Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber இன் 2022 ESG அறிக்கை, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) சிக்கல்கள் பற்றிய எங்கள் எண்ணங்களை எடுத்துக்காட்டுகிறது, இது முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் நகரங்கள், வேலை, உணவு, பொருட்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கான தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், கூரியர்கள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் உட்பட எங்கள் வணிகத்திற்கும் பங்குதாரர்களுக்கும் மிகவும் முக்கியமானது. இந்த நீடித்த உறவுகள் - ஒருமைப்பாடு, பொறுப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் - உலகம் சிறப்பாக நகரும் வழியை மறுபரிசீலனை செய்ய எங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால், தரவு டிசம்பர் 31, 2020 நிலவரப்படி இவ்வாறு இருக்கும். அறிக்கையில் உள்ள விவரங்கள் ஜூலை 2022 வரையிலான சிக்கல்களை உள்ளடக்கியிருக்கலாம்.

ESG இன் சிறப்பம்சங்கள்

  • சுற்றுச்சூழல்

    • பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்கள், மைக்ரோமொபிலிட்டி அல்லது பொதுப் போக்குவரத்தில் 2040 ஆம் ஆண்டிற்குள் 100% பயணங்களை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்
    • Q2, 2022 நிலவரப்படி, கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் Uber இயங்குதளம் முழுவதும் 26,000 மாதாந்திர செயலில் உள்ள சராசரி பூஜ்ஜிய-உமிழ்வு ஓட்டுநர்கள் 13.3 மில்லியன் பயணங்களை வழங்குகியுள்ளனர்.
    • முதல் முறையாக, உலகளாவிய Scope 1, 2 மற்றும் 3 உமிழ்வுகளை அறிக்கை அளித்துள்ளோம்
    • நிலைத்தன்மை கணக்கியல் தரநிலைகள் வாரியம் (SASB) மற்றும் காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளுக்கான பணிக்குழு (TCFD) ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது
    • நாங்கள் இப்போது எங்களின் அமெரிக்க பணியிடங்களில் பயன்படுத்தப்படும் 100% ஆற்றலை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் பொருந்தும்படி செய்கிறோம்
  • சமூகம்

    • ஓட்டுநர் மற்றும் கூரியர் நல்வாழ்வு: உலகளவில் பல்வேறு அமர்வுகள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் கூரியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, பணியாளர்கள் (நிர்வாகிகள் உட்பட) சிறந்த அனுபவத்தை வழங்குவதைப் புரிந்துகொண்டு வாகனம் ஓட்ட மற்றும் டெலிவரி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர் மற்றும் சுதந்திரமாக செய்யும் வேலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஒரு சில நாடுகளில் வெளிப்படையான ஆவணங்களும் வெளியிடப்பட்டது
    • மக்கள் மற்றும் கலாச்சாரம்: எங்களின் மனித மூலதன மேலாண்மை, DEI சிக்கல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய5வது அறிக்கை வெளியிடப்பட்டது
    • உள்ளூர் தாக்கம்: டஜன் கணக்கில் இடுகைகள், ஆவணங்கள், முக்கிய ESG மற்றும் பங்குதாரர் சிக்கல்கள் மீதான தாக்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது
    • நகர்ப்புற பயன்பாடு: நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து மற்றும் பயணப் பகிர்வு ஆகியவற்றின் போக்குகள் குறித்து உலகெங்கிலும் உள்ள 8 நகரங்களில் ஆய்வு செய்து பகுப்பாய்வைவெளியிட்டுள்ளோம்
  • ஆளுகை

    • தரவு பாதுகாப்பு: முக்கிய வணிக பிரிவுகளுக்கான முக்கியமான சான்றிதழ்கள் மற்றும் அறிக்கைகள் பெறப்பட்டது (ISO 27001, SOC 2, SOC 2 வகை 2)
    • அரசியல் செயல்பாடுகள்: 2022 இல், நாங்கள் Uber இன் அமெரிக்க அரசியல் ஈடுபாடு அறிக்கையை வெளியிட்டோம் , இதில் எங்களின் அமெரிக்க பெருநிறுவன அரசியல் செயல்பாட்டுக் கொள்கையின் சுருக்கம், குழு-நிலை மேற்பார்வை மற்றும் நேரடி பரப்புரை நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
1/3

தாக்கம்

உலகம் முழுவதும், புதிய இயல்புநிலைக்கு மத்தியில் மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் Uber ஒரு பகுதியாக உள்ளது. நாங்கள் நகரங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்காகவும், நகரங்களுக்கிடையே பயணிப்பதற்காகவும் பல்வேறு புதிய தயாரிப்புகள் மற்றும் சலுகைகள் மூலம் Uber க்கு புதிய பயனர்களை அறிமுகப்படுத்துகிறோம். இந்த சவாலான, வேகமாக மாறிவரும் காலங்களில் நகரங்களில் நாங்கள் செயல்படுவது, நாங்கள் எப்போதும் சரியானதைச் செய்ய முயற்சிப்பதைக் காட்டுகிறது. காலம்.

Uber 2010 இல் தொடங்கியதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் எப்போது, எங்கே, எப்படி விரும்புகிறார்களோ அப்படியே சம்பாதிக்க எங்கள் தொழில்நுட்பம் அனுமதித்துள்ளது. இன்று, Uber, 72 நாடுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி தளங்களில் ஒன்றாக உள்ளது. 2016 மற்றும் 2021 க்கு இடையில், 31 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சம்பாதிப்பதற்காக Uber இன் தளத்தைப் பயன்படுத்தினர். மொத்தத்தில், அவர்கள் வெகுமானங்களைத் தவிர்த்து US$150 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளனர்.

Uber ஐப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் கூரியர்கள் அவர்கள் சேவை செய்யும் நகரங்கள் மற்றும் நாடுகளைப் போலவே பல வகைப்பட்டிருக்கிரார்கள். அவர்களில் தொழில்முறை ஓட்டுநர்கள், படைவீரர்கள், மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், முதன்மை வருமானத்தைப் பெறுபவர்கள் மற்றும் இடையில் உள்ள அனைவரும் அடங்குவார்கள்.

மக்கள் மற்றும் கலாச்சாரம்

எங்கள் பணியால் ஊக்கமடைந்து உற்சாகம் பெற்ற பலதரப்பட்ட மக்களை ஈர்ப்பதும் அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்றாகும். உலகெங்கிலும் எங்கள் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வழிகளைச் செயல்படுத்தும் செயல்வீரர்கள் எங்களுக்குத் தேவை. அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும், அதனால் நாங்கள் யார் என்பதையும், Uber இல் பணிபுரிவது எப்படி இருக்கும் என்பதையும் தெளிவாகக் காட்ட உறுதிபூண்டுள்ளோம்.

பணியாளர்களுக்கு எது மிகவும் முக்கியமானது மற்றும் அவர்கள் இங்கே ஒரு தொழிலை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக பணியாளர்களிடம் இருந்து தரவைச் சேகரித்து வருகிறோம். எங்கள் முன்னுரிமைகள் மற்றும் அணுகுமுறையை தெளிவுபடுத்த இந்தப் புள்ளி விவரங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம், இதன் விளைவாக 6 வேறுபட்ட பணியாளர் தேவைகளில் கவனம் செலுத்துகிறோம், அவை: மதிப்பு, உரிமை மற்றும் சமவாய்ப்பு, வளர்ச்சி, இழப்பீடு, நல்வாழ்வு மற்றும் நம்பிக்கை. இந்த மனித மூலதன உத்திகள், நாங்கள் பலதரப்பட்ட பணியாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்வதையும் இந்த முக்கியமான பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபாட்டையும், சமத்துவத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய அனுபவத்தை உருவாக்குவதையும் உறுதி செய்கிறது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம்

பூமியில் உள்ள மிகவும் சுத்தமான தளம். அதுதான் எங்களின் இலக்கு. ஏனென்றால், இதுதான் செய்யச் சரியான செயலாக இருக்கும்—எங்கள் வணிகத்திற்கும் எங்கள் தளத்தை நம்பியிருக்கும் அனைவருக்கும். அந்த இலக்கை நோக்கி முன்னேறுவது எங்கள் முதலீட்டாளர்கள், எங்கள் பணியாளர்கள், எங்கள் பயனர்கள், நாங்கள் சேவை செய்யும் நகரங்கள் மற்றும் இந்த முழு கிரகத்திற்குமே பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பயணத்தை 2020 இல் சில முக்கிய கடமைகளுடன் தொடங்கினோம். 2040 ஆம் ஆண்டுக்குள் அனைத்து Scope 1, 2 மற்றும் 3 உமிழ்வுகளிலும் நிகர மதிப்பு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளோம். அந்த இலக்கை அடைவதன் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலும், மேலும் 2040 ஆம் ஆண்டிற்குள் நாங்கள் உலகளவில் செயல்படும் ஒவ்வொரு சந்தையிலும் 100% பயணங்களை எங்கள் பயணிகள் இயங்கு தளத்தில் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்கள் (ZEVs), மைக்ரோமொபிலிட்டி அல்லது பொதுப் போக்குவரத்தில் நிறைவு செய்ய ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

வெளிப்படைத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், காலநிலை-உமிழ்வு கணக்கியல், திட்டமிடல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்தை அடைவதற்கான எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாகவும், காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகள் (TCFD) குறித்த பணிக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஒரு பகுப்பாய்வை நடத்தினோம். இந்தப் பகுப்பாய்வின் முழு விளக்கத்தை இந்தப் பிரிவில் பின்னர் காணலாம், மேலும் இது தொடர்பான குறிப்புகள் பிரிவு முழுவதும் காணப்படும். கூடுதலாக, நாங்கள் அறிவியல் அடிப்படையில் இலக்குகளை அடைவதற்கான முன்முயற்சி மற்றும் காலநிலை உறுதிமொழி, 2040 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை உறுதிசெய்வதில் இணைந்துள்ளோம். 2021 இல், நாங்கள் ஒரு சுற்றுச்சூழல் கொள்கையை வெளியிட்டோம்.

ஆளுகை

எங்கள் இயக்குநர்கள் குழு தரமான பெருநிறுவன நிர்வாகத்திற்கு பொறுப்பேற்று உள்ளது, மேலும் நமது கலாச்சாரம், நிர்வாகம் மற்றும் பெருநிறுவனப் பொறுப்பு ஆகியவற்றில் நமது பங்குதாரர்களிடம் வெளிப்படையாகவும், பொறுப்புணர்வுடனும் இருபோம் என்று உறுதியாக நம்புகிறது. உலகத்தரம் வாய்ந்த பொது நிறுவன நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்தில், பலதரப்பட்ட பின்னணிகள், திறன்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட இயக்குநர்கள் குழுவை பலப்படுத்தி, உருவாக்கியுள்ளோம்.

எங்கள் பொருளியல் மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்ட ESG சிக்கல்கள் எங்கள் வணிகத்திற்கும் எங்கள் வணிக உத்திக்கும் முக்கியம். எனவே, அதற்கு உகந்தவாறு, அவை Uber இன் இயக்குநர்கள் குழு மற்றும் குழுவின் சுயாதீன தணிக்கை, இழப்பீடு மற்றும் நியமித்தல் மற்றும் ஆளுகைக் செயற்குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த அறிக்கையில் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை உள்ளடக்கிய எங்களின் எதிர்கால வணிக எதிர்பார்ப்புகள் தொடர்பான முன்னோக்கு அறிக்கைகள் இருக்கலாம். கணிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து உண்மையான முடிவுகள் வேறுபட்டிருக்கலாம், மேலும் அறிக்கையிடப்பட்ட முடிவுகள் எதிர்கால செயல்திறனுக்கான அறிகுறியாகக் கருதப்படக்கூடாது. மேலும் தகவலுக்கு எங்கள் 2022 ESG அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த அறிக்கையில் உள்ள பசுமை இல்ல வாயு வெளியேற்ற தரவு, லாயிட்ஸ் பதிவுத் தர உத்தரவாதத்தால் சரிபார்க்கப்பட்டது. LRQA இன் சரிபார்ப்பு அறிக்கையை இங்கேகாணலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو