Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஓட்டுநர்களுக்கும், விநியோக நபர்களுக்கும் நன்றி.

தொற்றுநோய் காலத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும் விநியோகத்தர்களும் முக்கியமான பணிகளுக்காக தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

சவாரி செய்பவர்களும் உணவு விநியோக வாடிக்கையாளர்களும் உலகெங்கிலும் தங்கள் நன்றிகளை தங்கள் ஓட்டுநர்கள் மற்றும் விநியோக நபர்களுடன் தவறாமல் பகிர்ந்து கொள்கின்றார்கள். உலகெங்கிலும் சில ஓட்டுனர்கள் மற்றும் விநியோக நபர்களுக்கு விளக்க இந்த உரையாடல்களை சுவரோவியங்களுடன் விளக்கினோம்.

கிறிஸ்டின், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா

புளோரிடாவில் விடுமுறைக்கு வந்திருந்த ஆண்ட்ரூ, ஒரு சவாரி செய்பவர், அவரது மனைவி சுசானின் கர்ப்பத்தின் நீர்ப்பை பாதியிலேயே உடைந்த சிறிது நேரத்திலேயே கிறிஸ்டினை சந்தித்தார்.

கிறிஸ்டின் அவரை சில துணிகளைக் துவைப்பதற்காக சலவை இயந்திர நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆண்ட்ரூ அவளிடம் தனது கதையைச் சொன்னார், இது வெறுமனே ஒரு பயணமாக இருப்பதற்குப் பதிலாக, கிறிஸ்டின் மேலேயும் சென்றார். சுசான் மருத்துவமனையில் இருந்தபோது, தம்பதியினரின் ஆதரவு அமைப்பாக அவள் செயல்பட்டாள், வீட்டில் சமைத்த உணவு உற்பட தம்பதியருக்குத் தேவையானவற்றையும் கொடுத்துதவினாள். "10 வாரங்கள் மருத்துவமனையில் தங்குவதற்காக அவர் எங்களை தத்தெடுத்து உதவினாள்," என ஆண்ட்ரூ கூறுகின்றார்.

"கிறிஸ்டின் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் அசாதாரணமான மற்றும் தாராளமான நபர் என நான் நினைக்கிறேன்." ஆண்ட்ரூ, ஒரு சவாரி செய்பவர்

மைக்கேல், மான்செஸ்டர், ஐக்கிய இராச்சியம்

மைக்கேல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கூரியராக பணியாற்றுகின்றார். 5 குழந்தைகளை பராமரிக்கும் ஒரு வளர்ப்பு பெற்றோரும் ஒர தாயுமான அவர், மற்றவர்களைப் பார்க்க வீட்டை விட்டு வெளியேறும் போது, Driver செயலியில்“எனக்கான நேரம்” என்பதைப் பயன்படுத்த விரும்புகின்றார். "பயணக்கட்டுப்பாட்டு காலங்களில், எனக்கு நிறைய வயதான வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்," என அவர் கூறுகின்றார். "நான் அவர்கள் வீட்டு வாசலில் உணவை வைப்பேன், அதை எடுக்கும் வரை நின்று அவர்களுக்காகக் காத்திருக்கிறேன். சிலவேளை அவர்கள் அதுவரை யாரையும் பார்க்காததால், அவர்கள் ஒரு சிறிய அரட்டை அடிக்க விரும்புவார்கள். அதனால் நான் என்ன செய்கிறேன்: நான் நின்று கொண்டு நான் அரட்டை அடிப்பேன். ”

மிச்சேலின் குதூகலமானஆளுமையும் கதைக்கும் சுபாவமும் மான்செஸ்டரில் வாழும் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மிச்சேல், உங்களுக்கு நன்றி.

ஜஸ்விந்தர், சண்டிகர், இந்தியா

ஜஸ்விந்தர் தனது குடும்பப்பண்ணையில் வேலை செய்வதுடன் உபெரும் ஓட்டுகின்றார். அவர் சுமார் 32,000 பயணங்கள் செய்துள்ளார், அவர் ஓட்டிய 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு ஓட்டுநரும் சாதிக்காத அதிகபட்ச எண்ணிக்கை இது. Driver செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் செலவினங்களை அவதானித்து, அவரது குடும்பத்திற்கு மிகவும் வசதியான வாழ்க்கை முறையை அவரால் உருவாக்க முடிந்தது. "Uber இல் வாகனம் ஓட்டுவது எனக்கு ஒரு பெருமையைத் தருகின்றது," என அவர் கூறுகின்றார். "நான் எனது சொந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுகிறேன், மேலும், நான் எனது சொந்த வியாபாரத்தை நடத்துகின்றேன்." ஜஸ்விந்தர் உங்களுக்கு நன்றி.

"Uber இல் ஓட்டுவது எனக்கு ஒரு பெருமையைத் தருகின்றது," என அவர் கூறுகின்றார். "நான் எனது சொந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுகிறேன், மேலும், நான் எனது சொந்த வியாபாரத்தை நடத்துகின்றேன்."

கிறிஸ்டின், மிச்சேல் மற்றும் ஜாஸ்விந்தர் ஆகியோர் உபெருடன் வாகனம் ஓட்டுவதற்கும் விநியோகிப்பதற்கும் ஒரு சில உதாரணங்கள், அவர்கள் அன்றாட தொடர்புகள் ஊடாக மற்றவர்களுடன் நீண்ட மறக்காத நினைவுகளை ஏற்படுத்தியுள்ளனர். கொஞ்சம் பொறுங்கள், நியூயார்க், லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகர்களில் உள்ள கட்டிடங்களின் பக்கங்களை அவர்களின் சுவரோவியங்கள் அலங்கரிக்கின்றன. நீண்ட காலத்திற்கு, உலகம் முழுவதும் தொடர்ந்தும் அவர்களுக்கு நன்றி கூறப்படும்.

நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் ஒரு ஓட்டுநர் அல்லது விநியோகத்தர் இருக்கின்றாரா? தினசரி உங்கள் மாபெரும் நபரை இங்கே பரிந்துரைக்கவும்

நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்

எங்கள் கடமைகள்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

கறுப்பினத்தவர்களின் வணிகங்கள் முக்கியமானவை

உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவரின் வணிகங்களை ஆதரித்தல்.

வேலை செய்வதற்கு மிகச் சிறந்த வழிமுறை

உலகெங்கிலும் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் டெலிவரி நபர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் இலட்சியங்களை அடைய உதவுதல்

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو