COVID-19 க்கான எங்கள் அணுகுமுறை
Uber-ஐப் பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே எங்களின் முன்னுரிமையாக உள்ளது. எங்கள் பயனர்களுக்கான புதிய அம்சங்கள், எங்கள் தளத்தில் சம்பாதிப்பவர்களுக்கான ஆதரவு மற்றும் நமது நகரங்களுக்குச் சேவையளிக்கும் நோக்குடன் செய்யப்படும் கூட்டாண்மைகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் COVID-19-ஐத் தடுப்பதற்கான எங்கள் நடவடிக்கையைத் தொடர்ந்து விரிவுபடுத்துகிறோம்.
உதவி செய்வதில் உறுதியாக இருக்கிறார்
முன்னணி சுகாதார ஊழியர்கள், மூத்தவர்கள் மற்றும் உலகெங்கிலும் தேவைப்படும் மக்களுக்கு 10 மில்லியன் இலவச சவாரிகள் மற்றும் உணவு விநியோகங்களை நாங்கள் உறுதியளித்துள்ளோம்.
சுகாதார ஊழியர்களுக்கு துணைபுரிதல்
சில சந்தைகளில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை ஊபர் வழங்குகிறது, நோயாளிகளின் வீடுகளோடு மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது."
முதல் பதிலளிப்பவர்களுக்கு உணவளித்தல்
ஊபர் ஈட்ஸ் கிடைக்கும் சந்தைகளில், உள்ளூர் அரசாங்கத்துடன் இணங்கி, முதல் பதிலளிப்பவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இலவச உணவுகளை வழங்குகிறோம்.
உள்ளூர் உணவகங்களை ஆதரித்தல்
சில பகுதிகளில், ஊபர் ஈட்ஸில் உள்ள தனிப்பட்ட உணவகங்களுக்கான டெலிவரிக் கட்டணத்தை நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம்*
சரக்குப் போக்குவரத்து
Uber Freight செயல்படும் சந்தைகளில், முக்கியமான பொருட்களின் ஏற்றுமதி பூஜ்ஜிய லாப விலையுடன் கொண்டு செல்லப்படும்.
பொது அதிகாரிகளை ஆதரித்தல்
ஊபரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருடைய பாதுகாப்பும் நல்வாழ்வும் எப்போதுமே எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது. COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொது அதிகாரிகளையும் நகரங்களையும் ஆதரிப்பதை நாங்கள் கடமையாகக் கொண்டுள்ளோம்.
ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களுக்கான முக்கியத் தகவல்கள்*
- உங்கள் காருக்கான சுத்தம் செய்யும் உபகரணங்கள்
ஓட்டுநர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும் அவர்களின் கார்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் வகையில் கிருமிநாசினிகளை அணுகுவதற்கான விருப்பத்தை வழங்கப் பணியாற்றி வருகிறோம். பொருட்களின் இருப்பு குறைவாகவே உள்ளது, எனவே நாங்கள் மிக முக்கியமாகத் தேவைப்படும் நகரங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும் பொருட்களை வழங்குவதில் முன்னுரிமையளிக்கிறோம்*.
- “வாசலில் விட்டுச் செல்லவும்” டெலிவரி
Down Small ஊபர் ஈட்ஸை வழங்கும் சந்தைகளில், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள்' எவ்வாறு டெலிவரி செய்யப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளனர். அதில் செக்அவுட்டின்போது "வாசலில் விட்டுச் செல்லவும்" என்பதும் அடங்கும்.
- பொது சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவளித்தல்
Down Small நாங்கள் தொற்றுநோய்க்கு எதிரான பொது சுகாதார அதிகாரிகளின் செயல்பாடுகளில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, 24/7 நேரமும் இருக்கக்கூடிய குழுவைக் கொண்டுள்ளோம். அவர்களுடன் பணியாற்றுவதால், COVID-19 வைரஸ் தொற்றுள்ளவர்களாக அல்லது பாதிப்புக்குள்ளாகி இருக்கக்கூடியவர்களாக உறுதிசெய்யப்பட்ட பயணிகள் அல்லது ஓட்டுநர்களின் அகௌண்ட்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவிடலாம். மருத்துவ ஆலோசனையின்படி, நிறுவனத்தின் நடவடிக்கைகள் உள்ளதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் ஒரு தொற்றுநோயியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறுகிறோம்.
- நீங்கள் பயணத்தில் இல்லாவிட்டாலும் ஆதரவு
Down Small ஓட்டுநர் அல்லது டெலிவரி செய்பவருக்கு* COVID-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அல்லது பொதுச் சுகாதார அதிகாரியால் தனித்து இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவரது அகௌண்ட் இடைநிறுத்தப்பட்டிருக்கும் போது, 14 நாட்கள் வரை நிதி உதவி பெறுவார். சில பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே உதவியுள்ளோம். மேலும் நாங்கள் இதை உலகம் முழுவதும் விரைவாகச் செயல்படுத்துவதற்காகப் பணியாற்றுகிறோம்.
- Uber Pro ஐ வழங்கும் சந்தைகளில், நாங்கள் உங்கள் அந்தஸ்த்து நிலையைப் பாதுகாக்கிறோம்
Down Small நீங்கள் வருந்தக்கூடிய ஒரு கடைசி விஷயம் என்னவென்றால், அது உங்கள் Uber Pro அந்தஸ்த்தை இழப்பது தான். இந்த தகுதிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு இருக்கும் தற்போதைய Uber Pro அந்தஸ்த்தை நாங்கள் அனைத்து ஓட்டுநர்களுக்கும் பாதுகாக்கிறோம்.
- வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டினாலும் ஆதரவு
Down Small நீங்கள்' வாகன வாடகைச் சேவைகளை வழங்கும் சந்தையில் இருக்கிறீர்கள் எனில், COVID-19 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட அல்லது தனிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஓட்டுநரும் எந்தவித அபராதமுமில்லாமல் தங்களுடைய காரைத் திருப்பித் தருவதை உறுதிசெய்வதற்காக, நாங்கள் உலகளாவிய வாடகைப் பார்ட்னர்களுடன் பணியாற்றியுள்ளோம். தங்களது வாடகைக் காரைத் திருப்பித் தர விரும்பும் ஒவ்வொரு ஓட்டுநருக்காகவும் அபராதமின்றித் திருப்பித் தருவதை அனுமதிக்க, வாடகைப் பார்ட்னர்களுடனும் சில பகுதிகளில் பணியாற்றுகிறோம்.
உடல்நலம் மற்றும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறு, நாங்கள் ஊபர் பயன்படுத்தும் அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். நீங்கள் உடல்நலமில்லாமல் இருந்தால், பிறரிடமிருந்து விலகி வீட்டிலேயே இருக்கவும். உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும், உங்கள் இருமல் அல்லது தும்மலைப் பொத்திக்கொள்ளவும். கூடுதல் தகவலுக்கு, உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்கள்*
மிகவும் முக்கியமாக, உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் வாகனம் ஓட்டுவதையோ உணவு* டெலிவரி செய்வதையோ தவிர்த்து விடுங்கள்
நீங்கள் இப்போது செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், முடிந்தவரை வீட்டிலேயே இருப்பதுதான்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் இதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். வைரஸ் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த இது உதவும். ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருக்க உதவிசெய்து, அவசியமாகத் தேவைப்படுபவர்களுக்குப் பயணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்.
வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால்:
- உங்கள் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள். தும்மினாலோ இருமினாலோ, உங்கள் கை மூட்டினால் அல்லது ஒரு டிஷ்யு காகிதத்தால் மறைத்துக்கொண்டு செய்யவும்.
- இடைவெளி விட்டுத் தள்ளி இருக்கும்படி பயணிகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகமான இடவசதி அளித்து பின்னால் அமரும்படி பயணிகளைக் கேட்டுக்கொள்வதில் தவறில்லை.
- ஜன்னல்களைத் திறந்து வைத்திருங்கள். முடிந்தால், காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னல்களைக் கீழே இறக்கிவிடுங்கள்.
டெலிவரி செய்கிறீர்கள் என்றால்*
வாசலில் விட்டுச்செல்லுங்கள். ஈட்ஸ் வாடிக்கையாளர் அவ்வாறு கோரினால், தொடர்பைக் குறைக்கும் பொருட்டு டெலிவரிகளை வாசலில் விட்டுச்செல்லுங்கள். உங்கள் கைகளைக் கழுவுங்கள் தயவுசெய்து உங்கள் கைகளை கழுவவும் அல்லது கை சுத்திகரிப்பாளரை உங்களால் முடிந்தவரை பயன்படுத்தவும்.
உபெர் வாடிக்கையாளர்கள்
முடிந்தால் வீட்டிலேயே இருங்கள்
நீங்கள் இப்போது செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், முடிந்தவரை வீட்டிலேயே இருப்பதுதான்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் இதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். வைரஸ் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த இது உதவும். ஓட்டுநர்கள் பாதுகாப்பாக இருக்க உதவிசெய்து, அவசியமாகத் தேவைப்படுபவர்களுக்குப் பயணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்.
பயணங்கள் மேற்கொள்ளும்போது:
உங்கள் கைகளைக் கழுவுங்கள் உங்கள் பயணத்திற்கு முன்பும் பிறகும் தும்மினாலோ இருமினாலோ தும்மினாலோ இருமினாலோ, உங்கள் கை மூட்டினால் அல்லது ஒரு டிஷ்யு காகிதத்தால் மறைத்துக்கொண்டு செய்யவும். உங்கள் ஓட்டுநருக்கு இடமளிக்க, உங்கள் ஓட்டுநருக்கு போதுமான இடமளிக்க, பின் இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள். ஜன்னலைத் திறந்து வைத்திருங்கள். முடிந்தால், காற்றோட்டத்தை அதிகப்படுத்த ஜன்னலைக் கீழே இறக்கிவிடுங்கள்.ஊபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்யும்போது*
- வாசலில் கைவிடுமாறு கோருங்கள். ஆப்-ல், “வாசலில் விட்டுச்செல்லவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் விருப்பங்களைப் பகிர டெலிவரிக் குறிப்புகளைப் பயன்படுத்தவும். 30 நிமிடங்களுக்குள் நீங்கள் கிடைப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகளைக் கழுவுங்கள் குறிப்பாக, உங்கள் உணவு ஆர்டரைப் பெற்றுக்கொண்ட பிறகும் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பும்.
உங்கள் ஓட்டுநருக்கும் டெலிவரி செய்பவருக்கும் வெகுமானம் வழங்குங்கள்*
தற்போது உங்கள் சமூகத்துக்கு உதவும்பொருட்டு ஓட்டுநர்களும் டெலிவரி செய்பவர்களும் மிகவும் கடினமாக உழைககின்றனர். வெகுமானம் அளித்து அவர்களை ஊக்குவியுங்கள் - சிறிதளவு அன்பு அவர்களை மேலும் அதிகமாக உழைக்கச் செய்யும்.
கடந்த 30 நாட்களில் செய்த எந்த ஊபர் பயணத்துக்கும் அல்லது ஊபர் ஈட்ஸ் டெலிவரிக்கும் ஒரு வெகுமானத்தை நீங்கள் சேர்க்கலாம். உங்கள் ஆப்-ல் கணக்கு வரலாற்றுக்குச் சென்று எந்தெந்தப் பயணங்களுக்கும் டெலிவரிகளுக்கும் வெகுமானம் வழங்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முக்கியத் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க.
நாங்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள்
பொது சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவளித்தல்
நாங்கள் தொற்றுநோய்க்கு எதிரான பொது சுகாதார அதிகாரிகளின் செயல்பாடுகளில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, 24/7 நேரமும் இருக்கக்கூடிய குழுவைக் கொண்டுள்ளோம். அவர்களுடன் பணியாற்றுவதால், COVID-19 வைரஸ் தொற்றுள்ளவர்களாக அல்லது பாதிப்புக்குள்ளாகி இருக்கக்கூடியவர்களாக உறுதிசெய்யப்பட்ட பயணிகள் அல்லது ஓட்டுநர்களின் அகௌண்ட்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவிடலாம். மருத்துவ ஆலோசனையின்படி, நிறுவனத்தின் நடவடிக்கைகள் உள்ளதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் ஒரு தொற்றுநோயியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறுகிறோம்.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு உதவுதல்
ஓட்டுநருக்கு COVID-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அல்லது பொது சுகாதார அதிகாரியால் தனித்து இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவரது அகௌண்ட் இடைநிறுத்தப்பட்டிருக்கும் போது, 14 நாட்கள் வரை நிதி உதவி பெறுவார். சில பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே உதவியுள்ளோம். மேலும் நாங்கள் இதை உலகம் முழுவதும் விரைவாகச் செயல்படுத்துவதற்காகப் பணியாற்றுகிறோம்.
கார்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவுதல்
ஓட்டுநர்களுக்கு அவர்களின் கார்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவும் வகையில் கிருமிநாசினிகளை வழங்கப் பணியாற்றி வருகிறோம். உபகரணங்கள் குறைந்த அளவே உள்ளன, ஆனால் நாங்கள் உற்பத்தியாளர்களுடனும் விநியோகஸ்தர்களுடனும் பார்ட்னராக இணைந்து, முடிந்தவரை அதிகமாக வழங்க முயற்சி செய்கிறோம். நாங்கள் மிக முக்கியமாகத் தேவைப்படும் நகரங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமையளிப்போம்.
எங்கள் சமூக வழிகாட்டுதல்களை நிலைநிறுத்துதல்
தற்போதைய சூழ்நிலையுடன் தொடர்புப்படுத்தி, பாரபட்சம் பார்ப்பதாகப் புகார்கள் வருகின்றன. இதை ஒருபோதும் ஏற்கமுடியாது-ஒவ்வொரு பயணியும் ஓட்டுநரும் ஊபர் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது, இது பாகுபாட்டைத் தெளிவாகத் தடை செய்கிறது.
ஓட்டுநர்களுக்கான முக்கியத் தகவல்
உங்கள் காருக்கான சுத்தம் செய்யும் உபகரணங்கள்
உங்கள் காரைச் சுத்தமாக வைத்திருக்க உதவுவதற்காக, ஓட்டுநர்களுக்குக் கிருமிநாசினிகளை வழங்குவதற்காகப் பணியாற்றுகிறோம். உபகரணங்கள் குறைந்த அளவே உள்ளன, ஆனால் நாங்கள் உற்பத்தியாளர்களுடனும் விநியோகஸ்தர்களுடனும் பார்ட்னராக இணைந்து, முடிந்தவரை அதிகமாக வழங்க முயற்சி செய்கிறோம். நாங்கள் மிக முக்கியமாகத் தேவைப்படும் நகரங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமையளிப்போம்.
பொது சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவளித்தல்
நாங்கள் தொற்றுநோய்க்கு எதிரான பொது சுகாதார அதிகாரிகளின் செயல்பாடுகளில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, 24/7 நேரமும் இருக்கக்கூடிய குழுவைக் கொண்டுள்ளோம். அவர்களுடன் பணியாற்றுவதால், COVID-19 வைரஸ் தொற்றுள்ளவர்களாக அல்லது பாதிப்புக்குள்ளாகி இருக்கக்கூடியவர்களாக உறுதிசெய்யப்பட்ட பயணிகள் அல்லது ஓட்டுநர்களின் அகௌண்ட்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவிடலாம். மருத்துவ ஆலோசனையின்படி, நிறுவனத்தின் நடவடிக்கைகள் உள்ளதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் ஒரு தொற்றுநோயியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறுகிறோம்.
நீங்கள் பயணத்தில் இல்லாவிட்டாலும் ஆதரவு
ஓட்டுநருக்கு COVID-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அல்லது பொது சுகாதார அதிகாரியால் தனித்து இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவரது அகௌண்ட் இடைநிறுத்தப்பட்டிருக்கும் போது, 14 நாட்கள் வரை நிதி உதவி பெறுவார். சில பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே உதவியுள்ளோம். மேலும் நாங்கள் இதை உலகம் முழுவதும் விரைவாகச் செயல்படுத்துவதற்காகப் பணியாற்றுகிறோம்.
உங்கள் Uber Pro நிலையைப் பராமரித்தல்
நீங்கள் வருந்தக்கூடிய ஒரு கடைசி விஷயம் என்னவென்றால், அது உங்கள் Uber Pro அந்தஸ்த்தை இழப்பது தான். நாங்கள் இந்த தகுதிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு இருக்கும் தற்போதைய Uber Pro அந்தஸ்த்தை அனைத்து ஓட்டுநர்களுக்கும் பாதுகாக்கிறோம்.
நிறுவனம்