Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

நகர்த்துவதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தளம்

Uber for Business உடன், உங்கள் நிறுவனம் இயங்குகிற மற்றும் அதன் மக்களுக்கு உணவளிக்கிற வழியை மாற்றுங்கள்.

பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கான ஒற்றைத் தளம்

 • வணிகப் பயணம்

  ஒரே ஒரு தட்டலின் மூலம், உங்கள் குழுவினர் உலகெங்கிலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் செய்யக் கோரிக்கை விடுக்கலாம். அனுமதிகளை அமைப்பது மற்றும் செலவினங்களைக் கண்காணிப்பது ஆகியவற்றை நாங்கள் எளிதாக்குகிறோம்.

 • உணவு டெலிவரி

  நீங்கள் பட்ஜெட்களையும் கொள்கைகளையும் கட்டுப்படுத்துகின்ற அதே நேரத்தில், 780,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்யப் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் அனுமதியுங்கள்.

 • கம்யூட் திட்டங்கள்

  அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கான பயணங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலம் உங்கள் பணியாளர்கள் வேலைக்கு வர உதவுங்கள். நாங்கள் புதிய பாதுகாப்புத் தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் செலவுத்தொகையில் வரம்புகளை அமைப்பது எளிது.

 • வாடிக்கையாளர் பயணங்கள்

  வாடிக்கையாளர்களும் விருந்தினர்களும் செல்ல வேண்டிய இடத்தை அடைய வவுச்சர்களை வழங்குங்கள். அல்லது சென்ட்ரல் டேஷ்போர்டு வழியாக, அவர்களுக்கான பயணங்களுக்குக் கோரிக்கை விடுங்கள்.

 • உள்ளூர் டெலிவரி

  Uber மூலம் தேவைக்கேற்றபடி, உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உள்ளூர் டெலிவரிகளைக் கோருங்கள். பயணத்தைக் கோருவதைப்போல இது எளிதானது மற்றும் விரைவானது.

 • வாடிக்கையாளர் கையகப்படுத்துதல்

  வவுச்சர்கள், உங்கள் கடைக்கு வாடிக்கையாளர் வரவைத் தூண்டுவதற்கு உதவுகிற ஒரு சிறந்த விளம்பரக் கருவியாகும். வாடிக்கையாளர் பாராட்டைக் காட்டவும் இதைப் பயன்படுத்தலாம்.

1/6

Uber for Business தளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாருங்கள்

உங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் கருவிகள்

மையத்துடன் பயணங்களைத் திட்டமிட்டு அனுப்புங்கள்

வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பயணங்களுக்குக் கோரிக்கை விடுக்க, மைய டேஷ்போர்டைப் பயன்படுத்துங்கள், அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டால்' கூட.

வவுச்சர்கள் மூலம் பயணங்களையும் உணவையும் ஈடு செய்யுங்கள்

வவுச்சர்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அணுகுங்கள், உங்கள் பணியாளர்களுடைய மன உறுதியை மேம்படுத்துங்கள். இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி அவர்கள் உணவுகளைப் பெறலாம், பயணங்களை மேற்கொள்ளலாம்.

எங்கள் டேஷ்போர்டில் திட்டங்களை உருவாக்குங்கள்

உங்கள் குழுவினரை உங்கள் தொழில் கணக்கில் இணைப்பதன்மூலம், தனிப்பயனாக்கப்பட்ட தொழில் பயணம், உணவு மற்றும் கம்யூட் திட்டங்களில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

எங்கள் தளத்துடன் இணைந்து வளர்ந்துவரும் தொழில் நிறுவனங்களைப் பாருங்கள்.

Uber-இன் API உடன் ஒருங்கிணைந்ததன் மூலம், Ryder வாடிக்கையாளர்களுக்காக 100,000-க்கும் மேற்பட்ட பயணங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது, இதனால், அந்த நிறுவனத்தால் பணியாளர்களின் நேரத்தையும் வளங்களையும் சிறப்பாக ஒதுக்கீடு செய்ய இயன்றது.

Chase Center-இல் ரசிகர்களின் அனுபவத்தை Elevate செய்வதற்கான புதுமையான வழிகளைக் கண்டறிய, Uber for Business உடன் The Golden State Warriors இணைந்தது.

Twenty Four Seven Hotels, பயணங்களுக்குக் கோரிக்கை விடுப்பதற்குத் தன்னுடைய வழக்கமான ஷட்டில் சேவையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக Uber for Business-ஐப் பயன்படுத்தியது, தங்கள் விருந்தினர்களிடம் நிலைத்திருக்கும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது.

உங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிப்பதற்கான மேம்பட்ட அம்சங்கள்

உங்கள் திட்டங்களைத் தனிப்பயனாக்குங்கள்

நாள், நேரம், இருப்பிடம் மற்றும் செலவுத்தொகையின் அடிப்படையில் பயணம் மற்றும் உணவு வரம்புகளை அமையுங்கள். உங்கள் குழுவினர் நிறுவனத்தின் ஒரே கணக்கில் அல்லது தங்களுடைய சொந்தத் தனிப்பட்ட கார்டுகளில் கட்டணம் விதிக்கவும் நீங்கள் அனுமதிக்கலாம்.

செலவிடல் நிர்வாகத்தைத் தன்னியக்கமாக்கல்

SAP Concur போன்ற முன்னணிச் செலவிடல் நிர்வாகச் சேவை மென்பொருள் வழங்குநர்களுடன் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம், எனவே செலவுகளைத் தானாகவே செயலாக்க இயலும். பணியாளர்கள் ரசீதுகளைத் தேடிச் சிரமப்படும் பிரச்சனை இனி இல்லை.

ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுக

உங்கள் குழுவின் செலவழித்தல் மற்றும் பயன்பாடு பற்றிய இணையற்ற காட்சியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம், எனவே நீங்கள் உங்கள் திட்டத்தை நன்றாகத் திருத்தலாம் மற்றும் உங்கள் பாட்டம்லைன் வருவாயை மேம்படுத்தலாம்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو