Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பரிசு அட்டைகளை மொத்தமாக வாங்கவும்

உங்கள் குழுவிற்கு வெகுமதி அளிப்பதற்கும் உங்கள் வணிகத்திற்கு முக்கியமானவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் பரிசு அட்டைகள் சிறந்த வழியாகும்.

பரிசு அட்டைகளை வவுச்சர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்

பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை நீங்கள் சில வழிகளில் ஈடுசெய்யலாம் எந்த அணுகுமுறை உங்களுக்குச் சரியானது என்பதைக் கண்டறியுங்கள்.

  • பரிசு அட்டைகள்: உங்கள் பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்த வழங்குவதற்கு நீங்கள் Uber கிரெடிட்டை வாங்குவீர்கள்.

    வவுச்சர்கள்: பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு Uber கிரெடிட்டை நீங்கள் வழங்கி, அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் அல்லது ஆர்டர் செய்த உணவுகளுக்கு மட்டும் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் அளவுருக்களையும் கட்டுப்படுத்தலாம் மேலும் கிரெடிட் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்கலாம்.

  • பரிசு அட்டைகள்: டிஜிட்டல் கார்டுகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறுநர்களுக்கு அனுப்பலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அசல் பரிசு அட்டைகள் எங்கள் விற்பனைக் குழு மூலம் கிடைக்கின்றன. கார்டுகளை இங்கே வாங்கவும்.

    வவுச்சர்கள்: Uber கிரெடிட்டை பெறுநர்களுக்கு விநியோகித்து காலாவதியாகும் தேதிகள், இட வரம்புகள் மற்றும்/அல்லது கிரெடிட்டைப் பயன்படுத்தக்கூடிய நாள் மற்றும் நேரம் போன்ற கட்டுப்பாடுகளை அமைக்கவும். பெறுநர்கள் தங்களின் Uber அல்லது Uber Eats ஆப்பில் இருந்து பயணங்கள் அல்லது உணவுகளைக் கோரி அவற்றை வாங்க வவுச்சர்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்.

  • பரிசு அட்டைகள்: பரிசு அட்டையை வாங்கும் போது அதற்கான முழுத் தொகையையும் நீங்கள் செலுத்துவீர்கள்.

    வவுச்சர்கள்: பயனர் வவுச்சரை ரிடீம் செய்யும்போது அல்லது பயணத்துக்கோ உணவுக்கோ பயன்படுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் $100-ஐ வவுச்சராக விநியோகிக்கும் போது அதில் $50 மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் $50 செலுத்துவீர்கள்.

  • பரிசு அட்டைகள்: பரிசு அட்டைகளை நிறுவனங்கள் பயன்படுத்தும் சில வழிகள்: ஆண்டு முடிவின்போது அல்லது விடுமுறைக் காலத்தின்போது பணியாளர்களுக்கு வழங்கும் பரிசுகள், கார்ப்பரேட் பரிசுகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் அல்லது இலவசங்கள்.

    வவுச்சர்கள்: நிறுவனங்கள் வவுச்சர்களைப் பயன்படுத்தும் சில வழிகளில் விர்ச்சுவல் நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு உணவுகளை வாங்குதல், தங்கள் வணிகத்திற்கு அதிகப் பயனர்களை வரவைப்பதற்காக பயணச் செலவுகளை ஈடுசெய்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு வெகுமதியாக மானிய விலையில் உணவை வழங்குவது ஆகியவை அடங்கும்.

பரிசு அட்டைகள் வாங்குவதற்கு எளிதானவை, பயன்படுத்துவதற்கு சுலபமானவை

  • சேவைக் கட்டணம் அல்லது காலாவதித் தேதிகள் இல்லை

    நீங்கள் கூடுதலாக ஒரு செனட்டையும் செலுத்த வேண்டாம் மேலும் பெறுநர்கள் ஒவ்வொரு பென்னியையும் வைத்திருக்கலாம்.

  • டிஜிட்டல் அல்லது அசல் அட்டைகள்

    விர்ச்சுவல் பரிசு அட்டைகளை உரைச்செய்தி, மின்னஞ்சல் மூலமோ பிரிண்ட் செய்தோ அனுப்பலாம் அல்லது அசல் பரிசு அட்டைகளைப் பெற்று நீங்களே விநியோகிக்கலாம்.

  • உணவு மற்றும் பயணங்களுக்கான கிரெடிட்

    ஆயிரக்கணக்கான நகரங்களில் பயணங்களுக்கும் உணவுகளுக்கும் தங்கள் கிரெடிட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பெறுநர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

  • பல நாணயங்களில் கிடைக்கிறது

    உலகளாவிய குழுக்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்ப பரிசு அட்டைகளைப் பல நாணயங்களில் ரிடீம் செய்யலாம்.

  • நெகிழ்வான, மொத்த விநியோகம்

    மொத்தக் கோப்பு மூலம் நீங்களே விநியோகித்துக் கொள்ளலாம் அல்லது எங்கள் பரிசு அட்டை மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தவும்.

1/5

விற்பனைக் குழுவினருடன் பேசுங்கள்

$5,000 மேல் பரிசு அட்டைகளை வாங்க வேண்டுமா? பல நாணய ஆர்டர்களில் உதவி தேவையா அல்லது அசல் கார்டுகளை வாங்க முயற்சி செய்குறீர்களா? உங்கள் ஆர்டரை ஒழுங்கமைத்து வழங்க உதவுவதில் எங்கள் குழு மகிழ்ச்சியடைகிறது.

நிறுவனங்கள் எங்கள் பரிசு அட்டைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன

  • பணியாளர் சலுகைகளும் உத்வேகமும்

    சிறந்த வேலையைச் செய்த பணியாளர்களை அங்கீகரித்து—அவர்களின் உத்வேகத்தையும் செயல்திறனையும் அதிகரிக்கலாம்.

  • வாங்குதல்களுக்கான வாடிக்கையாளர் வெகுமதிகள்

    புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பரிசு அட்டைகளை வழங்குவதன் மூலம் உங்கள் சந்தைப்படுத்தல் விளம்பரங்களில் ஊக்கத்தொகையை சேர்க்கவும்.

  • வாடிக்கையாளர் சேவை பொருட்களை உருவாக்கும்

    தங்களை மதிப்பு மிக்கவர்களாக உணரும் வகையில் சிறப்புப் பரிசுகளை வழங்கி வாடிக்கையாளரின் விசுவாசத்தை அதிகரிக்கலாம்.

  • விர்ச்சுவல் நிகழ்வுகளுக்கான உணவுகள்

    விர்ச்சுவல் கான்ஃப்ரன்ஸ்கள், கூட்டங்கள் அல்லது வெபினார்களின்போது பங்கேற்பாளர்களுக்கு உணவளிக்கலாம்.

  • கணக்கெடுப்பு பதிலளிப்பு ஊக்கத்தொகை

    Uber Cash அல்லது Uber கிரெடிட்டை ஊக்கத்தொகையாக அளிப்பதன் மூலம் பதிலளிப்பு விகிதங்களையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கலாம்.

1/5
1/3

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • ஆம், பரிசு அட்டைகள் ஒரு கணக்கில் பயன்படுத்தப்பட்டதும், அது ஆப்-இன் பணப்பை பிரிவில் Uber Cash அல்லது Uber கிரெடிட்டாக மாற்றப்படும். மேலும் அதை Uber-இல் பயணம் செய்யவோ Uber Eats-இல் உணவு ஆர்டர் செய்யவோ பயன்படுத்தலாம்.

  • ஆம், Uber பரிசு அட்டைகளில் Uber பரிவர்த்தனைக்கான வரி, கட்டணம், வெகுமானங்கள் ஆகியவை உள்ளடக்கப்படும்.

  • பரிசு அட்டைகள் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இந்தியா, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றன. AUD, BRL, CAD, INR, MXN, ZAF, GBP மற்றும் USD ஆகியவை ஆதரிக்கப்படும் நாணயங்களில் அடங்கும்.

  • பரிசு அட்டைகள் இயல்பாக டிஜிட்டல் வடிவில் இருக்கும் (அசல் அட்டை இல்லை). அசல் பரிசு அட்டைகள் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன, அவற்றை எங்கள் விற்பனைக் குழு மூலம் மட்டுமே வாங்க முடியும்.

  • பெறுநர்கள் டிஜிட்டல் அட்டைகளை உரைச்செய்திகளாகவோ மின்னஞ்சலாகவோ அச்சிட்ட வடிவிலோ பெறலாம்—விநியோகிப்பது எப்படி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். பெரும் தொகையை ஏற்று ஒவ்வொரு பரிசுக் குறியீட்டையும் தனிப்பட்ட பெறுநர்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் செய்வோம் அல்லது அவற்றை நீங்களே விநியோகிக்கும் வகையில் அசல் அட்டைகளைப் பெறவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ACH/வயர் பரிமாற்றம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம். வயர் பரிமாற்றக் கட்டணத்தை உங்கள் வங்கி நிறுவனம் விதிக்கலாம், அதனை உள்ளடக்குவது உங்கள் பொறுப்பாகும்.

  • ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சப் பரிசு அட்டைத் தொகைகள் உள்ளன. டிஜிட்டல் பரிசு குறியீடுகளை, கிடைக்கக்கூடிய எந்த நாணயத்திலும் பல முழுத் தொகைகளில் உருவாக்கலாம். எங்கள் விற்பனைக் குழுவுடன் பண மதிப்புத் தேவைகளைப் பற்றி விவாதிக்கவும்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو