Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பெருமிதத்துடன் பயணியுங்கள்.

பிரைட் மாதத்தின்போதும் - ஒவ்வொரு மாதமும் - சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் சமூகம் வெளிப்படையான மற்றும் உண்மையான வாழ்க்கையை வாழவும், யாரை எப்படி வேண்டுமானாலும் நேசிக்கவும், அவர்களின் உண்மையைப் பேசுவதற்கான ஆற்றலை உணரவும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.

நாங்கள் தற்போது பணியாற்றி வரும் சில முன்முயற்சிகள் இங்கே:

  • Uber-இன் உதவி மையத்தில் பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் சம்பவங்களைப் புகாரளிக்க பாகுபாடு குறித்த தெறிவிப்பை எளிதாக்கும் விருப்பத்தேர்வு உள்ளது. Uber ஆப் மற்றும் help.uber.com என்ற இணையதளத்தில் அதைக் காணலாம்.
  • எங்கள் சமூக வழிகாட்டல்கள் பாகுபாட்டை வெளிப்படையாகத் தடைசெய்க, மேலும் Uber ஆப்-ஐப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தையும் பாதுகாப்பாகவும், மரியாதையாகவும், நேர்மறையாகவும் உணர உதவுவதில் பங்கு வகிக்கிறார்கள். எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் எங்கள் ஆப்களைப் பயன்படுத்தும்போது எதிர்பார்க்கப்படுவதைப் புரிந்துகொள்வதையும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்.
  • மாற்றுப்பாலின ஓட்டுநர்கள் மற்றும் கூரியர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பதை மையமாகக் கொண்டு, அனைத்து வாடிக்கையாளர் ஆதரவு முகவர்களுக்கும் சார்பு மற்றும் பாகுபாடு குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சாத்தியமான பாகுபாடு சம்பவங்களைக் கையாளுவதற்கான எங்கள் செயல்முறைகளை மேம்படுத்துகிறது.
  • உட்பட உலகளவில் கிட்டத்தட்ட 20 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச பயணங்களையும் உணவையும் வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிமொழிகளைத் தொடர்ந்துள்ளோம். ஆல்பர்ட் கென்னடி அறக்கட்டளை, நியூயார்க் நகர வன்முறை எதிர்ப்புத் திட்டம், மற்றும் சான் பிரான்சிஸ்கோ எய்ட்ஸ் அறக்கட்டளை.
  • எங்கள் தளத்தைப் பயன்படுத்துபவர்களை சிறப்பாக ஆதரிப்பதற்காக நாங்கள் சமூக உறுப்பினர்களிடமிருந்து கேட்டு, கற்றுக்கொள்கிறோம், அவர்களுடன் ஈடுபடுகிறோம்—அதைத் தொடர்ந்து செய்வோம்.

உள்ளடக்கியதாக பேசுங்கள்

அனைவருக்கும் - மேலும் நேர்மறையான தொடர்புகளை மேம்படுத்த உதவும் சில உதவிக்குறிப்புகளை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்.

பிரைடு திருவிழா எல்லா வண்ணங்களுடன் வருகிறது

LGBTQIA+ சமூகம் முழுவதும் சில வண்ணங்களைக் குறிக்கும் வெவ்வேறு சமூகங்கள், கொடிகள், பாலியல் நோக்குநிலைகள் மற்றும் பாலின அடையாளங்கள் ஆகியவற்றில் கவனத்தைச் செலுத்த உதவுவதில் பெருமிதம் கொள்கிறோம். *

  • ஜென்டர்கியூவர்

    புதுமைப் பாலினத்தவர் (ஜென்டர்கியூவர்) பொதுவாக நிலையான பாலின வகைகளின் கருதுகோள்களை நிராகரிக்கின்றனர். மேலும் பாலின அடையாளத்தின் மாறுநிலையை ஏற்று, எப்போதும் இல்லை என்றாலும் பெரும்பாலும் பாலியல் நோக்கு நிலையைத் தழுவுகின்றனர். புதுமைப் பாலினத்தவர் என அடையாளம் காணும் நபர்கள். இவர்கள் தங்களை ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தவராகவும், ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாமல் அல்லது இந்த பாலினத்திற்கும் முற்றாக வெளியிலுள்ள வேறானவராகவோ காணலாம்.

  • நான்பைனரி

    ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ பிரத்தியேகமாக அடையாளம் காணப்படாத ஒரு நபரை விவரிக்கும் பெயரடை. நான்பைனரி என்பவர்கள் ஆண் மற்றும் பெண் இருவராகவும் இருப்பது, இரண்டிற்கும் இடையில் இருப்பது அல்லது இந்த வகைகளை விட்டு முழுதாக வேறுபட்ட வகையில் சேர்வது என அடையாளம் காணப்படலாம். பலர் மாற்றுப்பாலினமாக அடையாளம் காணப்பட்டாலும், நான்பைனரி நபர்கள் அனைவருமே அவ்வாறு அறியப்படுவதில்லை.

  • திருநங்கை

    பிறப்பின்போது ஒதுக்கப்பட்ட பாலினத்தின் அடிப்படையில் உள்ள கலாச்சார எதிர்பார்ப்புகளில் இருந்து மாறுபட்ட பாலின அடையாளம் மற்றும்/அல்லது பாலியல் வெளிப்பாடு உள்ளவர்களைக் குறிப்பதற்கான பரந்துபட்ட ஒரு சொல். திருநங்கைகளாக இருப்பது எந்தவொரு குறிப்பிட்ட பாலியல் நோக்குநிலையையும் குறிக்காது. எனவே, மாற்றுப்பாலினத்தவர் (டிரான்ஸ்ஜென்டர்) எதிர் பாலினத்தவர்மீது ஈர்ப்புள்ளவர், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாலினத்தவர் மீதும் ஈர்ப்புள்ளவர் என்று அடையாளம் காணப்படலாம்.

  • பான்செக்ஸுவல்

    எந்தப் பாலினத்தவர்களிடமும் உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு திறன் கொண்ட ஒருவர். இந்த ஈர்ப்பு ஒரே சமயத்தில், ஒரே வகையில் அல்லது ஒரே அளவிற்கு இருக்கவேண்டிய அவசியமில்லை.

  • கியூவர்

    பெரும்பாலும் மாறும் பாலின அடையாளங்கள் மற்றும் நோக்குநிலைகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் சொல். பெரும்பாலும் "LGBTQ."

    உடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது
  • பலபாலினத்தவர்

    பலபாலின நபர் என்பவர் பாலியல் மற்றும்/அல்லது காதல் ரீதியாகப் பலபாலினங்களுக்கு ஈர்க்கப்படும் ஒருவராவார், ஆனால் எல்லாப் பாலினங்களுக்கும் ஈர்க்கப்படுவதில்லை.

  • ஆண் ஓரினச் சேர்க்கையாளர்

    ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களிடம் உணர்ச்சி ரீதியாகவோ, காதல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ ஈர்க்கப்படும் ஒருவர்.

  • அஜென்டர்

    பொதுவாக ஒரு பாலினம் இல்லாத மற்றும்/அல்லது அவர்கள் நடுநிலை என்று விவரிக்கும் பாலினத்தைக் கொண்ட பல வேறுபட்ட பாலினங்களை உள்ளடக்குகின்ற பரந்துபட்ட ஒரு சொல்.

  • லெஸ்பியன்

    உணர்ச்சி ரீதியாக, காதல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக மற்ற பெண்களை ஈர்க்கும் ஒரு பெண்.

  • பாலினம் அற்றவர்

    எதிர் பாலினத்தவர் மீது பாலியல் ஈர்ப்பு அல்லது விருப்பம் இல்லாதவர்.

  • இருபாலினத்தவர்

    உணர்ச்சி ரீதியாகவோ, காதல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட பால், பாலினம் அல்லது பாலின அடையாளத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்ற நபர். இந்த ஈர்ப்பு ஒரே சமயத்தில், ஒரே வகையில் அல்லது ஒரே அளவிற்கு இருக்கவேண்டிய அவசியமில்லை.

  • இடைப்பாலினம் (இன்டர்செக்ஸ்)

    பரந்த அளவிலான இயற்கையான உடல் மாறுபாடுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பரந்துபட்ட ஒரு சொல். சில சந்தர்ப்பங்களில், இந்தக் குணாதிசயங்கள் பிறக்கும்போதே தெரியும், மற்றவர்களில், பருவமடையும் வரை அவை வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்த வகையின் சில குரோமோசோம் சார்ந்த வேறுபாடுகள் உடல்ரீதியாக வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.

  • பாலின மாறுநிலை

    ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின்படி, இவர் ஒரு நிலையான பாலினத்துடன் அடையாளம் காணப்படாத ஒரு நபர்; மாறுநிலை கொண்ட அல்லது குறிப்பான பாலின அடையாளத்தைக் கொண்ட அல்லது வெளிப்படுத்தும் ஒரு நபர்.

1/13

அனைவருக்கும் கூட்டாளி

ஒவ்வொரு பணியாளருக்கும் நேர்மறையான மற்றும் மிகச்சிறந்த பணியிடத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பானது மரியாதை, நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை அடிப்படையாகக் கொண்டது.

கூட்டாளி என்பவர் சமத்துவத்தை நிலைநாட்டுவதில் பிற குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒருவர்.

வெற்றிகரமான கூட்டாளியாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில உதவிக்குறிப்புகள்:

சிறந்த கோத்திரன் வாய்ந்தவராக இருங்கள்

கருத்துத் தெரிவிக்காமல் மற்றவர்கள் சொல்ல வேண்டியதைக் கேட்பது உடன்பாடான உரையாடலை ஊக்குவிக்க உதவும் ஒரு முக்கியமான பண்பாகும்.

சொற்களை அறிந்துகொள்ளுங்கள்

ஒரு நல்ல கூட்டாளி என்பவர் புரிந்துணர்வை உருவாக்க தங்கள் தனிச்சுதந்திரத்தையும் சார்பையும் ஒப்புக்கொள்வார். முறையாகப் பேசுகிறீர்களா என்பது குறித்து நீங்களே அறிந்து கொள்வதும், தேவைப்படும்போது கேள்விகளைக் கேட்டுக் கொள்வதும் முக்கியம்.

நுட்பங்களை அறிந்துகொள்ளுங்கள்

பாலினம், நோக்குநிலை மற்றும் அடையாளம் குறித்த அனுமானங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள, கேள்விகளைக் கேட்பதும் முக்கியம். ஆதரவற்ற நடத்தையை நீங்கள் பார்த்தால், அதுகுறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும்.

சம வாய்ப்பு

Uber சமூகம் பன்முகத்தன்மையின் சக்தியை மதிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் சமமான சம்பாத்திய வாய்ப்புகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது. சமமான வாய்ப்பு மற்றும் உள்ளடக்கலுக்குப் பணியாற்றுவதற்கான எங்கள் உறுதிப்படானது எங்களின் பணியாளர் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள் முழுவதுடனும் கூட பிணைக்கப்பட்டுள்ளது.

முன்னேற்றம் ஒருபோதும் முடிவடைவதில்லை என்பதை நாங்கள் அறிவோம். கடந்த 6 ஆண்டுகளாக Human Rights Campaign நிறுவனத்திலிருந்து பெருநிறுவனச் சமத்துவ குறியீட்டில் 100 சதவீத மதிப்பீட்டைப் பெற்றதற்குப் பெருமைப்படுகிறோம்.

தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்

வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல்தொடர்பை அதிகரிக்க, உலகளவில் 2019-இல் ஊழியர்களுக்காக பாலினமாற்றம் குறித்த எங்களின் முதல் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மாற்றுப்பாலின பார்ட்னர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம் எங்கள் மாற்றுப்பாலின ஓட்டுநர் - பார்ட்னர்கள், டெலிவரிப் பார்ட்னர்கள் மற்றும் பணியாளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கும் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

*மேலே உள்ள வார்த்தைகளை Human Rights Campaign மற்றும் Trans Student Educational Resources நிறுவனத்தினர் எழுதியுள்ளனர். hrc.org மற்றும் transstudent.org ஆகிய இணையதளங்களுக்குச் செல்வதன் மூலம் மேலும் அறிந்திடுங்கள். இந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியானது Human Rights Campaign அல்லது Trans Student Educational Resources மூலம் Uber-இன் ஒப்புதலாக உத்தேசிக்கப்படவோ கருதப்படவோ கூடாது.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو