பயணம் மற்றும் உணவு வவுச்சர்கள் மூலம் எந்தவொரு அனுபவத்தையும் மேம்படுத்துங்கள்
வவுச்சர்கள் மூலம் உங்கள் வணிகத்தை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுங்கள்
வவுச்சர்கள் என்பது Uber உடன் பயணம் செய்வதற்கும் Uber Eats மூலம் ஆர்டர் செய்வதற்கும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பணம் செலுத்த நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு தீர்வாகும். வணிகத்திற்கான Uber டாஷ்போர்டில் இருந்தே வவுச்சர் பிரச்சாரங்களை எளிதாக உருவாக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.
ந ிகழ்வுகளை மறக்க முடியாததாக ஆக்குங்கள்
நேரடி அல்லது மெய்நிகர் நிகழ்வுகளில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை உணவு அல்லது விடுமுறை விருந்துகள், வாடிக்கையாளர்கள் சந்திப்புகள் இன்னும் பலவற்றை அளிப்பதன் மூலம் ஊக்குவிக்கலாம்.
பணியாளர் ஈடுபாட்டை அதிகரியுங்கள்
மாதாந்திர பயணம் மற்றும் உணவு கிரெடிட்களை வழங்குவதன் மூலம் உங்கள் அக்கறையைக் காட்டலாம் அல்லது நேர்காணலுக்கான பயணங்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் உங்கள் போட்டியாளர்கள் மத்தியில் நீங்கள் தனித்து நிற்கலாம்.
வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துங்கள்
பயணங்களில் சலுகை வழங்குதல், பயணிகளுக்கு கூடுதல் தொகைகள் வழங்குவதன் மூலம் பயணத்தேவையை அதிகரித்தல், மற்றும் பல அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மீண்டும் வரும்படி செய்யுங்கள்.
எளிதாக தொடங்கலாம்
படி 1: செயல்படுத்தவும்
வவுச்சர் பிரச்சாரங்களை உங்கள் Uber for Business டேஷ்போர்டில்-இல் இயக்கி, நிர்வாக அணுகலைப் பெற நபர்களை நியமிக்கவும்.
படி 2: உருவாக்கவும்
டாலர் தொகைகள், இடங்கள் மற்றும் தேதி மற்றும் நேர சாளரங்கள் உட்பட உங்கள் விருப்பத்தின் அளவுருக்களைக் கொண்ட ஒன்று அல்லது மொத்த வவுச்சர்களையும் தனிப்பயனாக்கவும்.
படி 3: விநியோகிக்கவும்
மின்னஞ்சல், உரைச் செய்தி, URL மூலம் அல்லது Uber ஆப்பில் இருந்து நேரடியாக வவுச்சர்களை அனுப்பிடுங்கள். பின்னர் விருந்தினர்களுக்குத் தேவையான வவுச் சர்களை ரிடீம் செய்ய அவர்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பிடுங்கள்.
படி 4: ரிடீம்
வாடிக்கையாளர்கள் அல்லது ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட Uber சுயவிவரத்தில் வவுச்சர்களைச் சேர்க்கலாம், செக் அவுட்டின் போது வவுச்சர்களை அதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வவுச்சர்களை ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்கவும்
எங்களின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு பயன்படுத்த எளிதான அம்சங்களைக் கொண்டுள்ளதால் இதில் வவுச்சர்களை அமைப்பதையும் விநியோகிப்பதையும் முன்பை விட எளிதாகச் செய்யலாம். வாடிக்கையாளர்கள் இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.
வவுச்சர்களைத் தடையின்றி அனுப்புங்கள்
டேஷ்போர்டிலிருந்து நேரடியாக உங்கள் ஊழியர்களுக்குப் பயணம் அல்லது உணவு வவுச்சர்களை வழங்குவதன் மூலம் உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
உங்கள் தகவல்தொடர்புகளை திட்டமிடுங்கள்
உங்கள் வவுச்சர்களை அனுப்ப வேண்டிய தேதியை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் உங்கள் பிரச்சாரங்களை முன்கூட்டியே தயார் செய்யலாம்.
பல பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தவும்
அறிக்கையளிப்பதையும் செலவு கணக்குகளையும் எளிதாக்குவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட் கார்டுகளின் வவுச்சர் பிரச்சாரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
நிகழ்வுப் பங்கேற்பாளர்களை அதிகரித்திடுங்கள்
உணவு மற்றும் பயணங்களுக்கான வவுச்சர்களை வழங்குவதன் மூலம் மெய்நிகர் மற்றும் நேரில் நடக்கும் நிகழ்வுகளுக்கான கூடுதல் தொகைகளை உருவாக்கவும்.
உங்களுக்குப் பொருத்தமானதைத் தனிப்பயனாக்குங்கள்
இன்னும் தனித்துவமான, சிறப்பான, மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பை வழங்கிட உங்கள் நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்தி வவுச்சர்களை அனுப்புங்கள்.
பெறுநர்களை எளிதாக அகற்றலாம்
உங்கள் பங்கேற்பாளர் பட்டியல் மாறியிருந்தால், மற்றப் பங்கேற்பாளர்களின் மகிழ்ச்சியைப் பாதிக்காத வகையில், தனிப்பட்ட பெறுநர்களை பிரச்சார த்திலிருந்து அகற்றலாம்.
வவுச்சர்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்கின்றன
தனிப்பயனாக்குவது எளிதானது
தேதி மற்றும் நேரம் போன்ற அளவுருக்களை அமைப்பதன் மூலம் வவுச்சர்கள் எவ்வாறு ரிடீம் செய்யப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்துங்கள். மேலும், உங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பயணங்கள் மற்றும் உணவுகளுக்கு மட்டுமே பணம் செலுத்துவீர்கள், அதனால் நீங்கள் ஒருபோதும் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மாற்றியமைக்க எளிதானது
வீட்டில் இருந்து பணிபுரிபவர்களாக இருந்தாலும் அல்லது நாட்டின் எந்த பகுதியில் பணிபுரியும் பணியாளர்களாக இருந்தாலும், வவுச்சர்கள் பயனர்களைச் சென்றடையும். வவுச்சரின் மதிப்பு வகையை உள்ளிட்டால் போதும், அதை நாணயத்திற்கு மாற்றுவதில் உள்ள சிக்கலை Uber கையாளும்.
எளிதாக அனுப்பலாம்
வவுச்சர்களை உடனுக்குடன் உருவாக்கி மின்னஞ்சல், உரைச்செய்தி மற்றும் பிற வழிமுறைகள் மூலம் விநியோகிக்கவும். பின்னர் Uber for Business டேஷ்போர்டில் இருந்து வவுச்சர்களின் பயன்பாட்டு நிலையைப் கண்காணிக்கவும்.
வாடிக்கையாளர்களுக்கு $100 மதிப்புள்ள Uber Eats கிரெடிட்டை வழங்கிய பிறகு, கேலக்ஸி மொபைல் சாதன விற்பனையில் 20% அதிகரித்துள்ளதாக Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்கள் வணிகத்தை மேம்படுத்தத் தொடங்குங்கள்
வவுச்சர்களுக்கான மிகவும் பிரபலமான ஆதாரவளங்கள்
பணியாளர் ஈடுபாட்டை வலுப்படுத்துதல்
பணியாளர்கள் குழுவைப் பாராட்டும் விதமாகவும் அவர்கள் மன உறுதியை அதிகரிக்கும் விதமாகவும் பணியாளர்களுக்கான உணவு வவுச்சர்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பாருங்கள்.
மெய்நிகர் நிகழ்வின் பங்கேற்பாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருத்தல்
அதிகமான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால், மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்பவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க வவுச்சர்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆராயுங்கள்.
சிறந்த நிறுவனங்களில் Uber Eats கிரெடிட் வழங்கப்படுதல்
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பில் இருக்க, Coca-Cola போன்ற நிறுவனங்கள் Uber Eats கிரெடிட்டை எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பாருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- வவுச்சர்களுக்கும் பரிசு அட்டைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
வவுச்சர்கள் மூலம், உங்கள் குழு அல்லது வாடிக்கையாளர்களுக்கு Uber கிரெடிட்டை விநியோகிக்கும் அதே நேரத்தில் அவை பயன்படுத்தப்படும் விதத்திலும் நீங்கள் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளலாம். காலாவதி தேதிகள், இடக் கட்டுப்பாடுகள் மற்றும் இது போன்ற பல அளவுருக்களால், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வேலை நேரத்திற்குள் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே பயணங்கள் அல்லது உணவை வாங்குவதை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
வழங்கப்பட்ட Uber கிரெடிட் தொகையை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை அளிப்பதால், பரிசு அட்டைகள் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுதந்திரமான ஒரு அனுபவத்தை வழங்குகின்றன. நீங்கள் பரிசு அட்டைகளை இங்கேவாங்கலாம்.
- வவுச்சர்களை வாங்குவதற்கு நான் எவ்வாறு பணம் செலுத்த வேண்டும்?
Down Small உங்கள் பணியாளர் அல்லது வாடிக்கையாளர், வவுச்சரைப் பயணம் அல்லது உணவு ஆர்டர்களில் பயன்படுத்த ரிடீம் செய்யும் பொழுது மட்டுமே நீங்கள் வாங்கிய வவுச்சர்களுக்குப் பணம் செலுத்துவீர்கள். அந்த நேரத்தில், பயனர் செலவழித்த தொகைக்கு உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும். உதாரணத்திற்கு, நீங்கள் $100 ஐ வவுச்சர்களில் விநியோகித்து அதில் $50 மட்டும் பயன்படுத்தப்பட்டு இருந்தால், நீங்கள் $50 ஐச் செலுத்துவீர்கள்.
பரிசு அட்டைகளுடன், மற்றொருபுறம், நீங்கள் முழு கிரெடிட் தொகையையும் முன்கூட்டியே வாங்குவீர்கள்.
- வணிகங்கள் பொதுவாக வவுச்சர்கள் மற்றும் பரிசு அட்டைகளை எப்படிப் பயன்படுத்துகின்றன?
Down Small நிறுவனங்கள் வவுச்சர்களை ஊழியர்களுக்கு மன உறுதியை அதிகரிக்கும் பூஸ்டராகவும், மெய்நிகர் அல்லது நேரில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்பவர்கள ுக்கான உணவை வாங்க இயலக்கூடிய ஒரு வழியாகவும், அவர்களின் வணிகம் சார்ந்த பயணங்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஒரு அமைப்பாகவும் அல்லது வெகுமதி திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்குவதற்கும் பயன்படுத்துகின்றன.
பரிசு அட்டைகள் நிறுவனங்களால் ஆண்டு இறுதி அல்லது ஊழியர்களுக்கான விடுமுறை பரிசுகள், கார்ப்பரேட் பரிசுகளை வழங்க அல்லது வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூற, மற்றும் பரிசுகள் வழங்க அல்லது அன்பளிப்புகளைத் தர அடிக்கடி வாங்கப்படுகின்றன.
- எனது பயனர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தால் வவுச்சர் திட்டத்தை எவ்வாறு அமைப்பது?
Down Small வவுச்சர் தொகையானது நிறுவனம் பயன்படுத்தும் நாணயத்தின் அடிப்படையில் நிறுவனத்திடம் வசூலிக்கப்படும், பயணம் அல்லது ஆர்டரின் அடிப்படையில் அல்ல. வவுச்சரை உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக நீங்கள் நாணயத்தை மாற்றலாம். இதன் பொருள் வவுச்சரின் மதிப்பு குறிப்பிட்ட நாணயத்திற்கு அமைக்கப்படும் என்பதாகும், ஆனால் பயனர்கள் அதை எப்போதும் தங்கள் நாட்டின் நாணயத்தில் (அல்லது அவர்கள் பயணம் அல்லது உணவை ஆர்டர் செய்யும் இடத்தில் பயன்படுத்தப்படும் நாணயத்தில்) பார்ப்பார்கள்.
- வவுச்சர்களை எப்படி அனுப்புவது?
Down Small நீங்கள் தேர்ந்தெடுத்த அளவுருக்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஒரே ஒரு வவுச்சரையோ அல்லது மொத்தமாக பல வவுச்சர்களையோ உருவாக்கியதும் அவற்றை மின்னஞ்சல், உரைச் செய்தி, URL மூலமாகவோ அல்லது Uber ஆப்பில் உள்ளீடு செய்வதன் மூலமாகவோ விநியோகிக்கலாம். தேவைக்கேற்ப பெறுநர்களுக்கு ரிடீம் குறித்த நினைவூட்டல்களையும் அனுப்பலாம்.
- வவுச்சர்களை மக்கள் எவ்வாறு கிளெய்ம் செய்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள்?
Down Small ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் தங்களின் வவுச்சரை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது URL மூலமாகவோ அல்லது Uber ஆப்பில் உள்ளீடு செய்வதன் மூலமாகவோ பெறுவார்கள். நிறுவனம் அனுப்பிய இணைப்பை அவர்கள் கிளிக் செய்தவுடன் அவர்களால் வவுச்சரை தங்களின் தனிப்பட்ட Uber சுயவிவரத்தில் சேர்க்க முடியும். செக் அவுட்டின் போது வவுச்சர் பயன்படுத்தப்படும்.
- நான் ஏற்கெனவே வாடிக்கையாளராக இருந்தால் எப்படி உதவி பெறுவது?
Down Small