Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber உடன் ஓட்டுனர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்?

Uber செயலி மூலம் வாகனம் ஓட்டுவதால் சம்பாதிக்கும் தொகையானது, நீங்கள் எப்போது, எங்கே, எத்தனை பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்களது கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள் மற்றும் ஊக்கத்தொகை குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள், இது உங்கள் சம்பாத்தியத்தை அதிகரிக்க உதவும்.¹

சம்பாத்தியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

Uber உடன் வாகனம் ஓட்டி உங்களால் எவ்வளவு சம்பாதிக்கமுடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒவ்வொரு பயணம் மும் நீங்கள் சம்பாதிக்கிற தொகையைத் தீர்மானிக்க, பின்வரும் காரணிகள் உதவுகின்றன.

வழக்கமான கட்டணம்

பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டணம் ஈட்டுகிறீர்கள்.

சர்ஜ்

பயணத்தின் தேவை எப்போது, எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிய, உங்கள் ஆப்பில் உள்ள ஹீட் மேப்பைச் சரிபார்க்கவும், இதன் மூலம் உங்கள் நிலையான கட்டணத்திற்கு மேல் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம்.

குறைந்தபட்ச பயணச் சம்பாத்தியம்

ஒவ்வொரு நகரத்திலும் எந்தவொரு பயணத்திற்கும் நீங்கள் சம்பாதிக்கும் குறைந்தபட்சத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூரப் பயணங்களை மேற்கொண்டால் கூட உங்களது முயற்சிக்கேற்ற சம்பாத்தியம் வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

சேவைக் கட்டணம்

செயலி மேம்பாட்டிற்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் நிதியளிக்க இந்தக் கட்டணம் உதவும்.

ரத்துசெய்தல்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயணி ஒருவர் கோரிக்கையை ரத்து செய்தால், ரத்துசெய்தல் கட்டணத்தைப் பெறுவீர்கள்.

ஊக்கத்தொகை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது

உங்களது சம்பாத்தியத்தை அதிகரிக்கும் இலக்குகளை அமைப்பதற்கும், முன்னதாகத் திட்டமிடுவதற்கும், உங்களின் பகுதியில் எங்கு அதிகப் பயணக் கோரிக்கைகளை Uber Driver செயலி எதிர்பார்க்கிறதோ அந்த இடத்தின் அடிப்படையில் செயலியில் ஊக்கத்தொகைகள் இருக்கும். எல்லா ஓட்டுநர்களுக்கும் எல்லா ஊக்கத்தொகைகளும் கிடைக்காது. விதிமுறைகளைக் கீழே காண்க.²

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்யுங்கள்

சலுகை கிடைக்கும் வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்து கூடுதல் பணம் சம்பாதியுங்கள்.

பிஸியான நேரங்களில் ஓட்டுங்கள்

பிஸியான நேரங்களில், சில பகுதிகளில் பயணங்களுக்குக் கூடுதல் பணம் பெறுங்கள்.

சம்பாதிப்பதற்கான இன்னும் சில வழிகள்

செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்களின் பெரும்பான்மை நேரத்தைப் பயணத்தில் செலவிட உதவும் சக்திவாய்ந்த அம்சங்கள் செயலியில் உள்ளன. போக்குகளைக் கண்காணிப்பதில் இருந்து அருகிலுள்ள சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவது குறித்து உங்களுக்குத் தெரிவிப்பது வரை, சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான உங்களின் கருவியாக ஆப் இருக்கும்.

உங்கள் சேவைக்காக வெகுமானம் பெறுதல்

ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும், ஆப்பின் மூலம் பயணிகள் எளிதாக வெகுமானத்தை உங்களுக்கு அளிக்க முடியும். உங்களின் வெகுமானத்தை 100% நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது மற்றும் எப்படி நீங்கள் பணம் பெறுகிறீர்கள்

கேஷ் அவுட்டை விரைவில் பெறுங்கள்

பணம் பெறுவது எளிது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே. உங்கள் சம்பாத்தியம் வாரத்திற்கு ஒருமுறை பரிமாற்றப்படும்.

உங்களின் வாடிக்கையாளர்கள் பணமாகக் கொடுத்தால்

பணத்துடன், ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். ஆப் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையைக் காண்பிக்கும் மற்றும் Uber-க்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கிடும்.

ஓட்டுநர் செலவுகளில் சேமிக்கப்படுகிறது

உங்களின் சொந்த வியாபாரத்தை நடத்துவது இணக்கத்தன்மையையும், சில மேற்செலவுகளையும் கொண்டுவரும். எரிபொருள், காப்பீடு மற்றும் வாகன பராமரிப்பு ஆகியவற்றிற்கு வரிப்பிடித்தம் செய்யப்படலாம், மேலும் Uber உங்களை ஆதரிக்க, சலுகையை வழங்க பார்ட்னர்ஷிப்களைக் கொண்டுள்ளது.

ட்ரைவர் ஆப் குறித்து விரைவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுங்கள்

மேலும் அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? Uber உடன் வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, பிற ஓட்டுநர்களின் உதவிக்குறிப்புகள் மற்றும் தகவல்பூர்வமான வீடியோக்கள் அடங்கிய நம்பகமான உதவி வளங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுனர்களின் பிரபலமான கேள்விகள்

  • உங்களின் சம்பாத்திய விவரங்களை ஆப்பினில் காணலாம். வரைபடத்தில் உள்ள கட்டண ஐகானை தட்டவும், பிறகு வலது அல்லது இடது புறம் ஸ்வைப் செய்து உங்களின் சம்பாத்தியத்தைக் காணவும் .

  • ஆம். எப்பொழுது, எப்படி ஓட்ட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். நீங்கள் சம்பாதிக்க ஒரு இணக்கமான வழியைத் தேடுகிறீர்களானால், Uber உடன் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

  • பயணத்தின் போது, சுங்கக் கட்டணம் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு, தானாகவே உங்களின் கட்டணத்தில் சேர்க்கப்படும். உங்களின் சம்பாத்தியப் பிரிவிலோ அல்லது ஆப்பினில் உள்ள பயண விவரங்களிலோ சுங்கக் கட்டணம் திருப்பிச் செலுத்துதலைக் காணலாம்.

¹இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் தகவல்கள் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதே தவிர, அவை சம்பாத்தியத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. சம்பாத்தியக் கட்டமைப்புகள் நகரத்திற்கு ஏற்ப வேறுபடக்கூடும். உங்கள் நகரத்தில் டெலிவரிக் கட்டணங்கள் குறித்த மிகத் துல்லியமான விவரங்களுக்கு, உங்கள் நகரம் சார்ந்த இணையதளத்தைப் பாருங்கள்.

²நீங்கள் இந்த ஊக்கத்தொகைக்குத் தகுதிபெறும் போது Uber உங்களுக்குத் தெரிவிக்கும். ஊக்கத்தொகைகளுக்கான கட்டுப்பாடுகள் பொருந்தும். குறிப்பிட்ட ஊக்கத்தொகை அல்லது கருவி சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் ஏதேனும் இருந்தால் அவை உங்களுடன் பகிரப்படும். அத்தகைய ஊக்கத்தொகையைப் பெறுவதற்குத் தேவையான தகுதிகள் உட்பட, ஆனால் அவை மட்டுமின்றி பிறவும் சேர்த்து எந்தவொரு ஊக்கத்தொகையையும் மாற்றுவதற்கான அல்லது ரத்துசெய்வதற்கான உரிமை Uber நிறுவனத்திற்கு உள்ளது.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو