Uber Shuttle மூலம் வசதியாக பயணங்களை மேற்கொள்ளுங்கள்
Uber Shuttle என்பது டெல்லியில் பயணிப்பதற்கான ஒரு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவான வழியாகும். நீண்ட காத்திருப்பு நேரங்கள், நெரிசலான பயணங்கள் மற்றும் பீக் ஹவர் டிராஃபிக்கில் எண்ணற்ற மணிநேரங்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும். Uber Shuttle மூலம், உங்கள் இருக்கையை முன்பதிவு செய்து, வசதியாகப் பயணிக்கலாம்.
முன்கூட்டியே முன்பதிவு செய்தல்
உங்கள் இருக்கையை 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யுங்கள்.
மலிவான கட்டணங்கள்
குறைவான கட்டணத்தில் உத்தரவாதமான இருக்கை.
நேரடிக் கண்காணிப்பு
நேரடி கண்காணிப்பு மூலம் உங்கள் Shuttle-ஐக் கண்காணிக்கலாம்.
Shuttle-ஐ முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
கோரிக்கை
உங்கள் சேருமிடத்தை உள்ளிட்டு, 'Shuttle' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து, உங்களுக்கு விருப்பமான வழியையும் & பிக்அப் நேரத்தையும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கோரிக்கை என்பதைத் தட்டவும். உங்கள் பயணத்திற்கு 25 நிமிடங்களுக்கு முன்பு ஓட்டுநர் மற்றும் பேருந்து விவரங்களை உங்களுக்கு அனுப்புவோம்.
பிக்அப்
உங்கள் பிக்அப் நேரத்திற்கு முன் ஆப் மூலம் Shuttle-ஐக் கண்காணிக்கலாம். வரைபடத்தில் நீங்கள் காணும் பிக்அப் இடத்திற்கு நடந்து சென்று, உங்கள் பயணத்திற்கு குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்பு அங்கே சென்று சேர்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பிக்அப் இடத்தில் ஓட்டுநர் அதிகபட்சம் 2 நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பார்
பயணத்தின் போது
பேருந்தில் ஏறி வசதியாகப் பயணியுங்கள்
ட்ராப் ஆஃப்
உங்கள் ஓட்டுநர் உங்களை நியமிக்கப்பட்ட ட்ராப் ஆஃப் இடத்தில் இறக்கிவிடுவார். Uber ஆப்-இல் நீங்கள் இறுதியாகச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு நடந்து செல்வதற்கான வழிகளைக் காணலாம்.
உங்கள் பணியாளர்களுக்கான Corporate Shuttle சேவையைத் தேடுகிறீர்களா?
மேலும் தகவலுக்கு, எங்கள் Corporate Shuttle இணையதளத்தைப் பார்க்கவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- முன்கூட்டியே முன்பதிவு செய்யலாமா?
ஆம், உங்கள் பயணத்தை 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.
- எனது பகுதியில் Uber Shuttle விருப்பத்தை நான் ஏன் பார்க்க முடியவில்லை?
Down Small நீங்கள் கோரிய வழித்தடத்தில் இந்த நேரத்தில் Shuttle சேவை எதுவும் இல்லை.
- எங்கிருந்து வேண்டுமானாலும் Shuttle பயணத்தைக் கோரலாமா?
Down Small இல்லை. நாங்கள் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே சேவையளிக்கிறோம். எனவே உங்கள் பிக்அப் மற்றும் ட்ராப் ஆஃப் இடங்கள் அந்தப் பகுதிகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
- செயல்படும் நேரங்கள்?
Down Small Shuttle காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் இயக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் வழிக்கான சரியான நேரங்களுக்கு எங்கள் ஆப்பைப் பார்க்கவும்.
- நான் ஒரு நண்பருடன் இணைந்து பயணிக்கலாமா?
Down Small ஆம். உங்கள் சொந்தக் கணக்கிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நீங்கள் பயணங்களைக் கோரலாம்.
- Uber Shuttle என்பது வீட்டு வாசலுக்கு வந்து பிக்அப் மற்றும் ட்ராப் ஆஃப் செய்யும் சேவையா?
Down Small இல்லை, நீங்கள் பிக்அப் இடத்திற்கு நடந்து சென்று ஓட்டுநர் வரும் வரை காத்திருக்க வேண்டும். நடந்து செல்வதற்கான வழிகள் Uber ஆப்-இல் கொடுக்கப்பட்டிருக்கும். பயணத்தின் முடிவில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள ஓர் ட்ராப் ஆஃப் இடத்தில் இறக்கிவிடப்படுவீர்கள்.
- எனது வணிகத்திற்கு Corporate Shuttle சேவையை Uber வழங்குமா?
Down Small பணியாளர்களுக்கான தினசரிப் பயணங்கள், பணியிடங்களுக்கு இடையேயான பயணங்கள், பணியிடத்திலிருந்து பொது போக்குவரத்து மையங்களுக்கு இடையேயான பயணங்கள் ஆகியவற்றை வழங்க வணிகங்களுக்கு உதவிடும் வகையில் Corporate Shuttle சேவையை Uber வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் Corporate Shuttles இணையதளத்தைப் பார்க்கவும்.
- வாடிக்கையாளர் சேவை மையத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது?
Down Small படி 1 - உங்கள் ஆப்பின் கீழ் வலதுபுறத்தில் உள்ள "கணக்கு" என்பதைத் தட்டவும்
படி 2 - "செயல்பாடு" என்பதைத் தட்டவும்
படி 3 - நீங்கள் உதவி பெற விரும்பும் பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
படி 4 - கீழே உள்ள "உதவி" பிரிவிற்குச் சென்று, "பயண உதவி பெறுக" என்பதைத் தட்டவும்
படி 5 - மிகவும் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தேவையான தகவலை நிரப்பி "சமர்ப்பி" என்பதைத் தட்டவும்
அறிமுகம்
கண்டறிக
விமான நிலையங்கள்