Please enable Javascript
Skip to main content

எங்களைப் பற்றி

உலகம் சிறப்பாக பயணம் செய்யும் வழியை மீண்டும் கற்பனை செய்கிறோம்

பயணம் எங்கள் ஆற்றல் அதுவே எங்கள் உயிர். எங்கள் நாடிநரம்புகள் வழியாக ஓடும் செந்நீர். அதுதான் அனுதினமும் எங்களைத் தட்டி எழுப்புகிறது. பயணத்தை மேலும் சிறப்பாக்குவது எப்படி என்று எங்களைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது. உங்களுக்காக. நீங்கள் செல்ல விரும்பும் அனைத்து இடங்களுக்கும். நீங்கள் பெற விரும்பும் அனைத்து பொருட்களுக்கும். நீங்கள் சம்பாதிக்க விரும்பும் அனைத்து வழிகளுக்கும். உலகம் முழுவதும். நிகழ் நேரத்தில். நிகழ்காலத்தின் நம்பமுடியாத வேகத்தில்.

எங்கள் CEO இன் கடிதம்

எங்கள் உலகளாவிய தளத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் முன்னேற உதவும் தொழில்நுட்பத்தை வழங்கிட எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பைப் பற்றி படிக்கவும்.

நிலைக்கும் தன்மை

பொதுப் போக்குவரத்து அல்லது சிறு பயணச் சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் 100% பயணங்களும் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களில் மேற்கொள்ளப்படும் வகையில் 2040ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரப் பயன்பாடு கொண்ட, உமிழ்வு எதுவும் இல்லாத வாகனங்களைக் கொண்டிருக்கும் தளமாக மாற Uber உறுதிபூண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தில் உள்ள சவாலை அதிக முனைப்புடன் சமாளிப்பது, உலகிலேயே பெரும் பயணச் சேவைத் தளமாக உள்ள எங்களின் பொறுப்பாகும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பயணம் செய்வதற்கு இன்னும் அதிக வழிகளை வழங்குதல், ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவுதல், வெளிப்படைத்தன்மையை முன்னுரிமைப்படுத்துதல், முற்றிலும் தூய்மையான ஆற்றல் பரிமாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் NGOகள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டிணைதல் ஆகியவற்றின் மூலம் இதை நாங்கள் செய்வோம்.

பயணங்களும் இன்னும் பல சேவைகளும்

பயணிகளுக்கு புள்ளி A இலிருந்து புள்ளி B வரை செல்வதற்கான பயணத்தை வழங்குவதுடன், மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் விரைவாக உணவை ஆர்டர் செய்யவும், சுகாதாரப் பாதுகாப்பிற்கான தடைகளை நீக்கவும், சரக்கு முன்பதிவுக்கான புதிய தீர்வுகளை உருவாக்கவும் உதவுவதோடு தடையற்ற பணியாளர் பயண அனுபவத்தை வழங்க நிறுவனங்களுக்கு உதவியும் செய்து வருகிறோம். மேலும் ஓட்டுநர்களும் கூரியர்களும் சம்பாதிக்கவும் எப்போதும் உதவுகிறோம்.

உங்கள் பாதுகாப்பே எங்களின் உந்துதல்

நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் சரி, பயணியாக இருந்தாலும் சரி, உங்கள் பாதுகாப்பு இன்றியமையாதது. எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் உறுதி கொண்டுள்ளோம், மேலும் தொழில்நுட்பமே எங்கள் அணுகுமுறையின் மைய ஆதாரமாக உள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கும் அனைவரும் பயணிப்பதை எளிதாக்குவதற்கும், பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டிணைந்து, புதிய தொழில்நுட்பங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம்.

நிறுவனத்தின் தகவல்

பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான விடயங்களைச் செய்ய வலியுறுத்துகின்ற ஒரு கலாச்சாரத்தை Uber-இல் கட்டமைத்து வருகிறோம். வழிநடத்தும் குழுவினரைப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

நிறுவனத்திற்குள் மிக உயர்ந்த நிலையிலான நேர்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை Uber-இன் நெறிமுறைகள் & இணக்கத் திட்ட சாசனம் கோடிட்டுக் காட்டுகிறது. நெறிமுறையான கலாச்சாரத்திற்கு வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது; எங்களின் நேர்மையான உதவி மையம் மற்றும் எளிதில் எய்தக்கூடிய மற்றும் பயனுள்ள இணக்க முயற்சிகளின் தொகுப்பு மூலம் இதை நாங்கள் சாதிக்கிறோம்.

சமீபத்திய தகவல்களை அறிந்திருங்கள்

பார்ட்னர்ஷிப் பற்றிய அறிவிப்புகள், ஆப் புதுப்பிப்புகள், நிறுவன முன்முயற்சிகள், உங்கள் அருகில் மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் அறிவிப்புகளைப் பெறுங்கள்.

சுற்றிப் பார்ப்பதற்கான புதிய இடங்களைக் கண்டறியலாம், அத்துடன் Uber தயாரிப்புகள், பார்ட்னர்ஷிப் மற்றும் பலவற்றை அறியலாம்.

நிதி அறிக்கைகளைப் பதிவிறக்கலாம், அடுத்த காலாண்டுக்கான திட்டங்களைக் காணலாம் மேலும் எங்கள் பெருநிறுவனப் பொறுப்புடைமை தொடர்பான முன்முயற்சிகளைப் படிக்கலாம்.

எங்களுடன் சேர்ந்து புதுமைகளை உருவாக்குங்கள்