Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஊழியர்களை நியமியுங்கள், அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுங்கள், வெகுமதிகளை வழங்குங்கள்

இணக்கமான பலன்கள் அல்லது மேலதிகச் சலுகைகள் மூலம் ஊழியர்களின் அனுபவத்தை மேம்படுத்துங்கள். அது உற்பத்தித்திறன், தக்கவைத்தல், இலக்குகளை அடைதல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைந்திட உதவும்.

Uber for Business உடன் இணைந்து சிறந்த திறமையாளர்களை உற்சாகப்படுத்துங்கள்

எங்களின் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தளத்தின் மூலம் ஏற்கெனவே உங்களிடம் பணியாற்றும் குழு உறுப்பினர்களை அவர்கள் எங்கிருந்தாலும் வேலையில் மகிழ்ச்சியாகவும், ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் வைத்திருக்கும் அதே வேளையில், உலக அளவில் புதிய ஊழியர்களையும் நீங்கள் ஈர்க்கலாம்.

ஆட்சேர்ப்பு

வேலைக்காக நேர்காணலுக்குச் செல்லும் நபர்களுக்கு பயண வவுச்சர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் மதிப்புக்குரியவர்கள் என்பதை உணரச் செய்யுங்கள் மேலும் அவர்களது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் மேம்படுத்துங்கள்.

Shopify சிறந்த திறமையாளர்களை ஈர்க்க Uber for Business ஐ எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

தக்கவைத்துக்கொள்ளுதல்

உங்கள் ஊழியர்கள் எங்கிருந்து வேலை செய்தாலும், நீங்கள் அவர்கள் மேல் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை Uber Eats வழியாக உணவை வழங்குவதன் மூலம் தெரிவிக்கலாம். அல்லது அலுவலகத்திற்குச் சென்று வருவதற்கான பயணங்கள், பணி நிகழ்வுகள் மற்றும் பலவற்றிற்கான பயணங்களை வழங்கலாம்.

Terminus Uber Eats இல் பயன்படுத்த $100 ஐ மாதாந்திர உதவித்தொகையாக வழங்கியதன் மூலம் அதன் ஊழியர்களுக்கு COVID-19 இன் போது எவ்வாறு ஆதரவளித்தது என்பதை இங்கே பாருங்கள்.

வெகுமதி

ஒரு சிறிய வெகுமதி மேலும் ஊக்கத்தைத் தரும். வேலை சிறப்பாக முடிந்ததற்காக உணவு வவுச்சர்களை வழங்குவதன் மூலம் பணியிடச் சூழலை உற்சாகமாக்கலாம். அல்லது ஊழியர் அடைந்த மைல்கற்களை பரிசு அட்டைகள் வழங்கி கொண்டாடலாம். உணவு மற்றும் சிற்றூண்டிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையையும் நீங்கள் வழங்கலாம்.

Riskalyze வாடிக்கையாளர்களையும் பணியாளர்களையும் கையாள வவுச்சர்கள் மற்றும் பரிசு அட்டைகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இங்கே பாருங்கள்.

பணிக்குத் திரும்புத்தல்

முழு நேரம் அல்லது ஹைப்ரிட் அட்டவணை இரண்டில் எதைப் பின்பற்றி அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களாக இருந்தாலும், Uber இல் பயணிப்பதற்கான வவுச்சர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் போக்குவரத்தை (மற்றும் கம்யூட்டை) எளிதாக்குங்கள்.

தொற்றுநோய்க்கு மத்தியில் வேலைக்குச் செல்லும் ஊழியர்களை பாதுகாப்பாக உணர வைக்க Uber for Business ஐEataly எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இங்கே பாருங்கள்.

இது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்

அனைத்துச் செயல்பாடுகளையும் டேஷ்போர்டிலேயே செய்யலாம். பயணம், உணவு மற்றும் பலவற்றுக்கானத் திட்டங்களை அணுகுவதற்கும் பிரத்தியேகமாக்குவதற்குமான மையமாக இது இருக்கும். நிகழ்நேர அறிவிப்புகள் மற்றும் பயன்பாட்டு புதுப்பிப்புகளையும் நீங்கள் பெறலாம்.

உங்கள் வரம்புகளை அமையுங்கள்

நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பயணம் மற்றும் உணவுக்கான வரம்புகளை அமைக்கலாம். உங்கள் குழுவினரை நீங்கள் நிறுவனத்தின் ஒரே கணக்கின் மூலமோ அல்லது கார்ப்பரேட் கார்டுகள் மூலமோ கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கலாம்.

தகுதிபெறும் பணியாளர்களை அழையுங்கள்

நிறுவனக் கணக்கில் சேர அழைப்பதன் மூலம் உங்கள் குழுவினரை இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் தனிப்பட்ட Uber சுயவிவரம் மற்றும் Uber for Business சுயவிவரத்தை மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தி மூலம் இணைக்க முடியும்.

பயணங்களை வழங்கிக் கொண்டே இருங்கள்

டேஷ்போர்டில் இருந்து பயன்பாடு மற்றும் செலவு போன்ற விவரங்களை நீங்கள் கண்காணிக்கும் அதேவேளையில், ஊழியர்கள் தங்கள் வணிகச் சுயவிவரத்தை துரிதமாக மாற்றுவதன் மூலம் பயணங்களையும் உணவையும் பெற முடியும்.

செலவுகளைக் கண்காணியுங்கள்

ரசீதுகளைச் சேமிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பயணம் மற்றும் உணவு ஆர்டருக்கான கட்டணத்தைத் தானாகவே செலவின அமைப்புகளில் சேர்க்கலாம். அவற்றை வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் மதிப்பாய்வு செய்து பட்ஜெட்டை எளிதாகக் கண்காணிக்கலாம்.

“நாங்கள் கடுமையாக முயற்சித்து மக்களை எங்கள் இடத்தில் எங்களுடன் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள சில புதிய யோசனைகள் மற்றும் ஆக்கப் பூர்வமான வழிகளுடன் வந்துள்ளோம். தொலைதூரத்தில் இருந்து வேலை செய்யும் எங்களது சில அலுவலக பணியாளர்களும் அலுவலக நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு UberEats சேவைகளை வழங்கியிருக்கிறேன். ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள மற்றும் நம்முடையவர்கள் என்ற உணர்வை அவர்களுக்குத் தர இது உதவியாக இருக்கிறது."

மிரியம் லூயிஸ், மனிதவள மேலாளர் (HR), ZaneRay குழுமம்

உங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறன், போக்குவரத்து மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துங்கள்

கூடுதல் ஆதார வளங்களை ஆராயுங்கள்

உங்கள் ஊழியர்கள் எங்கிருந்து பணி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்

இந்த 5 புதுமையான பரிசளிக்கும் யோசனைகள் மூலம் அலுவலகத்திலும் வெளியேயும் உங்கள் குழுக்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

உங்கள் ஊழியர்கள் எவ்வாறு அன்றாடம் பயணிக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்

சுற்றுச் சூழல், பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பங்களுடன் தங்கள் குழுக்கள் செயல்படும் விதத்தில் நிறுவனங்கள் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தலாம் என்பதைக் கண்டறியுங்கள்.

Uber for Business ஐ ஒரு நிறுவனம் வணிகத்திற்காக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்

உலகெங்கிலும் உள்ள தொலைதூர ஊழியர்களுக்கு மதிப்புமிக்க மேலதிகச் சலுகைகளை வழங்குவதற்காக உணவுத் திட்டங்களை உருவாக்க, Uber for Business ஐ BetterHelp எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Uber for Business மூலம் உங்கள் குழுவை நிர்வகியுங்கள்

உங்கள் ஊழியர்களுக்கு எவ்விதத்தில் வெகுமதி அளிக்க நீங்கள் தேர்வுசெய்தாலும், நாங்கள் உங்களுக்கு ஆதரவை வழங்குவோம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو