சரியானவற்றையே செய்ய வேண்டும். வேறொன்றும் தேவையில்லை.
"நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை விட, எவ்வாறு வெற்றியடையப் போகிறோம் என்பதை நினைவில்கொள்வது அவசியம். மேலும் நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையும் நாம் அடையும் வெற்றிக்கு நிகராக முக்கியத்துவம் பெறுகின ்றன. Uber பணியாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எப்போதும் உயர்ந்த நேர்மைத்தன்மையை வெளிப்படுத்துவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
டோனி வெஸ்ட், தலைமைச் சட்ட அதிகாரி, Uber
நெறிமுறைகள் மற்றும் நேர்மைத்தன்மை
Uber-இன் நெறிமுறைகள் & இணக்கக் குழுவின் நோக்கம் (E&C) Uber-இன் வெற்றியை எளிதாக்குவதும் அனைத்துப் பணியாளர்களின் நட த்தைக்கும் வழிகாட்டும் நம்பகமான வணிகப் பார்ட்னராகப் பணியாற்றுவதுமே ஆகும். இதை நாங்கள் செயல்படுத்த:
- நெறிமுறையுடன் முடிவெடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துச் செயல்படுத்துகிறோம்
- பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கும்படி Uber பணியாளர்களுக்கு வழிகாட்டுகிறோம்
ஸ்காட் ஸ்கூல்ஸ், தலைமை நெறிமுறைகள் & இணக்க அதிகாரி, Uber
Independently verified
Under Scott's leadership, Uber has earned the coveted Compliance Leader Verification.
உயரிய நோக்கத்துடனான திட்டங்கள்
ஏதேனும் சட்டவிரோதமான, நெறிமுறையற்ற அல்லது Uber-இன் கொள்கைகளை மீறும் நடத்தைகளைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், பதிலளிப்பதற்கும் வழிவகை செய் யும் விரிவான திட்டங்களைத் தொடர்ச்சியாக வகுத்துப் பராமரிக்க Uber-இன் சட்ட அமைப்புடன் எங்களின் நெறிமுறைகள்& இணக்கக் குழு ஒன்றிணைந்து செயல்படுகிறது.
ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு
Engage lawfully with third parties and government officials.
நல முரண்பாடுகள்
தொழில்முறைக் கடமைகளில் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தலையிடக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்த்தல்.
Interaction with Public Officials
Comply with rules of engagement while interacting with public officials.
சுகாதார தொடர்பான இணக்கம்
மத்திய மற்றும் மாநிலச் சட்டங்களுக்கும் ஒப்பந்தக் கடமைகளுக்கும் இணங்க உதவுதல்.
விநியோகச் சங்கிலி தொடர்பான இணக்கம்
சப்ளையர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு நேர்மைத்தன்மையைக் கற்பித்து மற்றும் மதிப்பீடு செய்தல்.
போட்டித்தன்மை நுண்ணறிவு
முன்னணிச் சந்தைத் தகவல்களை நெறிமுறையுடன் பெறுங்கள்.
செயல்பாட்டு இணக்கம்
தரநிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்ற உறுதிகொள்கிறோம்.
பணியாளர் ஈடுபாடு
Uber-இன் நெறிமுறைகள் மற்றும் இணக்கத் (E&C) திட்டத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று பணியாளர்கள் அனைவரையும் “தயக்கமின்றி கருத்து தெரிவியுங்கள்” என்று ஊக்குவிப்பதாகும்:
ஒவ்வொருவருக்காகவும், அனைவருக்காகவும். நாம் ஒரே சமூகமாக இருந்துகொண்டு Uber-ஐ வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகச் செயல்படுகிறோம். இந்தச் சமூகத்தின் உறுப்பினர்களாக, நாம் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும், நம்மில் யாருக்கேனும் சிக்கல் என்றால் துணை நிற்க வேண்டும். Uber பணியாளர்கள் சாட்சியாளர்களாக தங்களின் பொறுப்புகளைப் பற்றியும், விசாரணையில் தலையிடுவது, புகாரளிப்பது அல்லது விசாரணையை ஆதரிப்பது ஆகியவற்றுக்கு எதிராகப் பழிவாங்குவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அறிந்திருக்கிறார்கள்.
Uber பணியிடக் குழுக்களுக்காக. எங்கள் பணியாளர் குழுவினர் அனைவரும் தங்களின் சக பணியாளர்களுடன், நெறிமுறைக்கு உட்பட்டு தகவல்தொடர்பு கொள்ள நாங்கள் வழி செய்திருக்கிறோம்.
Integrity உதவி மைய எண். Uber-இன் Integrity உதவி மையம் நாளின் 24 மணிநேரமும், ஆண்டின் 365 நாட்களும் பெரும்பாலான மொழிகளில் சேவையை அளிக்கிறது. தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம், பெயர் குறிப்பிடாமலும் தெரிவிக்கலாம்.
நெறிமுறை அறிவையும் சட்ட அறிவையும் உயர்வாகக் கடைபிடித்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அத்தியாவசிய இணக்கம் தொடர்பான பாடத்திட்டத்தை அவர்கள் முடிக்கும்போது, இந்த ‘நெறிமுறைகள் வெற்றியாளர்களுக்கு’ பேட்ஜ்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்திறன் ஆதரவை வழங்குகிறோம்.
Integrity உதவி மையம்
Uber'-இன் Integrity உதவி மையம் என்பது நிறுவனத்தில் சட்டம் மற்றும் உள்ளகக் கொள்கைகள் மீறப்படும்போது ரகசியமாகப் புகார் தெரிவிக்க உதவும் ஒரு சேவையாகும். Integrity உதவி மையம் ஒரு சார்பற்ற மூன்றாம் தரப்பால் வழங்கப்படுகிறது, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, பொருத்தமான குழுவுக்கு விசாரணைக்கு அனுப்பப்படும். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அளிக்கப்படும் புகார்களுக்கு எதிரான எந்தவிதமான பழிவாங்குதல்களையும் Uber அனுமதிக்காது.
Integrity உதவி மைய எண்ணை எப்போது பயன்படுத்தவேண்டும்?
- ஊழல் அல்லது லஞ்சம்
- போட்டித்தன்மை அல்லது நம்பிக்கைக்கு எதிரான நடைமுறைகள்
- கணக்கியல் அல்லது தணிக்கை முறைகேடுகள்
- செலவு அறிக்கை மோசடி
- பாகுபாடு, மிரட்டல் அல்லது பழி வாங்குதல்
- பணியிடத் துன்புறுத்தல் அல்லது வன்முறை
- திருட்டு அல்லது மோசடி
- பிற நெறிமுறை அல்லது கொள்கை மீறல்கள்
Integrity உதவி மைய எண்ணை எப்போது பயன்படுத்தக்கூடாது?
- வாடிக்கையாளர் உதவி பெறுவதற்கான தொடர்பு முறையாக
- ஓட்டுநர்/டெலிவரி செய்பவர் உதவி பெறுவதற்கான தொடர்பு முறையாக
- ஒரு குறைதீர்ப்பு அதிகாரியாக
- நீங்கள் ஓர் அரசு அதிகாரியாக இருந்து, Uber-இடமிருந்து தரவைக் கோர விரும்பும்பட்சத்தில்
- Uber தளத்தில் உள்ள பாதிப்புகளைப் புகாரளிக்க விரும்பும்பட்சத்தில்
சுகாதார தொடர்பான இணக்கம்
பொருந்தக்கூடிய சுகாதாரம் மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்காமல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் செயல்பாடுகளைத் தடுக்கவும், கண்டறியவும், விசாரிக்கவும், தணிக்கவும், முறையாகப் புகாரளிக்கவும் சுகாதாரம் தொடர்பான நமத ு இணக்க விதிமுறைகள் வழிவகை செய்கின்றன, இவற்றில் மோசடி, கழிவு, துஷ்பிரயோகம் (FWA) ஆகியவையும் அடங்கும். மத்திய மற்றும் மாநிலத்தின் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒப்பந்தக் கடப்பாடுகள் அனைத்திற்கும் இணங்க Uber ஆரோக்கியம் தொடர்பான இணக்கத் திட்டம் ஊக்குவிக்கிறது. இது Uber-இன் சுகாதார நடைமுறைகள் திட்டத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
வர்த்தகம் தொடர்பான இணக்கம்
வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றுமதி, சுங்கம்/இறக்குமதி மற்றும் புறக்கணிப்பு எதிர்ப்பு விதிமுறைகளில் உலகளாவிய வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Uber உறுதிப்பூண்டுள்ளது. எங்கள் அறிவுசார் சொத்து, எல்லை தாண்டிய செயல்பாடுகள், தேசியப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்புத் தரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்கிறோம்.
விநியோகச் சங்கிலி தொடர்பான இணக்கம்
Uber-இன் உடன் வணிகம் செய்வதற்கான நிபந்தனையாகவும், எங்கள் பணியில் பார்ட்னராகவும், சப்ளையர்கள் எங்களின் உறுதிப்பாடான சரியானதைச் செய்ய வேண்டும், வேறொன்றும் தேவையில்லை என்பதில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சரியான சப்ளையர்களை நாங்கள் தேர்வு செய்வதை உறுதிப்படுத்த, எங்களின் பதிவுசெய்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக நாங்கள் ஆபத்து மதிப்பீட்டை செய்கிறோம், மேலும் அவர்களின் இணக்க வரலாற்றை மதிப்பீடு செய்து, சட்டம் மற்றும் நேர்மைத்தன்மைக்கான வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்களா என்று உறுதிப்படுத்துகிறோம்.
அறிமுகம்