எங்களைப் பற்றி
உலகம் சிறப்பாக பயணம் செய்யும் வழியை மீண்டும் கற்பனை செய்கிறோம்
பயணம் எங்கள் ஆற்றல் அதுவே எங்கள் உயிர். எங்கள் நாடிநரம்புகள் வழியாக ஓடும் செந்நீர். அதுதான் அனுதினமும் எங்களைத் தட்டி எழுப்புகிறது. பயணத்தை மேலும் சிறப்பாக்குவது எப்படி என்று எங்களைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது. உங்களுக்காக. நீங்கள் செல்ல விரும்பும் அனைத்து இடங்களுக்கும். நீங்கள் பெற விரும்பும் அனைத்து பொருட்களுக்கும். நீங்கள் சம்பாதிக்க விரும்பும் அனைத்து வழிகளுக்கும். உலகம் முழுவதும். நிகழ் நேரத்தில். நிகழ்காலத்தின் நம்பமுடியாத வேகத்தில்.
எங்கள் CEO இன் கடிதம்
எ ங்கள் உலகளாவிய தளத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் முன்னேற உதவும் தொழில்நுட்பத்தை வழங்கிட எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பைப் பற்றி படிக்கவும்.
நிலைக்கும் தன்மை
பொதுப் போக்குவரத்து அல்லது சிறு பயணச் சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் 100% பயணங்களும் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களில் மேற்கொள்ளப்படும் வகையில் 2040ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரப் பயன்பாடு கொண்ட, உமிழ்வு எதுவும் இல்லாத வாகனங்களைக் கொண்டிருக்கும் தளமாக மாற Uber உறுதிபூண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தில் உள்ள சவாலை அதிக முனைப்புடன் சமாளிப்பது, உலகிலேயே பெரும் பயணச் சேவைத் தளமாக உள்ள எங்களின் பொறுப்பாகும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பயணம் செய்வதற்கு இன்னும் அதிக வழிகளை வழங்குதல், ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவுதல், வெளிப்படைத்தன்மையை முன்னுரிமைப்படுத்துதல், முற்றிலும் தூய்மையான ஆற்றல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் NGOகள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டிணைதல் ஆகியவற்றின் மூலம் இதை நாங்கள் செய்வோம்.
பயணங்களும் இன்னும் பல சேவைகளும்
பயணிகளுக்கு புள்ளி A இலிருந்து புள்ளி B வரை செல்வதற்கான பயணத்தை வழங்குவதுடன், மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் விரைவாக உணவை ஆர்டர் செய்யவும், சுகாதாரப் பாதுகாப்பிற்கான தடைகளை நீக்கவும், சரக்கு முன்பதிவுக்கான புதிய தீர்வுகளை உருவாக்கவும் உதவுவதோடு தடையற்ற பணியாளர் பயண அனுபவத்தை வழங்க நிறுவனங்களுக்கு உதவியும் செய்து வருகிறோம். மேலும் ஓட்டுநர்களும் கூரியர்களும் சம்பாதிக்கவும் எப்போதும் உதவுகிறோம்.