சிறந்த உணவை வழங்குவதன் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் கார்ப்பரேட் உணவுடன் உபசரிக்கவும். அலுவலகத்தில், தொலைதூரப் பணியாளர்களுக்கு உணவை வழங்க விரும்பினாலும் சரி அல்லது வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கு உணவை வழங்க விரும்பினாலும் சரி, உங்கள் வணிகத்திற்குத் தனிப்பயனாக்கக்கூடிய உணவு டெலிவரி செயல்முறையை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
வணிக உணவு எந்த சந்தர்ப்பத்திற்கும் சிறந்தது
உணவை வழங்குதல் என்பது பணியாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
அலுவலகத்தில் உணவை வழங்குதல்
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவை வழங்குங்கள். பட்ஜெட் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு சுவையான உணவைத் தேர்ந்தெடுக்க பணியாளர்களை அனுமதிக்கவும்.
வேலை நேரத்திற்குப் பிறகு உணவை வழங்குதல்
உங்கள் பின்னிரவு நேரப் பணியாளர்களுக்குப் பிடித்தமான உணவுகளை வழங்கி அவர்களை ஊக்கத்துடன் வைத்திருங்கள். உணவுத் திட்டத்தின் மூலம் நேரம், நாள், பட்ஜெட் மற்றும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அமையுங்கள் அல்லது பணியாளர்களுக்கு வவுச்சர்களை வழங்குங்கள்.
வீட்டிற்கே சென்று உணவை வழங்குதல்
தொலைதூரப் பணியாளர்களுக்கு உதவித் தொகையை வழங்கிடுங்கள் அல்லது மெய்நிகர் நிகழ்வுப் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்க உணவு வவுச்சர்களை வழங்கிடுங்கள். இடம், நேரம் மற்றும் மேலும் பலவற்றின் அடிப்படையில் நீங்கள் விதிகளை அமைக்கலாம்.
பயணத்தின் போது உணவு வழங்குதல்
பயணத்தை மேற்கொள்ளும் விற்பனைக் குழுவாக இருந்தாலும் சரி அல்லது வாடிக்கையாளர் தளங்களில் பணிபுரியும் பணியா ளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்குச் சிறந்த உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் உணவுத் திட்டங்களை அமைக்கலாம்.
பணியாளருக்கு வெகுமதியாக உணவு
உங்கள் குழுவினர் Uber Eats ஆப்பில் உணவுகளை நேரடியாக பெற, ஒரு வவுச்சர் அல்லது Uber பரிசு அட்டையை* அனுப்புவதன் மூலம் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள்*.
அலுவலகத்தில் உணவை வழங்குதல்
தன்னியக்க அலுவலக உணவுத் திட்டத்துடன் குழு உணவின் தரத்தை உயர்த்தவும். தொடர்ச்சியான குழு ஆர்டர்களை அமைக்கவும், தன்னியக்க செக் அவுட்டைப் பயன்படுத்தவும், பணியாளர்களால் எளிதாகத் தனிப்பயனாக்க தினசரி நினைவூட்டல்களை அனுப்பவும்.
கொண்டாட்டத்திற்கான உணவு
புதிய குழு உறுப்பினரை வரவேற்பது, பணி ஆண்டு நிறைவை அங்கீகரிப்பது அல்லது விடுமுறை நாட்களைக் கொண்டாடுவது போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு பெட்டியில் பேக் செய்யப்பட்ட கேட்டரிங்கை ஏற்பாடு செய்யுங்கள். குழு ஆர்டர்கள் மூலம் அனைவரும் தங்களுக்குப் பிடித்த உணவைத் தேர்வுசெய்து, ஒன்றாகச் சேர்ந்து உண்டு மகிழலாம். எந்தவொரு கொண்டாட்டத்தையும் மறக்கமுடியாததாக மாற்ற Uber Eats உதவும்.
நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான உணவுகள்
நேரடி பங்கேற்பாளர்கள் அல்லது மெய்நிகர் நிகழ்வின் பங்கேற்பாளர்களாக இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களை ஊக்குவிப்பதற்காக வவுச்சர் மற்றும் பரிசு அட்டைகளை வழங்குங்கள்.
ஊக்கத்தொகையாக உணவை வழங்குதல்
சிறந்த விற்பனை வாய்ப்புள்ள நபர்களுக்கு வவுச்சர்களை அனுப்புவதன் மூலம் மதிய உணவுக்கான செலவை ஈடுசெய்யலாம். உரையாடலைத் தொடங்க உணவு எப்போதும் உதவுகிறது.
வெகுமதியாக உணவை வழங்குதல்
சுவையான விருந்துகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு வழங்கி அவர்களின் வணிகத்திற்கான உங்கள் பாராட்டுகளை வவுச்சர் அல்லது Uber Eats பரிசு அட்டை* மூலம் வெளிப்படுத்திடுங்கள்.
பல வழிகளில் உணவை வழங்குவதற்கான கட்டுப்பாட்டை ஒரே தளம் உங்களுக்கு வழங்குகிறது
நீங்கள் பணியாளர்களுக்கு மாதாந்திர உணவு உதவித் தொகையை வழங்க விரும்பினாலும் சரி அல்லது ஒருமுறை உணவிற்கான செலவை வழங்க விரும ்பினாலும் சரி, எங்களின் வசதியான தீர்வுகள் அந்தச் செலவுகளை ஈடுசெய்ய உங்களுக்கு உதவும்.
ஆரம்பம் முதல் இறுதி வரை தடையற்ற ஆர்டர் அனுபவம்
உலகளாவிய உணவகத் தேர்வு
உலகம் முழுவதும் Uber Eats-இல் கிடைக்கும் 825,000-க்கும் மேற்பட்ட மெர்ச்சன்ட் பார்ட்னர்களில் உங்கள் நகரத்தில் கிடைப்பதிலிருந்து தேர் வு செய்யுங்கள்.
பல்வேறு வகையான உணவு விருப்பங்கள்
சைவ உணவுகள், க்ளுட்டன் இல்லாத உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் மற்றும் உணவு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யுங்கள்.
வசதியான தேடல் வடிப்பான்கள்
உங்களுக்குத் தேவையானதைத் துல்லியமாகக் கண்டறிய, உணவு வகைகள், டெலிவரி நேரம், தரமதிப்பீடு, விலை மற்றும் மேலும் பலவற்றின் அடிப்படையில் வடிகட்டுங்கள்.
குழுவாக ஆர்டர் செய்தல்
தனிப்பட்ட பணியாளர்களை தங்கள் பொரு ட்களைப்பகிரப்படும் குழு ஆர்டர்களில்சேர்க்க அனுமதிப்பதன் மூலம் குழுவிற்கான உணவு ஆர்டர்களை மிகவும் திறம்பட ஒழுங்கமைக்கலாம்.
முன்கூட்டியே திட்டமிடல்
ஒரு முக்கியமான நிகழ்வு அல்லது சந்திப்புக்கான ஆர்டரை முன்கூட்டியே திட்டமிடுங்கள், நீங்கள் ஆர்டர் செய்யும் போது மூடப்பட்டிருக்கும் உணவகங்களிலிருந்தும் கூட.
தானியங்கு செக்-அவுட்
தானியங்கு செக்-அவுட் அம்சத்தை தேர்ந்தெடுங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உங்களுக்காக நாங்கள் ஆர்டர் செய்வோம். குழுவாக ஆர்டர் செய்தலில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கார்ட்கள்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களை உருவாக்கலாம் அல்லது அதில் பங்கேற்கலாம், மேலும் Uber Eats ஆப் அல்லது தளத்தில் அனைத்துக் கார்ட்களையும் ஒரே இடத்திலிருந்து எளிதாகப் பார்க்கலாம்.