எங்கள் கடமைகள்
அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.
பாதுகாப்பான இடங்கள், சிறந்த தேர்வுகள், சுகாதாரக் கவனிப்பு, வேலை வாய்ப்புகள், சம உரிமைகளில் பல நூற்றாண்டுகளாக வேறுபாடு காட்டப்படுவதை நாம் அறிவோம். இன்று இயக்கம் என்பது உரிமையாக அன்றி பாக்கியமாகவே கருதப்படுகிறது.
ஆனால் இது இப்படியே இருக்க வேண்டியதில்லை. செயல்பாடு, சீர்குலைவுக்கு உந்துதலாக இருக்கும் என நம்புகின்றோம். Uber தொடங்கியதிலிருந்து, தொடர்ந்தும் இதனை நாம் நிரூபித்து வந்துள்ளோம். இப்போது, COVID மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படும் மோசமான விளைவுகளால், எங்கள் இலட்சியத்தில் தெளிவாக இருக்க வேண்டிய நேரம் இது: அதாவது செயல்பாட்டை அனைவருக்கும் சமமாக்குவது
இது எங்கள் முக்கியமான பணியினை அது வலியுறுத்துகின்றது: உலகம் செல்லும் சிறப்பானதை நோக்கி எங்கள் தொடர்ச்சியான, இடைவிடாத முயற்சிகள் மூலம் நாம் முன்னே செல்வது. அவ்வாறு செய்யும்போது, இயக்கத்தை நாம் சாத்தியமாக்குகின்றோம். வசதியான வேலையக் கண்டறிய மக்களுக்கு நாம் உதவுகின்றோம். புதிய வாடிக்கையாளர்களை அடைய வணிகங்களுக்கு நாம் வலுவூட்டுகின்றோம். அத்தியாவசிய பொருட்களை நாம் டிரக் லோட் மூலமாக நகர்த்துகின்றோம்.
இதை எப்போதும் நாம் சரியாகச் செய்யமுடிவதில்லை. ஆனால் மக்களும் இந்த பூமியும் சிறந்த திசையில் முன்னேறுவதை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். உலகெங்கிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நாங்கள் எங்கள் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துகின்றோம், எங்கள் உலகளாவிய செல்வாக்குமிக்க வலையமைப்பு மூலமாக சமூகங்களுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புகின்றோம்
எங்கள் மிகப்பெரிய இலட்சியத்தை அடையவும் செயல்பாட்டை அனைவருக்கும் சமமாக்குவதற்கும், நாங்கள் எதிர்நோக்க வேண்டிய தனிப்பட்ட, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த 4 சவால்கள் உள்ளன
பொருளாதார வலுவூட்டல்
எந்த பணியையும் சிறப்பாக செய்ய வேண்டும் என நாம் நம்புகின்றோம். அமெரிக்காவில், தளத்தில் வேலை செய்வதற்கான புதிய அணுகுமுறையில் நாங்கள் வெற்றி பெற்றோம், இதில் ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்களின் பாதுகாப்பினை பலி கொடுத்து அதன் மூலம் தேடும் நெகிழ்வுத்தன்மையை கொண்டுவர அவசியமில்லை. ஐரோப்பாவில் எங்கள்பெட்டர் டீல் உட்பட உலகம் முழுவதும் இது பிரதிபலிக்கின்றது. ஓட்டுனர்கள் மற்றும் விநியோகிப்பவர்கள் அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கு Uber உதவுகின்றது . ஒவ்வொருநாளும் சாதனை வீரர்களாக அவர்களை நாங்கள்மதிக்கின்றோம்
பாதுகாப்பு
COVID-19 தனது வேலையைத் தொடங்கியபோது, நாங்களும் எங்கள் பணியை தொடங்கிவிட்டோம். அத்தியாவசியமானவற்றை மட்டுமே நகர்த்துவதன் மூலம் பாதுகாப்பு விடயத்தில் எங்கள் கவனத்தை நாம் வெளிப்படுத்தினோம். அத்தியாவசிய சேவை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு நாங்கள் வழங்கியவை 10 மில்லியன் இலவச சவாரிகள், உணவு மற்றும் டெலிவரிகள் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைபோன்ற ஆபத்தை எதிர்நோக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட 50,000 இலவச சவாரிகளும் அடங்கும். தடுப்பூசி போட
மேலும் 10 மில்லியன் இலவச அல்லது தள்ளுபடி சவாரிகளை நாங்கள் வழங்கினோம்நிலைக்கும் தன்மை
நாங்கள் செல்லும் பாதையில் உமிழ்வுகள் இல்லை. 2040 ஆகும் போது, உலகளவில் 100%பயணங்கள் உமிழ்வு ஏற்படுத்தாத வாகனங்களில் அல்லது மைக்ரோமொபிலிடி மற்றும் பொது போக்குவரத்து மூலமாக செய்யப்படும் என்பதை இங்கு உறுதிப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். Uber Eats இல் பாத்திரங்களை விருப்பமாக்குவதன் மூலம் ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக்கைக் குறைப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கென்யாவில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் தயாரிப்புகள், பிரான்சில் நிலையான உணவக பிரச்சாரங்கள் மற்றும் டெக்சாஸில் ஒரு காற்றலைப் பண்ணையின் ஊடாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாங்கும் ஒப்பந்தம் ஆகியவற்றுடனும் உடன்படிக்கை செய்ய நாங்கள் தொடங்கியுள்ளோம்.
சமத்துவத்தும்
Uber இனவெறிக்கு எதிரான நிறுவனம். 14 பொறுப்புகளுக்கு நாம் எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம் (இதற்கிடையில் மேலும் பல அவற்றில் உள்ளடங்கும்) அவை இனவெறியை எங்கள் தளத்திலிருந்து அகற்றுவதோடு சமூகத்தில் அனைவருக்கும் சமபங்கினை வழங்குவதற்கும் பாடுபாடும். பிந்தையதின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவருக்குச் சொந்தமான வணிகங்களை ஆதரிக்க $10 மில்லியன் டாலர்களை அர்ப்பணித்துள்ளோம். நாங்கள் ஆசிய சமூகத்துடனும் கைகோர்த்து நிற்கின்றோம், மேலும் இனப்-பாகுபாடுகளுக்கு எதிரான பயிற்சியை வழங்கும் முயற்சிகளையும் உருவாக்கி வருகின்றோம். மேலும் பல
நாங்கள் என்ன செய்கின்றோம், எதைச் சாதித்தோம், எதைச் செய்யவிருக்கின்றோம் போன்றவை பற்றி மேலும் அறியவும் கதைகளை நாங்கள் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்
நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்
10 மில்லியன் இலவச பயணங்கள், உணவுகள் மற்றும் விநியோகங்கள்
தொற்றுநோயின் முதல் அலையில் உலகமே முடங்கியபோது, நாங்கள் 10 மில்லியன் இலவச பயணங்கள், உணவு மற்றும் விநியோகங்களை செய்து காண்பித்தோம்.
பெண்களுக்கான பாதுகாப்பு
பெருந்தொற்றின்போது வன்முறை மற்றும் தாக்குதல் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு 50,000 இலவச பயணங்கள் மற்றும் உணவுகள் வழங்குதல்.