areas to start.

**The ride options on this page are a sample of products available with Uber. Some might not be available where your employees or customers use the Uber app.