Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

கறுப்பினத்தவர்களின் வணிகங்கள் முக்கியமானவை

உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவரின் வணிகங்களை ஆதரித்தல்.

விருது பெற்ற சமையல்காரர், உணவக உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் உணவு ஆர்வலர் மார்கஸ் சாமுவேல்சனுடன் கறுப்பினரால் நடத்தப்படும் உணவகங்களுக்கு பிளாக் பிசினஸ் மேட்டர் மேட்சிங் ஃபண்ட்மூலம் உதவ Uber உடன் கூட்டு சேர்ந்தது இந்த நிதி, தொற்றுநோய் காலத்தில் அளவுக்கு அதிகமாகவும் வரலாற்று ரீதியாக குறைந்த மூலதனத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள கறுப்பினத்தவருக்குச் சொந்தமான உணவகங்களுக்கு மானியங்களையும் ஆதரவையும் வழங்குகின்றது.

கறுப்பினத்தவரின் உணவின் பின்னால் உள்ள சக்திவாய்ந்த வரலாறு மற்றும் படைப்பாற்றலை புதிய டிஜிட்டல் எபிசோட் தொடர்கள் மூலம் சாமுவேல்சன் மற்றும் 4 மிகத் திறமையான சமையல்காரர்கள் மற்றும் உணவகங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்: நினா கொம்ப்டன், குவாமி ஒன்வாச்சி, ரோட்னி ஸ்காட் மற்றும் லெடிசியா ஸ்கை யங். படம் சிந்தனையைத் தூண்டி உணவை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், கறுப்பின உணவக உரிமையாளர் களிடமிருந்து இதுவரை கேட்காத பல கதைகளைக் கேட்கவும் மக்களை ஊக்குவிக்கின்றது என நம்புகின்றோம்

Uber Eats செயலியில் பிற இடங்களில், அமெரிக்காவில் பிளாக் ரெஸ்டாரன்ட் வீக் போன்ற முயற்சிகள் ஊடாக கறுப்பினருக்கு சொந்தமான வணிகங்கள் Uber Eats உணவூட்டத்தில் உச்சத்தையடைய உதவியது, மேலும் பக்கத்திலுள்ள புதிய உணவகங்களைக் கண்டறியவும் உள்ளூர் மக்களை அது தூண்டியது. இங்கிலாந்தில், இந்த சமூகங்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் ஆதரவளிப்பது என்பதை அடையாளம் காணும் பொருட்டு, கறுப்பினர் மற்றும் சிறுபான்மை உணவக உரிமையாளர்களின் வாழ்க்கை அனுபவத்தை பீ இன்க்ளூசிவ் ஹோஸ்பிடலிடியுடன் சில ஆய்வுகளை நிறைவு செய்துள்ளோம்

கனடாவில், தி பிளாக் பேஜஸைத் தொடங்க கனேடிய பிளாக் சேம்பர் ஆஃப் காமர்ஸுடன் Uber கூட்டுச் சேர்ந்துள்ளது - இது கறுப்பினருக்கு சொந்தமான சிறு வணிகங்களுக்கான முதல் தேசிய டிஜிட்டல் கோப்பகமாகும். தி பிளாக் பேஜஸ் இல் இலவசமாக சேரலாம் மற்றும் பார்வையிடலாம், கறுப்பினருக்கு சொந்தமான புதிய உணவகங்கள், சில்லறைக் கடைகள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை எளிதில் கண்டுபிடித்து ஆதரிக்க கனடியர்களுக்கான ஓரே இணைய தகவல் மூலமாக இது திகழ்வதை உறுதி செய்கின்றது.

இந்த முயற்சிகள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவருக்குச் சொந்தமான உணவகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கான நீண்ட உறுதிப்பாட்டின் ஒரு ஆரம்பமாகும். இந்த வணிகங்களை ஆதரிப்பதற்காக நாங்கள் புதிய நகரங்களுக்குச் செல்வோம், தொற்றுநோய்களின் தாக்கத்திலிருந்து மீள நாம் அவர்களுக்கு உதவுகின்றோம், இன ரீதியான சமத்துவத்தை உருவாக்கவும் பணியாற்றுகிறோம், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க பாடுபடுகின்றோம்

மேலும் கறுப்பினத்தவரின் தொழில் முயற்சிகளை ஆதரிக்கும் எங்கள் பணி பற்றி இங்கே அறியலாம்.

நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்

எங்கள் கடமைகள்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

வாஷிங்டன், டிசி யில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான உணவகங்களைப் புதிய சுற்றுப்புறத்தில் விரிவுபடுத்த உதவுதல்.

ஓட்டுநர்களுக்கும், விநியோக நபர்களுக்கும் நன்றி.

தொற்றுநோய் காலத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும் விநியோகத்தர்களும் முக்கியமான பணிகளுக்காக தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو