உங்கள் வணிகம் தொடர்பான உணவு ஆர்டர்கள் மற்றும் பயணங்களை ஒரே டேஷ்போர்டில் நிர்வகிக்கலாம்
பில்லிங்கை நிர்வகித்தல், கணக்குச் சலுகைகளைக் கட்டுப்படுத்துதல், திட்டச் செலவினங்களில் தெரிவுநிலையைப் பெறுதல் மற்றும் பலவற்றை பிரதான டேஷ்போர்டில் இருந்து கொண்டே செய்யலாம்.
ஒரே பிரதான டேஷ்போர்டிலிருந்து சக்திவாய்ந்த அம்சங்களை அணுகுங்கள்
விதிகளை அமையுங்கள்
உங்கள் குழுவின் பயணம் மற்றும் உணவுக் கொள்கைகளைத் தனிப்பயனாக்கலாம். இடம், செலவு மற்றும் நேர வரம்புகளை வரையறுக்கலாம்.
பில்லிங்கை நிர்வகித்தல்
ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்தத் தேர்வு செய்யலாம் அல்லது மாதாந்திர பில்லிங்கைத் தேர்வுசெய்து அதற்கேற்ப ஒரே ரசீதைப் பெறலாம்.
கார்பன் உமிழ்வைக் கண்காணித்தல்
உங்கள் நிறுவனத்தின் தரைவழிப் போக்குவரத் தினால் ஏற்படும் கார்பன் உமிழ்வின் அளவை மதிப்பிடுங்கள். நிலையான எதிர்காலத்தை நோக்கிய உங்கள் பயணத்தில் உங்களின் முன்னேற்றத்தையும் மதிப்பிடுங்கள்.
செயல்பாட்டைக் கண்காணியுங்கள்
ஊழியர்கள் அனைவரின் பயணங்களையும் உணவு ஆர்டர்களையும் ஒரே காட்சியில் மதிப்பாய்வு செய்யலாம். நேரம், இடம், செலவு மற்றும் பலவற்றின் தரவைக் கொண்டு நுட்பமான விவரங்களைக் கொண்ட அறிக்கைகளை உருவாக்குங்கள்.
செலவின ஒருங்கிணைப்புகளை அமையுங்கள்
SAP Concur, Zoho Expense போன்ற பிற செலவின மேலாண்மைச் சேவை வழங்குநர்களுக்கு Uber ரசீது பகிர்தலை அமைக்கலாம்.